பிளஸ் 2 தேர்வு முடிவுகள் செல்போனில் குறுந் தகவல் மூலம் தெரிவி க்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட் டையன் தெரிவித் துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (12.5.17) வெளி யாகிறது. தமிழகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதி யுள்ளனர்.
பொதுவாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அரசு இணைய தளங்களில் வெளியிடப் படுவது வழக்கம். இதனிடையே எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப் படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் இன்று செய்தியா ளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட் டையன், 'இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு களை மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப திட்ட மிடப்பட் டுள்ளதாக' கூறினார்.
தேர்வு முடிவுகள் வெளியான 10 நிமிடங் களில் குறுஞ் செய்தியில் மதிப்பெண் களை அறியலாம் எனவும் அவர் கூறினார். மேலும் சான்றி தழில் மாணவர்கள் பெயர் தமிழிலும் குறிப் பிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், “நீட் தேர்வுக்கு மாணவர் களை தயார் படுத்த திட்ட மிடப்பட் டுள்ளது. விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடி க்கை எடுக்கப் படும்” என்றும் அவர் தெரிவித்தார்.