100 கிராம் தயிர் ரூ.972? ரயில்வே ஊழல் !

மத்திய ரயில்வேயில் இயங்கும் சமையல் பிரிவு சுத்திகரிக் கப்பட்ட 1 லிட்டர் சமையல் எண்ணெயை ரூ.1241-க்கும், 100 கிராம் தயிரை ரூ.972க்கும் வாங்கியுள்ளது கேட்போரை அதிர்ச்சிக் குள்ளாக்கி யுள்ளது.
100 கிராம் தயிர் ரூ.972? ரயில்வே ஊழல் !
இது போல ஏராளமான சமையல் பொருட் களை அவற்றின் உச்ச கட்ட விலையை விடப் பல மடங்கு அதிகமாக வாங்கப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அவல் பிரியாணி செய்முறை !
 இது தொடர்பான விவரங்கள் சமூக ஆர்வலர் ஒருவர் வெளியிட்ட ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது. இது குறித்து, பேசிய அஜய் போஸ் என்ற சமூக ஆர்வலர் , ”ரயில்வே சமையல் பிரிவு, 

என்னென்ன சமையல் பொருட்களை எவ்வளவு தொகைக்கு வாங்கி யுள்ளது என்று ஜூலை 2016-ல் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டிருந்தேன்.

ஆனால், ரயில்வே நிர்வாகம் எனக்கு பதிலளிக்க மறுத்து விட்டது. இதனை தொடர்ந்து நான் மேல் முறையீடு செய்தேன்.

மேல் முறையீட்டு அதிகாரி 15 நாட்களு க்குள் அனைத்து தகவல் களையும் எனக்கு தெரிவிக்க உத்தர விட்டிருந்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் எந்த பதிலும் வரவில்லை.
இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக முறையீடு செய்தேன். அப்போது ரயில்வே நிர்வாகம் எனக்கு அளித்த தகவல்கள் என்னை பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கி யது.
ஹைதராபாத் பிரியாணி செய்முறை !
அதில் ரூ.25 மதிப்புள்ள 100 கிராம் தயிர், ரூ.972-க்கு வாங்கப் பட்டதாக வும், அதே போல அனைத்து சமையல் பொருட்களுமே விதிக்கப் பட்டிருந்த விலையை விட பல மடங்கு அதிகமாக வாங்கப் பட்டிருந்தது.

அந்த சமையல் பொருட்கள் அனைத்தும் ரயில்வே கேட்டரிங் துறையால் வாங்கப் பட்டு சமையல் கிடங்கு, ஐஆர்சிடிசி மக்கள் உணவகங்கள், ரயில்வே சமையல் அறைக ளுக்கு விநியோகம் செய்யப்பட் டுள்ளன.

எலும்புத் துண்டுடன் கூடிய சிக்கன், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு உள்ளிட்டவையும் மிக அதிக விலை கொடுத்து வாங்கப் பட்டுள்ளன. 
இதில் கை துடைக்கும் டிஷ்யூ பேப்பரும் அடக்கம். மார்ச் 2016-ல் 58 லிட்டர் சுத்திகரிக்கப் பட்ட சமையல் எண்ணெய் ரூ.72,034-க்கும் அதாவது (1 லி. ரூ.1241),
டாட்டா உப்பு 150 பாக்கெட்டு களை ரூ.2,670க்கும் அதாவது (1 பாக்கெட்டின் விலை ரூ.49, உண்மை யான விலை ரூ.15) வாங்கி யுள்ளனர்.

அதே போல, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர் பானங்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ.59 என்ற வீதம் வாங்கப் பட்டுள்ளன.

ரயில்வே அறிக்கை யில், ரயில் உணவகங்கள் மற்றும் கடைகள் நஷ்டத்தில் இயங்கு வதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆனால் ஆர்டிஐ மூலம் உண்மை யான நிலையும், நஷ்டத்து க்கான காரணமும் தெரிய வந்துள்ளது” என்கிறார் சமூக ஆர்வலர் அஜய் போஸ்.

இது குறித்து, விளக்கம் அளித்த ரயில்வே கோட்ட மேலாளர் ரவிந்திர கோயல், ”இது தட்டச்சுப் பிழையாக தான் இருக்க வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தப்ப டும் ” என்றார்.
விலை உயர்வு குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் பேசும் போது, இது ஆவணங் களில் மட்டும் ஏற்பட்ட பிழை இல்லை, ரயில்வே நஷ்டத்தில் இயங்கு வதற்கு இத்தகைய ஊழல்களே காரணம்.
மரத்தடியில் விளையாடிய போது 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி !
இத்தகைய சம்பவங்கள் உரிய முறையில், விசாரி க்கப்பட வேண்டும். சம்பந்தப் பட்ட அதிகாரிகள் தண்டிக் கப்பட வேண்டும்” என்றார்.
Tags:
Privacy and cookie settings