'சாப்பிட்ட பிறகே உண்ணாவிரதத்துக்குச் செல்வேன்!' - செம தில் கமல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ, வரும் ஜூன் 18-ம் தேதியி லிருந்து விஜய் டிவி-யில் ஒளி பரப்பாக உள்ளது.


இதற்கான புரமோஷன் படப்பிடிப்பு, கடந்த 12-ம் தேதி திருவேற் காட்டில் உள்ள கோகுலம் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது.

பரபரப்பான அந்தப் படப்பிடிப்பு வேலை யிலும் ஆனந்த விகடனுக்காக கமல் அளித்த பேட்டி யிலிருந்து...

டிவி-யின் வீச்சை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று ஆரம்பத்தி லிருந்தே சொல்லி வருகிறீர்கள். ஆனால், அதை ஏதோ தீண்டத் தகாத விஷயம்போல் ஒதுக்கி வைத்துள் ளார்களே?
‘‘மனுஷ னையே ஒதுக்கி வைக்கும் இந்த ஊரில் டிவி-யை ஒதுக்க மாட்டா ர்களா? அது, காலம், விஞ்ஞானம் இரண்டின் வேகத்து க்கும் ஈடு கொடுக்க முடியாத

கோபத்தின் வெளிப்பாடு. காலப் போக்கில் அவர்களே திருந்தி மாறுவார்கள்; மாறித் தான் ஆக வேண்டும். அப்போது சாட்டிலைட் டெலிவிஷன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சினிமாத் துறையினர் ஊர்வலம் போனார்கள்.

அதில் எங்கள் வாத்தி யாரும் இருந்தார். அதனால் நான் அப்போது அதிகம் பேச முடிய வில்லை. ‘ரோடு போட்டாச்சு.

மக்கள் அந்தப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள். கார் வரும். அதுக்காக, நீங்கள் கோபித்துக் கொள்ள முடியாது. மாட்டுவண்டி இடம் கொடுத்துத் தான் ஆகணும்’ என்றேன்.

உடனே, ‘கமல், சினிமாவை `மாட்டு வண்டி'னு சொல்லிட்டார். மன்னிப்பு கேட்கணும்’ என்றார்கள். ‘கேட்கவே மாட்டேன்’ என்றேன். எங்கள் வாத்தியார், தவறு என்றால் அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்பார்.

எனக்கு 18 வயதாக இருக்கும் போதே என்னைத் திட்டி விட்டு பிறகு ‘தேவை யில்லாமல் திட்டி விட்டோம்’ எனத் தெரிந்தால் கூப்பிட்டு ‘ஸாரிடா’ என்பார். அப்பாத்தனம் இருப் பவர்கள் அப்படி சொல்லவே மாட்டார்கள்.

பிறகு, அவரே டெலிவிஷனை சுவீகரித்தது போல் வேறு எந்த இயக்குநரும் அதைத் தத்தெடுக்க வில்லை. பிறகு, டி.டி.ஹெச் பற்றி சொன்னேன்.

கடுமை யாகக் கோபப் பட்டார்கள். ஆனால் இன்று, அது தான் நெட்ஃபிளிக்ஸாக வந்து விட்டது. அதை யெல்லாம் தடுக்கவே முடியாது.”

ஆனால், பெரிய லாபம் தரக்கூடிய தியேட்டர்கள் பாதிக்கப் படும் என்ற அவர்களின் அச்சத்திலும் நியாயம் இருக்கத் தானே செய்கிறது?
நீங்கள் விரலால் எண்களைச் சுற்றிப் பேசும் பழைய டெலிபோன் வியாபாரம் செய்கிறீர்கள்.

அந்த டெலிபோன் வியாபாரம் கெட்டுப் போய் விடும் என்பதற் காக, ‘செல் போன்லாம் வாங்கா தீங்க. செல்போன்ல பேசினா காது சுட்டுடும்;

மூளை மழுங்கிடும்’ என்று சொல்லிப் பாருங்கள். அப்படியும் சிலர் சொல்லியும் பார்த்தனர். ஆனால், இன்று நடந்தது என்ன?

செல்போன் பயன் படுத்துவோர் எண்ணிக்கை யில் இந்தியா குறிப் பிடத்தக்க இடத்தைப் பிடித்து ள்ளது.

நீங்கள் சொல்வதுபோல அதனால் சில கெடுதிகளும் இல்லாமல் இல்லை. ‘பசுமைப் புரட்சி’ எவ்வளவு பெரிய முன்னேற்றம்! அதிலும் நிறைய தவறுகள், தடு மாற்றங்கள் இருந்ததாகச் சொல் கிறார்களே.

அது போல இதிலும் சில கெடுதிகள் வரலாம். புதிய விஞ்ஞானம் வரும் போது அதை ஆராய வேண்டும்.

அதற்காக அது வேண்டாம் என்று நீங்கள் சொன்னால், அது உங்களை ஒதுக்கி வைத்து விட்டு தானாக வந்து சேர்ந்து விடும்.”

