செல்போன் சார்ஜில் இருக்கும் போது பயன்படுத்திய இளைஞர் பலி !

சென்னையில், செல்போனுக்கு சார்ஜ் போட்ட நிலையில் பாட்டுக் கேட்ட இளைஞர், மின்சாரம் தாக்கி உயிரிழிந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
செல்போன் சார்ஜில் இருக்கும் போது பயன்படுத்திய இளைஞர் பலி !
பில்லோ ரியாங் என்பவர் மணிப்பூரைச் சேர்ந்தவர். இவர், அடையாறில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பணிபுரிபவர். 

கடந்த ஞாயிற்றுக் கிழமை, வீட்டில் இறந்த நிலையில் கிடந்ததை நண்பர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து, காவல் துறைக்கு தகவல் அளித்தனர். 

செல்போனு க்கு சார்ஜ் போட்டுக் கொண்டே, காதில் ஹெட் போன் போட்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த போது, ஹெட் போன் வழியாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்பது பின்னர் தெரிய வந்துள்ளது. 

இவரின் இறப்புக்கு, வேறேதும் காரணம் இருக்குமா என்றும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஹெட்போன் வழியாக மின்சாரம் பாய்ந்ததில், காது நரம்பு வெடித்து, ரத்தம் கசிந்து உயிரிழந்த பில்லோ ரியாங்கின் புகைப் படங்கள், இப்போது சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 
செல்போன் களை நீண்ட நேரம் சார்ஜ் போட்டு, அருகில் தூங்குவது ஆபத்தாகும். நீண்ட நேரம் சார்ஜ் செய்வதால், சில பேட்டரிகள் சூடேறி வெடிக்க வாய்ப் புள்ளது. 

குறைந்த சார்ஜ் இருக்கும் போது செல்போன் பயன் படுத்துவதும் ஆபத்து தான் என்று எச்சரிக் கின்றனர் நிபுணர்கள். உஷார் மக்களே!
Tags:
Privacy and cookie settings