சுரங்கத்துறை... உபி.க்கு 478 கோடி வருவாய் இழப்பு !

1 minute read
உத்தரப் பிரதேசத்தில் சுரங்கத்துறை கண்காணிக்கத் தவறியதால் மாநில அரசுக்கு ரூ.477.93 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சுரங்கத்துறை... உபி.க்கு 478 கோடி வருவாய் இழப்பு !
உ.பி வருவாய் துறையின் கடந்தாண்டு சிஏஜி அறிக்கை சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு ள்ளதாவது: 

உத்தரப் பிரதேசத் தில் மணல் மற்றும் கல் குவாரி சுரங்கங் களை சம்பந்தப் பட்ட மாவட்ட சுரங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்ய வில்லை. 

இதன் காரணமாக அனுமதிக் கப்பட்ட அளவை மீறி மணல் மற்றும் கற்கள் எடுக்கப் பட்டுள்ளன. 

சுரங்கங் களின் காலாண்டு ரிட்டன், உரிமை கட்டண மதிப்பீடு, தாமத உரிமை கட்டணத்து க்கான வட்டி ஆகிய எதையும் கண்காணிக்க வில்லை.

மேலும், 15 குத்தகை தாரர்கள் தங்கள் உரிமையை புதுப்பிக் காமலேயே, சுரங்கங் களில் இருந்து மணல் மற்றும் கற்கள் எடுக்க அனுமதிக் கப்பட்டுள் ளனர். 12 குத்தகை தார்கள் அனுமதிக் கப்பட்ட அளவை விட மணல் 
மற்றும் கற்கள் எடுத்துச் செல்ல அனுமதிக் கப்பட்டுள் ளனர். இந்த விதிமுறை மீறல்களு க்கான அபராதத் தொகை ரூ.282.22 கோடியை வசூலிக்க வில்லை. 

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் தாதுக்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப் பட்டதால், அரசுக்கு ரூ.179.57 கோடி இழப்பு ஏற்பட்டு ள்ளது. 

2909 செங்கல் சூளைகள் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் செம்மண் எடுத்ததற் கான தொகை யையும் உ.பி அரசு வசூலிக்க வில்லை. 

இதனால் உ.பி அரசுக்கு மொத்தம் ரூ.477.93 கோடி இழப்பு ஏற்பட் டுள்ளது. இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட் டுள்ளது.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings