பல நூறு ஆண்டு களுக்கு முன்... ஒரு புலவரின் மனைவி.. இறக்கும் தருவா யில் தன் கணவனை அருகே அழைத் தாளாம்...
என்ன வென்று கேட்டு, கலங்கிய கண் களோடு கணவன் அவள் பக்கத்தில் வர... மனைவி தயக்க த்துடன் இப்படிக் கேட்டாளாம் ...
“என் உயிர் எப்போதோ என்னை விட்டுப் பிரிந்தி ருக்க வேண்டும்.. ஆனால்..ஒரே ஒரு கேள்வி .. என் நெஞ்சுக் குழியில் நின்று கொண்டு,
என் உயிர் இந்த உடலை விட்டுப் பிரியாமல் தடுத்துக் கொண்டி ருக்கிறது.. அந்தக் கேள்வியை இது வரை உங்களிடம் நான் கேட்ட தில்லை... இப்போ தாவது கேட்கலாமா..?”
என் உயிர் இந்த உடலை விட்டுப் பிரியாமல் தடுத்துக் கொண்டி ருக்கிறது.. அந்தக் கேள்வியை இது வரை உங்களிடம் நான் கேட்ட தில்லை... இப்போ தாவது கேட்கலாமா..?”
புலவனான அந்தக் கணவன், புரியாமல் அந்தப் புனித வதியைப் பார்க்க... அந்த மனைவி கேட்டா ளாம் இப்படி:
“இது வரை உங்களிடம் நான் கேட்காத அந்தக் கேள்விக்கு, இப்போ தாவது பதில் எனக்குத் தெரிந்து விட்டால்...
நிம்மதி யாக கண்களை மூடுவேன்.. அந்த நிம்மதி யான மரணத்தை எனக்குத் தருவீர் களா.?”
நிம்மதி யாக கண்களை மூடுவேன்.. அந்த நிம்மதி யான மரணத்தை எனக்குத் தருவீர் களா.?”
கணவன் மௌன மாக தலை யசைத்து சம்மதம் தெரிவிக்க... மனைவி தன் நெடுநாள் சந்தேக த்தை கேட்டு விட்டா ளாம்..
“ஒவ்வொரு நாளும் நீங்கள் உணவு அருந்தும் போது ஒரு கொட்டாங் குச்சியில் தண்ணீ ரும்,
ஒரு ஊசியும் கொண்டு வரச் சொல்லி, அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் சாப்பிடு வீர்கள்...அப்படித் தானே..?”
ஒரு ஊசியும் கொண்டு வரச் சொல்லி, அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் சாப்பிடு வீர்கள்...அப்படித் தானே..?”
கணவன் இதற்கும் மௌன மாக தலை யசைக்க , மனைவி கேட்டா ளாம்..” இது வரை அதற் கான காரண த்தை ஒரு போதும் நான் உங்க ளிடம் கேட்ட தில்லை...
காரணம்.. கணவன் சொன்ன தற்கு மறுபேச்சு பேசி, நான் அறிந்த தில்லை... இப்போது என் வாழ்வின் இறுதி மூச்சில் இருக் கிறேன்... இப்போ தாவது சொல் லுங்கள்.. அந்த கொட்டங் கச்சியும் , தண்ணீரும் எதற்காக..?”
காரணம்.. கணவன் சொன்ன தற்கு மறுபேச்சு பேசி, நான் அறிந்த தில்லை... இப்போது என் வாழ்வின் இறுதி மூச்சில் இருக் கிறேன்... இப்போ தாவது சொல் லுங்கள்.. அந்த கொட்டங் கச்சியும் , தண்ணீரும் எதற்காக..?”
இப்படிக் கேட்டு விட்டு, இதற்கான பதிலை எதிர் பார்த்து அந்த மனைவி, புலவனான கணவன் முகத்தைப் புரியாமல் பார்த் திருக்க,
அந்தக் கணவன் சொன்னாராம்.. “அது வேறொ ன்றும் இல்லை... பரிமாறும் போது தவறுத லாக சோற்றுப் பருக்கை கீழே சிந்தி விட்டால்,
அதை அந்த ஊசியில் குத்தி , கொட்டாங் குச்சியில் உள்ள தண்ணீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணத் தான் அந்தக் கொட்டங் கச்சி நீரும்.. ஊசியும்..”

கணவன் பதில் சொல்லி யும் மனைவி யின் குழப்பம் தீர வில்லை... அவள் கேட்டாள்.. “ஆனால் ஒரு போதும் நீங்கள் அந்த ஊசியை யும், கொட்டாங் கச்சியை யும் பயன் படுத்தி நான் பார்த்ததே இல்லையே..?”
மனைவி இப்படிக் கேட்டதும்...குரல் உடைந்து போன கணவன்... குமுறும் அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாராம்... “ உண்மை தான்... ஒரு நாளும் நான் அதைப் பயன் படுத்த வில்லை..!
ஏனென்றால் ஒரு நாளும் நீ எனக்குப் பரிமாறும் போது, ஒரு சோற்றுப் பருக்கையைக் கூட சிந்தவே இல்லையே....!”
கணவன் பதில் அறிந்த மனைவி.. புன்னகை செய் தாளாம்.... அவ்வளவு தான்...! போய் விட் டாளாம்..!!
நெகிழ்ச் சியோடு நெடு நேரம் நின்ற கணவன் ..அந்தப் புலவன்...கண்ணீரோடு தன் அன்பு மனைவிக் காக உடனே ஒரு பாடலை எழுதி னானாம் ...
“அடியிற்கினியாளே அன்புடையாளேபடிசொல் தவறாத பாவாய்- அடிவருடிபின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு”
இது நாள் வரை தன் வாழ் நாளில் அந்தப் புலவன் எழுதிய தெல்லாம் ...இரண்டு வரிப் பாடல்கள்...அதில் ஏழே ஏழு வார்த்தைகள்..!
அவ்வளவு தான்...அதுதான் அந்தப் புலவன் தன் பாட்டுக்கு ஏற்படு த்திக் கொண்ட பார்முலா..விதி..!
இப்போது.... தனது செய்யுள் விதியை...தானே தளர்த்திக் கொண்ட அந்தப் புலவன்... தன் வாழ்வில் முதன் முதலாக , இந்த நாலு வரிப் பாடலை எழுதி இருக் கிறார் ..
ஆம்... இந்த நாலு வரிப் பாடலை எழுதிய அந்தப் புலவர் ..திருவள் ளுவர்....!
கணவன் சொல் தட்டாத அந்த கள்ளமற்ற அன்பு மனைவி ..வாசுகி...!
அந்தப் பாடலின் பொருள் :
“அடியவ னுக்கு இனியவளே! அன்புடை யவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங் களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித் தான் இரவில் தூங்கப் போகிறதோ!”
இன்னொரு வள்ளுவன் எதிர் காலத்தில் பிறக்கலாம்...!
ஆனால்..இன்னொரு வாசுகி....?