பல தயாரிப் பாளர்கள் `நஷ்டம்' என்கிறார்கள். சிலர், `பிரேக் ஈவன் ஆகியி ருக்கிறது' என்கி றார்கள். மற்ற தொழில் களில் வருவது போன்ற நிச்சய வருமானம் சினிமாவில் இல்லையே?
‘‘அதெல்லாம் நிறையவே இருக்கிறது. ஆனால், அதைப் பண்ண வில்லை. உதாரண மாக, ‘ஆனந்த விகடன்’ பத்திரிகை ஆரம்பிக்கும் போது என்ன கியாரன்டி இருந்தது?

‘தந்தி’ ஆரம்பித்த ஆதித்த னாருக்கு என்ன கியாரன்டி இருந்தது? ‘படிப்பாங்க’ என்ற கியாரன்டி இருந்ததா? முதலில் இந்த மக்களு க்குப் படிப்பறிவு இருந்ததா? 

அதையும் தாண்டி அவர்கள் அதை ஏற்படு த்திக் கொண்டனர். எப்படி நியூஸ் மார்ட்டுக்குள் தன் பத்திரி கையைக் கொண்டுபோய் வைப்பது,

கொண்டு போய் வைத்த பத்திரிகை விற்கிறதா எனப் பார்ப்பது, விற்பனை, வீடு வந்து சேர்ந்ததா எனப் பார்ப்பது... இவ்வளவு வேலைகள் இருக்கி றதல்லவா! அவை நேர்மை யாக நேரத்துக்குக் கடைப் பிடிக்கப் படுகிறதா எனப் பார்ப்பது,

அது இல்லாத பட்சத்தில் அதற்காகப் போராடுவது... இவற்றை எல்லாம் நம் சினிமா இண்டஸ்ட்ரி இன்னும் சரியாகச் செய்ய வில்லை. ஏனெனில், இங்கு கூட்டு முயற்சி இல்லை.

இன்னும் உட்கார்ந்து பேசவில்லை. இவை, உதிரி பாட்டாளி களாக இருப்ப தால் வரக் கூடிய பிரச்னைகள் தான்.’’

‘இந்த விஷயங் களைப் பண்ண வில்லை என்றால், வேலை நிறுத்தம்' என்று தமிழ் சினிமா கூட்டமைப்பு அறிவித்தி ருக்கிறது. இதில் உங்கள் பார்வை என்ன?’’
‘‘எனக்கு வேலை நிறுத்த த்தில் நம்பிக்கை கிடையாது. அதே போல உண்ணா விரதத்திலும் எனக்கு நம்பிக்கை கிடையாது.

காந்தியை எனக்குப் பிடிக்கும் என்றால் கூட நான் சாப் பிடாமல் எல்லாம் இருக்க மாட்டேன்.’’

‘‘ஆனால், நீங்களும் சில உண்ணா விரதங்களில் கலந்து கொண்டிருக் கிறீர்களே?”
‘‘கூப்பிடு வார்கள் சார். ஆனால், நான் சாப்பிட்டு விட்டு தான் செல்வேன். என்னுடைய ஆதரவைக் காட்டு வதற்குப் போவேனே தவிர,

எனக்கு உண்ணா விரதங் களில் நம்பிக்கை கிடையாது. உண்ணா நோன்பை... நோன்பு இருப்ப வர்கள் இருக்கலாம்.

எனக்கு நோன் பிலேயே நம்பிக்கை இல்லை எனு ம்போது, நான் எப்படி அதில் கலந்து கொள்ள முடியும்? பசிக்கும் போது சாப்பிட்டு விட வேண்டும். இல்லை...

அந்தத் தியாகத்தை யாரும் மதிக்கப் போகிறார்களா? ‘நான் செத்துப் போயி டுவேன்’ என்று சொன்னால் ‘ஐயய்யோ...  ஒரு கலைஞன் போயிடுவான்.

அவனை எப்படி யாவது காப்பாத் தணும்’ என நினைக்கும் அரசியல் வாதிகள் இங்கு எத்தனை பேர் இருக்கி றார்கள்? கையைத் தடுத்து, ‘வேணாம் உண்ணா விரதத்தை நிறுத்தி க்கங்க’னு சொல் கிறவர்கள்,

நிஜமாகவே மனம் உவந்து சொல்கி றவர்கள் யாரும் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை. அப்படி இருக்கை யில் எதற்கு நம்மைப் பணயமா வைத்து விளையாட வேண்டும்?

‘சாகும்வரை உண்ணா விரதம்’ என்று அறிவித்த பொட்டி ஸ்ரீராமலுவை அப்படியே சாக விட்டபோதே இங்கு உண்ணா விரதம் செத்துப் போய் விட்டது.”

