எல்லோரும் கிரீன் டீ குடிக்கலாமா? #Green Tea

3 minute read
சமீபத்தில் கிரீன் டீ குடிப்பது பெரும் பாலானோருக்கும் கௌரவ மாகி இருக்கிறது. பிடிக்குதோ இல்லையோ, மற்றவர்களிடம் பெருமைக்காக சொல்வதற் காகவே சிலர் கிரீன் டீ குடிப்பதுண்டு.
எல்லோரும் கிரீன் டீ குடிக்கலாமா? #Green Tea
மற்றவர்களிடம் பெருமைக்காக சொல்வதற்காகவே சிலர் கிரீன் டீ குடிப்பதுண்டு. ஆனால் கிரீன் டீ குடித்த பின் சிலருக்கு வாந்தி, நெஞ்செரிச்சல் அல்லது வேறு பாதிப்பு உண்டாகலாம்.
ஓடும் ரயிலில் தவறி விழுந்த இளைஞர் !
கிரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. சந்தேக மில்லை. உடலுக்கு நல்லது தான், ஆனால் எல்லாரும் இதனை குடிக்கக் கூடாது. வெகு சிலருக்கு இதனால் பிரச்சனைகளும் உண்டாகலாம் என ஆராய்ச்சி யாளர்கள் கூறுகி றார்கள்.

யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக் கூடாது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

நீங்கள் உங்கள் நோய்க்காக மருந்து எடுத்துக் கொள்பவரா? அப்படி யென்றால் நீங்கள் கிரீன் டீ எடுப்பது உசித்தமல்ல. ஏனென்றால் கிரீன் டீ மருந்து களுடன் வினை புரிந்து எதிர் வினையை தரும். இது ஆபத்தானது.

உடல் எடையை குறைக்க அந்த டயட், இந்த டயட் என குறிப்பிட்ட வகையறா டயட்டுகளை பின்பற்றுபவரா? அல்லது சத்து மாத்திரை களை சாப்பிடுபவரா? 
டயட்டு களால் உங்கள் ரத்தத்தின் அடர்த்தி குறைந் திருக்கும். அந்த சமயத்தில் கிரீன் டீ குடிப்ப தால் இன்னும் அதிக அடர்த்தி குறைந்து பல பிரச்சனை களை தரும்.

மாதவிடாய் காலத்தில் கிரீன் டீ சில பெண் களுக்கு ஒவ்வாமை உண்டாகும். எனவே அந்த மாதிரியான சமயங் களில் கிரீன் டீ தவிர்ப்பது நல்லது. இதிலுள்ள காஃபின் அலர்ஜியை உண்டாக் கலாம்.
கருத்தடை மாத்திரை பயன் படுத்து பவர்கள் கவனத்துக்கு !
சிலருக்கு காஃபின் ஒவ்வாமை இருக்கும். கிரீன் டீயில் குறைந்த அளவே காஃபின் இருந்தாலும் இரண்டு முறைக்கும் அதிகமாக குடிக்கும் போது டென்ஷன், நரம்புத் தளர்ச்சி, தூக்க மின்மை ஆகியவை உண்டாகும்.

கிரீன் டீயில் இருக்கும் அனைத்து சத்துக்களும் பழச்சாறுகளில் உள்ளன. அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகளுடன் கூடிய பழச்சாறு களை நீங்கள் கிரீன் டீக்கு பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.
பக்கவாதம் அல்லது இதய நோய் உண்டான வர்கள் தினமும் பெர்ரி பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஓட்ஸ் மற்றும் பெர்ரி பழங்களில் அதிக நார் சத்தும்  ஆன்டி ஆக்ஸி டென்ட்டும் இருப்பதால் அவை சிறந்த பலனளிக்கும். 
கிரீன் டீக்கு பதிலாக இவற்றை எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் இருக்க வேண்டுமென நினைத்தால், இஞ்சி தேநீர், சீமை சாமந்தி தேநீர் ஆகிய வற்றை எடுத்துக் கொள்ளலாம். 

இவற்றில் கிரீன் டீக்கு இணை யான சத்துக்கள் உள்ளது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....
Tags:
Today | 5, April 2025
Privacy and cookie settings