ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அம்மாநில அமைச்சரவையை மாற்றி யமைக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து ஒடிசா சட்டசபை சபாநாயகர் நிரஞ்சன் பூஜாரி.
கடந்த சில தினங்களுக்கு முன் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். தொகுதி பணியை பார்க்க செல்வ தாகக்கூறி அவர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அமைச்சர்கள் சஞ்சய் தாஸ்வர்மா, அருண் குமார் சாஹு, பிரதீப் பாணி கிரஹி, புஷ்பேந்திர சிங்தேவ், பிரகாஷ் தாஸ் உட்பட, பத்து அமைச் சர்கள் ராஜினாமா செய்தனர்.
இது குறித்து நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கட்சி பணிக்காக உழைக்க, தானாக முன் வந்து, அமைச்சர் பதவி களை ராஜினாமா செய்தவ ர்களுக்கு நன்றி.
குறிப்பாக, அமைச் சரவை மாற்றம் மக்களுக்கு சிறப்பான பலனை அளிக்கும் என்றார். இதற்கிடையே ஒடிசாவில் 11 புதிய அமைச் சர்கள் இன்று பதவி யேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ஒடிசா அரசியலில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.