“இந்த அரசில் அமைச்சர்கள் அனைவரின் மீதும் ஊழல் குற்றச் சாட்டுகள். எதிர்க் கட்சிகள் இன்னும் சிறப்பாகச் செயல் படலாமே எனத் தோன்று கிறதா? குறிப்பாக கம்யூனி ஸ்டுகள்...?”
“அது என் நண்பர்கள், தோழர்கள் மீது நான் வைக்கும் பெரும் குற்றச்சாட்டு. நேர்மை யாக இருக்கும் ஒரு இசம் அதுவும் இவர் களுடன் மல்யுத்தம் செய்வ தனால் அழுக்கு தான் படியுதே தவிர,

அவர்கள் வென்ற சாட்சி யங்கள் குறைவாக இருக் கின்றன. உலகத்தில் இல்லாத சாதனை களை நிகழ்த்திக் காட்டிய வர்கள் இந்திய கம்யூனிஸ் டுகள்.

ஒரு டெமாக்ரடிக் நாட்டுக்குள் இரண்டு மாநிலங் களில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்வது பெரிய வெற்றி. உலகத்தில் இல்லாத நிகழ்வு.

ஆனால், அது போதாது. அந்த மகுடத்தை மட்டுமே போட்டுக் கொண்டு உட்கார்ந்து விடக் கூடாது.

உடனே, ‘கம்யூனிசம் தான் வெல்லும்’ என்கிறீர்களா?’ என்றால், ‘எந்த இசமுமே வெல்ல வேண்டிய அவசியம் கிடையாது. மக்கள் வெல்லணும். ஏன்னா, இந்தக் கட்டடம் இன்னும் வேலை முடிந்த பாடில்லை.

கலாசாரம், ஹ்யூமன் சொசைட்டி என்பது ஏதோ வேலை முடிந்து விட்ட மாதிரி கையைத் தட்டிக் கொள்ள வேண்டாம். இது வொர்க் இன் ப்ராக்ரஸ். அதனால் எந்த இசமும் நம் பிரச்னை களுக்கு நிரந்தரத் தீர்வாக அமைய முடியாது.

அதுக்கு பேசாமல் ஒரு புத்தகம், ஒரு நம்பிக்கை என பக்தி மார்க்க வழியிலேயே போய் விடலாமே, கம்யூனிசம் அப்படி கிடை யாதே.

`தாஸ் கேபிடல்' ஒரு புத்தகத்தை நம்பிக் கொண்டு எல்லாமே முடிந்து விட்டது என்று அதை வைத்து பூஜை பண்ணிக் கொண்டு இருக்க முடியாது.”

அண்ணன் சந்திர ஹாசனின் இழப்பு பற்றி?

“பேரிழப்பு தான். ஆனால், ஒன்றே ஒன்றுதான். நான் 16 வயதில் நிச்சயம் இப்படி நடிக்க வில்லை என்பதற் கான உதாரணம் ‘அரங்கேற்றம்’ பார்த்தாலே தெரியும்.

அன்று, இன்று போல் நடிக்கும் கமல் ஹாசன் இல்லை. ஏனெனில், அந்தக் கமல் ஹாசனுக்கு பல விஷயங்கள் தெரியாது. டான்ஸ் தெரியும், பரத நாட்டியம் தெரியும்.

கொஞ்ச மாக சங்கீதம் பாடுவான். ஆனால், பாலசந்தர் என்ற பெரிய வாத்தி யாரிடம் வேலை செய்து அவர் மாதிரி எழுத வேண்டும் என்று


ஆசைப் பட்டு எழுதவும் ஆரம்பித்து அதற்கான விருதுகளும் வாங்கி டைரக்ட ராகவும் ஆகி இருக்கிறேன். அதற்கு 45 வருடங்கள் ஆகியிரு க்கின்றன.

62 வருஷங் களாக நான் சந்திர ஹாசனுடன் வாழ்ந்தி ருக்கிறேன். அவரும் நல்ல வாத்தியார் தான். அவர் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும், என் வாழ்க்கை தடைப்படும் அளவுக்கு இழப்பல்ல. 

ஏனெனில், நன்றாகக் கற்றுக் கொடுத்து விட்டு சென்றி ருக்கிறார்; என்னை இந்த நாளுக்குத் தயார் படுத்தி விட்டு தான் போயிரு க்கிறார். திடீரென என்னை ஏமாற்றி விட்டுப் போக வில்லை. 

இந்தப் பேச்சை நாங்கள் பேச ஆரம்பித்து 20 வருடங்கள் ஆகின்றன. என்னை குழந்தை யிலிருந்து எடுத்து வளர்த்தவர் என்பதால், அவர் என்னை தன் மூத்த மகனாகத் தான் பார்த்தார். 

ஒரு மூத்த மகனுக்கு என்னென்ன அறிவுரைகள் சொல்ல வேண்டுமோ, அனைத் தையும் சொல் லாமல் போயிருப்பார் என நம்புகி றீர்களா நீங்கள்? 

ஒரு வீட்டில் பெரிய தகப்பனார் இறந்த பிறகு மூத்தவன் என்ன செய்வானோ, அதையெல்லாம் செய்ய நானும் முனைவேன்.”
Tags:
Privacy and cookie settings