வியாபாரி மகளை கடத்தி பலாத்காரம் !

திருப்பூர் சூசையாபுரம் பகுதியை சேர்ந்த பனியன் வியாபாரி ஒருவருக்கு 19 வயதில் மகள் உள்ளார். இவர், இவர் கடந்த சில நாட்களாக திருப்பூர் காங்கயம் ரோட்டில் நடந்து வரும் பொருட்காட்சியில் வேலை செய்து வந்தார். 
வியாபாரி மகளை கடத்தி பலாத்காரம் !
நேற்று முன்தினம் பிற்பகல் வேலைக்கு செல்ல அவர் வீட்டி லிருந்து டவுன் ஹால் பஸ் நிறுத்தத் திற்கு நடந்து சென்ற போது, 

அவர் அருகில் சொகுசு கார் ஒன்று வந்து நின் றுள்ளது. அந்த காரில் இருந்த நபர் அந்த இளம் பெண்ணின் தந்தையின் நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

பின்னர் இளம் பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டு, காரில் சென்று கொண்டு விடுவ தாக கூறி அழைத்து சென்றுள்ளார். 
ஆனால், செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விடாமல், நல்லூர் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு கடத்தி சென் றுள்ளார். பின்னர் அங்கு வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். 

இது குறித்து யாரிடமாவது தெரிவித் தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, அருகில் இருந்த பஸ் நிறுத்த த்தில் இறக்கி விட்டு சென் றுள்ளார். 

அங்கிருந்து வீட்டிற்கு வந்த இளம் பெண் பெற்றோரிடம் நடந்த வற்றை கூறி கதறி அழுதுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீ சாரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். 
தந்தையின் நண்பர் எனக் கூறி, இளம் பெண்ணை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Privacy and cookie settings