82 விதவைகள்.. 50 தாலி ஊசலாடுது... பயங்கரம் !

தமிழ் நாட்டில் உள்ள அத்தனை மூலை முடுக்குகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஆவேசத்தோடு அடித்து நொறுக்கு கிறார்கள் பெண்கள். 
82 விதவைகள்.. 50 தாலி ஊசலாடுது... பயங்கரம் !
இத்தனை போராட்ட ங்கள் நடந்தும் தமிழக அரசோ மெளனம் சாதித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலை யில் எங்கள் தெருவில் மட்டும் டாஸ் மாக்கினால் விதவையான பெண்கள் 82 பேர் இருக்கிறார்கள்.

50 பேரின் தாலி ஊசலாடும் நிலையில் இருக்கிறது என்று பேரதிர்ச்சியை அள்ளிக் கொட்டுகிறார்கள் காரைக்கால் 

திருமலை ராயன் பட்டினம் அருகே மேலையூர் மாதா கோவில் தெருவாசிகள். அவர்களைச் சந்தித்தோம்.
சாந்திமேரி காரைக்கால்

“என் பேரு சாந்திமேரி. ஊரறிய, உலகறிய உலக நாதனைக் கல்யாணம் பண்ணி கிட்டு இந்த ஊருக்கு வந்தேன். அப்பவே இங்கன டாஸ்மாக் கடை இருந்தது.

மனுஷன் மூணு வேளை வீட்டுல சாப்பிடு வாரோ இல்லையோ, வேளை தவறாம நல்லா குடிப்பார். சம்பாதிச்ச பணத்தை எல்லாம் குடிச்சே அழிச்சார்.

அவர் குடிச்சது போக மீதம் இருக்கிற பணத்தை அவர் கிட்ட கேட்டுக் கெஞ்சி கூத்தாடி வாங்கி குடும்பம் நடத்தணும். எதிர்த்துக் கேட்டா அடிதடி, வம்புச் சண்டைனு வீடே ரணகள மாகும்.
இந்த லட்சண த்துல எங்களுக்கு ரெண்டு பசங்க ஒரு பொண்ணு பொறந் தாங்க. மூத்த புள்ளைக்கு கண் பார்வை கிடையாது. கஷ்டப் பட்டுப் படிக்க வைக்கிறேன்.

அதுக்குள்ளார என் வீட்டுக் காரருக்குக் கல்லீரல் பிரச்னைன்னு வைத்தியம், அப்புறம் கிட்னி பெயிலியர்னு ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியா அலைஞ்சு அவரும் கடைசியா கல்லறை க்கு போய் சேர்ந்திட்டார்.

அவர் தான் குடும்பத் துக்குனு வாழாமல் குடியே கதின்னு வாழ்ந்து வாழ்க்கையை முடிச்சிட்டார். நானும் அப்படி நடந்துக்க முடியுமா என்ன... புள்ளைங் களுக்காக வாழணுமே.
உலகில் அதிக இளமையும் ஆயுளும் பெற்றவர்கள் !
நித்தம், நித்தம் வெந்து சாகறேன். பையனும், பொண்ணும் பிளஸ்டூல நல்ல மார்க் எடுத்திரு க்காங்க. 

எங்கள காலேஜ் படிக்க வைங்கமா, வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிச்சு தர்றோம்’னு தைரியம் சொல்றாங்க.

பணத்துக் காக இல்லை ன்னாலும், என் கணவர் செய்யத் தவறின கடமையை நான் செய்ஞ்சு புள்ளைங் களை கரை யேத்தணும் இல்லையா...

காரைக்கால்
என்கதை இருக்கட்டும், என்னைவிடச் சின்ன வயசு பொண்ணுங்க எல்லாம் தாலிய அறுத்துக் கிட்டு நிக்கிறாங்க. மதுக்கடை மூணு மைல் அப்பால இருந்த போதே இவ்வளவு கொடுமையை அனுபவிக்கிறோம்.

