கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்ட மன்றத் தேர்தல் நடை பெற்றது.
இந்தத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி மின்னணு வாக்குப் பதிவு இயந்திர த்தில் முறைகேடு நடை பெறுகிறது என்று குற்றம் சாட்டி வந்தது.
இருப்பினும், அந்தக் குற்றச் சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங் களுக்கு முன்னர்,
டெல்லி சட்டப் பேரவை யில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர த்தில் மோசடி செய்ய முடியும் என்று ஆம்ஆத்மி எம்.எல்.ஏ சவுரப் பரத்வாஜ் நிரூபித்தார்.
இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத் தியது. வாக்குப் பதிவு இயந்திர த்தின் நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, தேர்தல் ஆணைய த்துக்கு வந்தது.
இதை யடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி அனைத்துக் கட்சிக் கூட்டத் துக்கு ஏற்பாடு செய்தார்.
இந்தக் கூட்டம் இன்று நடந்தது. இதில், ஏழு தேசியக் கட்சிகள், 48 பிராந்தியக் கட்சி களைச் சேர்த்து, 55 கட்சிகள் பங்கேற்றன.
இந்தக் கூட்ட த்தில், தேர்தலின் போது பழைய வாக்குச் சீட்டு முறையை கைப்பற்ற அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து விட்டது.
இந்தக் கூட்டத் துக்குப் பின் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி செய்தியாளர் களிடம் கூறுகை யில், "தேர்தலில் பழைய வாக்குச் சீட்டு முறை பயன் படுத்தப்படாது.
ஆனால், மின்னணு இயந்திர த்தில் யாருக்கு வாக்களி த்தோம் என்ற ஒப்புகைச் சீட்டு வரும் வசதி, இனி வரும் அனைத்து தேர்தல் களிலும் பயன் படுத்தப் படும்.
வருகின்ற 14-ம் தேதி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திர த்தின் நம்பகத் தன்மை குறித்த, செயல் விளக்கக் கூட்டம் நடக்கிறது.
அப்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திர த்தின் குற்றச் சாட்டுகளை நிரூபிக்க, அரசியல் கட்சி களுக்கு வாய்ப்பு வழங்கப் படும்" என்றார்.
Tags: