39 வயதான இம்மானுவேல் மெக்ரானை தங்கள் நாட்டின் அதிபராகத் தேர்வு செய்துள்ளனர் பிரெஞ்சு மக்கள். அரசியல் அனுபவம் இல்லாமல்...
சுயேச்சையாகப் போட்டி யிட்ட மெக்ரானின் வெற்றி, பிரான்ஸ் வரலாற்றில் ஓர் மிகப்பெரிய ஆச்சர்யம். பிரான்ஸ் அதிபர் பிரான் கோயிஸ் ஹாலண்டேயின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது.
புதிய அதிபரைத் தேர்வு செய்வதற் கான தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் ஹாலண்டே போட்டியிட வில்லை. ஏப்ரல் 23-ல் நடந்த அதிபர் தேர்தலில் யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்க வில்லை.
அதிபர் தேர்தலில் 50 சதவிகி தத்தைப் பெற வில்லை எனில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர் களுக்கு இடையே மீண்டும் தேர்தல் நடைபெறும்.
அதன் அடிப்படை யில், முதல் இரண்டு இடங் களைப் பிடித்த நடுநிலை வகிக்கும் மெக்ரான் மற்றும் வலதுசாரி போட்டியாளர் மரின் லீ பென் ஆகியோ ருக்கு இடையே
இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு மே 7-ம் தேதி நடந்தது. இதில், மொத்த வாக்குகளில் 66.06 சதவிகிதம் பெற்று வெற்றி பெற்றிருக் கிறார் மெக்ரான்.
பிரான்சின் வடமேற்குப் பகுதியில் உள்ள அமின்ஸ் நகரில் பிறந்தவர் மெக்ரான். பள்ளியில் அறிவியல் படித்த மெக்ரான், பாரிஸ் பல்கலைக் கழகத்தில் தத்துவம் பயின்றார்.
பொது விவகாரங்கள் துறையில் முது நிலைப் பட்டம் பெற்றார். பிரான்ஸ் பொருளாதார அமைச்சக த்தில், இன்ஸ்பெக்டர் ஆஃப் ஃபைனான்ஸ் ஆகப் பணி யாற்றினார். பின்னர் நிதி முதலீட்டா ளராக உருவெடுத்தார்.
அரசியலைப் பொறுத்த வரை, தொடக்கத்தில் சோஷியலிஸ்ட் கட்சியில் உறுப்பின ராக இருந்தார். பிறகு, பொருளா தாரத் துறை அமைச்சராக நியமிக்கப் பட்டார்.
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி தன்னுடைய சொந்த ஊரில் `என் மார்ச்' என்ற அரசியல் அமைப்பை ஆரம்பித்தார்.
கட்சி தொடங்கிய இரண்டு மாதங்கள் கழித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
மக்களாட்சியில் மறு மலர்ச்சியை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் அதிபர் பதவிக்கான வேட்பாளராகத் தன்னை அறிவித்துக் கொண்டார்.
பிரான்ஸுக்கு உள்ள தடைகளைத் தகர்ப்போம், புது மறு மலர்ச்சியைக் காண்போம் என்று கூறி, தேர்தலில் நின்றார்.
அதிபர் ரேஸில் முன்னணியில் இருந்த மரின் லீ பென், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரான்ஸ் வெளியேறும் என்றார்.
ஆனால், ஐரோப்பிய யூனியனில் பிரான்ஸ் தொடர்வதுடன், ஐரோப்பிய யூனியன் மேலும் வலிமைப் படுத்தப் படும் என்றார் மெக்ரான்.
மேலும், மக்கள் அனைவரும் ஒற்றுமை யாக இருப்பதன் மூலம் மிகப்பெரிய சாதனை களை அடைய முடியும் என்று பிரசாரம் செய்தார்.
பிரான்சுக்குள் அகதிகளாக, குடியுரிமை கேட்டு வருபவர்களுக்குக் கதவு அடைக்கப்படும் என்றார் மரின்.
கதவு அடைப்ப தற்குப் பதில், சலுகைகள் அளிக்கப்படும். திறமை உள்ளவர் களுக்குப் பிரான்ஸில் வேலை தேடிக்கொள்ள டேலன்ட் விசா அளிக்கப்படும் என்றார் மெக்ரான்.
பிரசாரத்தின் போது மதச் சார்பின்மை பற்றி அதிகம் பேசியது, மெக்ரான் மீதான மக்களின் நம்பி க்கையை அதிகப் படுத்தியது. `இஸ்லாமி யர்கள் தவறு தலாகக் குறி வைக்கப் படுகின்றனர்.
மதச்சார் பின்மை முழுமையாகக் கடைப் பிடிக்கப் பட வேண்டும். எந்த ஒரு மதமும் பிரான்ஸுக்குப் பிரச்னையாக இல்லை. என்றார் மெக்ரான்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகப்படியான வேலை வாய்ப்பு உருவாக்கப் படும். விவசாயம், போக்குவரத்து, அடிப்படைக் கட்டமைப்பு, சுகாதாரத் துறை முதலீடு மேம்படுத்தப் படும் என ஏராளமான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தி ருக்கிறார் மெக்ரான்.
இதன் மூலம் மெக்ரான் மீதான அதீத நம்பிக்கையை பிரான்ஸ் மக்கள் வெளிப்படுத்தி யுள்ளனர். இப்போது, மெக்ரான் முன் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.
அதிபர் தேர்தலைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. இதில், பெரும்பான்மை பெற்றால் மட்டுமே வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம்!