அதைத் தெரு முனை யிலேயே கொண்டு வந்து வச்சா என்னா கும்னு நினைச்சுப் பாருங்க.

இப்பவே படிக்கிற வயசுல இருக்கிற புள்ளைங் களை படிக்க வைக்க முடியாத தால, வேலைக்குப் போற அவங்க கெட்ட சகவாசத் தால் குடிக்க ஆரம்பிச் சிட்டாங்க.

கண் முன்னாடி புருஷனை இழந்த நாங்க புள்ளக் குட்டிகளையும் இழந்துட்டு தவிக்கணுமா சொல்லுங்க... 

ராத்திரியோட ராத்தியா உங்க தெருல மதுக் கடையை திறந்திடு வாங்கனு சொன்ன தால பகலெல்லாம் உழைச்சி,

களைச்சி வர்ற நாங்க ராத்திரியில குழந்தைங்களோட ரோட்டுல படுத்து கிடக்கிறோம். மக்கள வாழ வைக்கிறதுக்கு அரசா, இல்லாட்டி சாக வைக்கிறது க்கு அரசானு தெரியல என்ற வேதனை யுடன் முடித்தார்.
மணிமேகலை
அந்த ஊர் மாதர்சங்கத் தலைவி மணி மேகலையிடம் பேசினோம். “ஏதோ வீடுகட்ட பூமி பூஜை போடுறாங் கனு நினைச்சோம்,

அதுல ஒயின் ஷாப் கடை வைக்கப் போறாங் கன்னு தெரிஞ்சதும் எல்லோரும் கொதிச்சிப் போயிட் டோம். அதுவும் எங்க ஊர் எம்.எல்.ஏ வோட கடை அது.

புதுசா வரப்போற மதுக் கடைக்குப் பக்கத்துல தான் ஆதி மாரியம்மன் கோயில் இருக்கு. எங்க ஊர்ல எந்த நிகழ்ச் சினாலும் கோயில்ல வைச்சு வரிசை எடுத்துட்டு மாதா தேர்பவனி வீதி சுத்தி வரும்.

அப்படி ஒரு தெரு நடுவுல ஒயின் ஷாப் கொண்டு வந்தா எப்படி... காரைக்கால் கலெக்டர் கிட்ட புகார் கொடுத்தோம், என் கையில் எதுவுமில்ல போராடு ங்கன்னு சொல்றார்.

பாண்டிச்சேரி போய் கலால் துறை கமிஷனர் கிட்ட கொடுத்தோம், இது காரைக்கால் நிர்வாகம் தீர்க்க வேண்டிய பிரச்னை ன்னு சொல்றார். என்ன செய்யற துன்னு தெரியல 20 நாளா போராடுறோம்.

ஒரு தெருவுல 82 பொம் பளைங்க விதவையா இருக்கிறது அவமானமா இருக்கு. இன்னும் எத்தனைத் தாலியை அறுக்கப் போறாங்க...
விதவை பென்ஷன் 1000 ரூபாய். மூணு வீட்டுல வேலை செஞ்சா ரூ.1500, இதை வைச்சி தான் புள்ளைங்கள வளர்க் கணும்,
வைரலான ஓரின ஈர்ப்பாளர்களின் போட்டோ - சுவாரஸ்ய தகவல்?
குடும்பத்த காப்பாத் தணும், வைத்தியம் பண்ணி க்கணும் இங்குள்ள பொம்ப ளைங்க எவ்வளவு கஷ்டப் படுறோம் ன்னு அதிகாரி களுக்குத் தெரியுமா... அ

டியாட்களோடு, மஃப்டில போலீசும் சேர்ந்து வந்து மிரட்டுறாங்க. அவங்க இடத்துல, அவங்க கடை வைக்கிறத தடுக்கி றதுக்கு நீங்க யாருன்னு போலீஸ் அதிகாரியே கேட்கிறார்.

குடியால அழிஞ்ச வங்க குடும்பம் படுகிற வேதனையை பார்த்தும் இன்னும் திருந்தாம பலபேர் குடியால கை, கால் செயலிழந்து கிடக்கி றாங்க.

ஒவ்வொருநாளும், ஒவ்வொரு வீட்டிலும் சண்டை தான். ஒரு கட்டத்துல இனி நாங்களும் குடிக்கிறோம், எங்களுக்கும் வாங்கித் தாங்கன்னு கேட்டோம்.

‘அப்படியா, ரொம்ப சந்தோஷம் வா ஜாலியா சேர்ந்து கம்பெனியா குடிக் கலாம்’னு வெட்க மில்லாம சொல்றாங்க. நாங்க என்ன தான் பண்றது.

இந்த தெரு முனையில ஒயின் ஷாப் கடை திறந்தா ஒட்டு மொத்தமா நாங்க அழிய வேண்டியது தான். இத்தனை க்கும் கீதாஆனந்தன் எம்.எல்.ஏ. கணவரை இழந்தவர் தான்.

ஒரு பொம்ப ளைக்கு தான் தெரியும், இன்னொரு பொம்ப ளையோட கஷ்டம்னு சொல்வாங்க, எங்களோட கஷ்டம் ஏன் அவங் களுக்கு தெரிய மாட்டேங்குது...” என்றார் ஆதங் கத்துடன்.
ஒயின் ஷாப் உரிமை யாளரும், தொகுதி எம்.எல்.ஏ. வுமான கீதா ஆனந்தனிடம் மாதா கோயில் தெரு பெண்களின் பிரச்னை குறித்துப் பேசினோம். 

தொகுதி மக்களுக்கு இடையூரா நான் எதுவும் செய்ய மாட்டேன்.அந்த ஊர் மெயின் ரோட்டில் எனக்குச் சொந்த மான இடத்தில் ஒயின் ஷாப் வைக்கக் கட்டடம் கட்டினேன். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித் தார்கள்.
குளிக்கும் போது முதல்ல தண்ணிய எங்க ஊத்துவீங்க சொல்லுங்க !
கலெக்டர் முதல் இன்ஸ்பெக்டர் வரை யார் சொல்லியும் கேட்கல. அவங்க ளுக்கு ஒருநபர் பண உதவி செய்து போராட்ட த்தைத் தூண்டி விடுகிறார்.

அதுவும் எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களுக்கு ஒரு உறுதி மொழியை நான் தருகிறேன். மேலை யூரில் மக்கள் எதிர்க்கும் இடத்தில் டாஸ்மாக் அமைக்க மாட்டேன். வேறு ஒரு ஊரில் அமைப்பதற்கு

10 தினங் களுக்கு முன்பே மனு கொடுத்து விட்டேன். என்னை நல்லவள்னு அந்த ஊர் மக்கள் புரிஞ்சிப் பாங்க. கண்டிப்பா காலம் பதில் சொல்லும்.

அந்த ஊருக்கு சிமென்ட் ரோடு, லைட்ன்னு எல்லா வசதியும் நான் தான் செஞ்சி கொடுத்தேன்.
இப்பவும் 48 லட்சத்தில சமுதாயக் கூடம் கட்ட நிதி ஒதுக்கி யிருக்கேன். இந்த சயமத்துல நான்போய் அடிக்கல் நாட்டினா ஒயின் ஷாப் கொண்டு வருவதற் காகத் தான் இதை செய்யு றேன்னு தப்பா நினைப் பாங்க.

நிச்சயமா அந்த ஊரில் மதுக்கடை வராது, அந்த மக்கள் நம்பமறுக் கிறாங்க, என் சார்பில் நீங்களாவது சொல்லு ங்கள்” என்று முடித்தார்.
Tags:
Privacy and cookie settings