அம்பத்தூரில் காதலை முறித்துக் கொண்ட இளம் பெண்ணை உயிருடன் தீ வைத்து எரித்த இளைஞர் தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
அம்பத்தூர் புதூர் பானு நகரை சேர்ந்தவர் பார்த்திபன் என்ற 21 வயது இளைஞர் அண்ணா நகரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
பருந்து மனிதனுக்கு தரும் பாடம் என்ன?
அதே துணிக் கடையில் அம்பத்தூர் லெனின் நகரை சேர்ந்த மைதிலி 20 வயது இளம் பெண்ணும் வேலை பார்த்தார்.
ஒரே கடையில் வேலை பார்த்த போது போது அவர்களு க்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடை வில் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டு களுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
கால் முறிந்ததால் விரிசல்
இந்நிலை யில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பார்த்திபனுக்கு விபத்து ஏற்பட்டது. இதில் அவரது கால் முறிந்தது.
இதனால் வீட்டில் பார்த்திபன் ஓய்வெடு த்தால் இருவரு க்கும் இடை யிலான சந்திப்பு தடைபட்டு காதலில் விரிசல் விழுந் துள்ளது.
காதலை தொடர மறுப்பு
இந்த நிலையில் கடந்த 1 வாரத்துக்கு முன்பு பார்த்திபன் மைதிலியை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் பேச மைதிலி மறுத்தார்.
அதன் பிறகு பார்த்திபன் தினமும் மைதிலியை சந்தித்து தனது காதலை ஏற்றுக் கொள்ளு மாறு கட்டாயப் படுத்தினார். ஆனால் மைதிலி மறுத்ததாக தெரிகிறது.
தீக்குளிப்பேன் என மிரட்டல்
இந்த நிலையில் நேற்று இரவு திருமுல்லை வாயல் பஸ் நிறுத்த த்தில் இறங்கிய அவர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டி ருந்தார்.
அப்போது பார்த்திபன், மைதிலியை வழி மறித்தார். தனது காதலை ஏற்றுக் கொள்ளா விட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என கூறி யுள்ளார்.
உயிருடன் தீ வைப்பு
ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் மைதிலி சென்றதாக தெரிகிறது. இதனால் கோப மடைந்த பார்த்திபன் மைதிலி மீது மண்ணெண் ணெய்யை ஊற்றி உயிருடன் அவரை எரித்தார்.
இதனால் அலறி துடித்தார் மைதிலி. இதை யடுத்து தானும் மண்ணெ ண்ணெய் ஊற்றி தீக்குளித்தார் பார்த்திபன்.
இருவரும் பலி இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சேர்ர்த்தனர்.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி இருவரும் இன்று காலை உயிரி ழந்தனர். இந்த சம்பவம் இருவரது குடும்பத் திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.