அமைத்திக்கான இளம் தூதராகிறார் மலாலா !

1 minute read
பெண் குழந்தை களின் கல்விக் காகப் போராடி, ஓர் புரட்சியை விதைத்து மரணத் தையும் எதிர்த்து மீண்டு வந்தவர் மலாலா யூசுப்சாய். 
அமைத்திக்கான இளம் தூதராகிறார் மலாலா !
ஐநா-வின் அமைதிக்கான தூதராகப் பதவி யேற்கிறார் மலாலா. ஐநா-வின் இளம் தூதர் என்ற பெருமையும் இவரையேச் சார்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் தனது 11-வது வயதிலேயே பெண் கல்வி குறித்து பல மேடை களிலும் பிரசாரம் செய்தவர். 

தொடர்ந்து பள்ளி களையும், கல்லூரி களையும் தாக்கி வந்த தலிபான் களை எதிர்த்து மேடை பிரசாரமும் கட்டுரை களும் எழுதி தனது எதிர்ப்பை பதிவு செய்து வந்தார். 

தலிபான்களின் கடும் கண்டனங் களுக்கு ஆளான மலாலா, 2012-ம் ஆண்டு தீவிரவாதி களால் பள்ளி செல்லும் வழியில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்குப் போராடி, ஒரு வருட கால சிகிச்சை க்குப் பின்னர் மீண்டு வந்தார்.

பல எதிர்ப்பு களும் கொலை மிரட்டல் களும் தொடர்ந்து வந்தாலும் பெண் கல்வியை வலியுறுத்தி இன்றும் போராடி வருகிறார் மலாலா. 
இந்த இளம் பெண்ணின் சாதனையைப் பாராட்டி 2014-ம் ஆண்டு அமைதிக் கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப் பட்டது. இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பெருமைக்கும் உரிய வரானார்.

தற்போது மலாலாவை மேலும் பெருமைப் படுத்தும் வகையில் ஐநா, அமைதிக் கான இளம் தூதராக அவரை நியமிக்க விருக்கிறது. 

தற்போது பிரிட்டனில் கல்வி பயின்று வரும் மலாலா, வளரும் உலக நாடுகளில் பெண் கல்வியை வளர்க்க நிதி திரட்டி உதவி வருகிறார்
Tags:
Today | 25, March 2025
Privacy and cookie settings