உத்தர பிரதேச மாநில த்தில் ஏழைகள் பயன் படுத்தும் ரேஷன் கார்டு பட்டிய லில் நடிகை தீபிகா படுகோனின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
உலகில் அதிக வருமானம் பெறும் நடிகைகளில் முதல் 10 இடங்களில் இடம் பெற்றவர் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன்.
ஆனால் இவரது பெயர் உத்தர பிரதேச மாநிலத் தில் ஏழைகள் பயன் படுத்தும் ரேஷன் கார்டு பட்டிய லில் இடம் பெற்றுள்ளது என்றால் ஆச்சரிய மாகத் தான் இருக்கும்.
இவரது பெயர் மட்டு மல்ல முன்னணி இந்தி நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ராணி முகர்ஜி ஆகியோரின் பெயர் களிலும் ரேஷன் கார்டு உள்ளது.
அந்த மாநில த்தில் உள்ள கயாம்கஞ்ச் தாலுகா சஹாப்கஞ்ச் கிராம த்தில் உள்ள ரேஷன் கார்டு பயனா ளிகள் பட்டியலில் தான் இவர்களது பெயர்கள் உள்ளது.
அது மட்டு மல்ல இவர்கள் மானிய விலையில் மாதந் தோறும் ரேஷன் பொருட் களையும் வாங்கி வருவதாக ஆவணங் களில் உள்ளது.
ஆவணங் களில் அந்த நடிகை களின் கணவர் பெயர்களும் கற்பனை யாக குறிப்பிடப் பட்டு உள்ளது.
இதனை அறிந்த கிராமத் தினர் இதுகுறித்து ரேஷன் கார்டுகளை வழங்கிய அதிகாரி மீது புகார் அனுப்பினர். இதன்மூலம் இந்த தகவல் வெளி உலகுக்கு தெரிய வந்தது.
மாவட்ட கலெக்டர், இந்த மோசடியில் ஈடுபட்ட அதிகாரியை கண்டு பிடித்து உரிய நடவடி க்கை எடுக்கும்படி கயாம்கஞ்ச் உதவி கலெக்டர் விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளார்.
இந்த மோசடி யில் ஈடுபட்ட வர்கள் ஏழை களுக்கு மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கும் அந்தியோதயா திட்டத்தின் கீழ் 4 பேர் பெயரிலும் ரேஷன் கார்டு வழங்கி உள்ளனர்.
அவர்களது ஆண்டு வருமானம் ரூ.18 ஆயிரம் என்று பதிவாகி உள்ளது. ஏழைகள் பயன்படுத்தும் இந்த ரேஷன் கார்டுகளை இது போன்ற கற்பனையான பெயரில் வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்
என்று இந்த பிரச்சினையை வெளியே கொண்டு வந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.