திருமங்கலம் - நேரு பூங்கா இடையே நாளை முதல் இயக்கப் படவுள்ள மெட்ரோ ரயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப் படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கப் பட்டன.
முதல் கட்டமாக கோயம் பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை தொடங்கி கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலை யில் இரண்டாவது கட்டமாக சின்னமலை- கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து 3-ஆவது கட்டமாக திருமங்கலத் திலிருந்து நேரு பூங்கா வரை நாளை முதல் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்.
மது அருந்தி விட்டு பயணம்
மது அருந்தி விட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பவர் களுக்கு, மெட்ரோ ரயில் சொத்துகளுக்கு கேடு விளைப்பவர் களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.
ஆபத்தான பொருட் களை (பட்டாசு, வெடி பொருள்கள்) கொண்டு செல்பவர் களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்ட னையும் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக் கப்படும்.
போஸ்டர் ஒட்ட கூடாது
மெட்ரோ ரயில் சொத்து களில் போஸ்டர் ஒட்டுவது, எழுதுவது, வரைவது ஆகிய வற்றுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை ரூ. 1,000 அபராதம் விதிக்கப் படும்.
மெட்ரோ ரயில் கூரை மீது பயணம் மேற்கொள்ள முயன்றால் ஒரு மாதம் சிறைத் தண்டனை, ரூ. 50 அபராதம் விதிக்கப் படும்.
தண்ட வாளங்களில் நடந்தால்...
மெட்ரோ ரயில் தண்ட வாளங்களில் நடந்தால் 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ. 500 அபராதம் விதிக்கப் படும்.
ஓடும் ரயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
ரயிலில் உள்ள தொலைத் தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத் தினாலோ, அவசரகால பொத்தானை தவறாகப் பயன்படுத் தினாலோ ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் பெறப்படும்.
நோ மார்க்கெட்டிங்
உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர் களுக்கு ரூ.500 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ரயிலை விபத்துக் குள்ளாக்குவது,
கொலை முயற்சி, சக பயணிகளைத் தாக்கி குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மெட்ரோ ரெயில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப் பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை என்று அறிவிக்கப் பட்டுள்ளது.