என்னுடைய கஷ்டங்களை என் குழந்தை படக்கூடாது?

கழுகுகள் நமக்கு கற்று தரும் பாடம்.... பறவை களில் கழுகுகள் மிக சக்தி வாய்ந் தவை. அவை மிக உயர மாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகிய வற்றின் சின்னமாகக் கருது கின்றோம்.

என்னுடைய கஷ்டங்களை என் குழந்தை படக்கூடாது?
ஆனால் அந்தக் கழுகு களின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பி லேயே வருபவை அல்ல. அவை கழுகு களால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப் படுபவை தான்.
குஞ்சு களாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீன மாகவே இருக்கின்றன.

அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப் பாகவுமே இருந்து விட்டால் வலிமை யாகவும், சுதந்திர மாகவும் மாறுவது சாத்தி யமல்ல.

எனவே குஞ்சு களாக இருக்கும் போது வேண்டிய உண வளித்து, பாதுகாப்பாக வைத்தி ருக்கும் தாய்ப் பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும்போது மாறி விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கை யினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மை யான பகுதிகள் வெளிப் படும்படி செய்து கூட்டை சொகு சாகத் தங்க வசதிய ற்றபடி செய்து விடுகின்றது.

பின் தன் சிறகு களால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டு கின்றது.
தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக் குஞ்சு கூட்டின் விளிம்பு வரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தை யும் உயரத்தை யும் விஸ்தீரண த்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்ட மான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரிய மற்று பலவீன மாக நிற்கின்றது.

அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கை யில் சந்தித் தாக வேண்டிய ஒரு முக்கிய மான தவிர்க்க முடியாத கட்டம்.

அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாது காப்பாகத் தங்கி விட முடிவெடு க்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாது காப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல.

சுயமாகப் பறப்பதும் இயங்கு வதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப் பறவை அறியும்.
அந்தக் கழுகுக் குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும்

அந்தக் கட்டத்தில் தாய்ப் பறவை அந்தக் குஞ்சின் உணர்வு களை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டி லிருந்து வெளியே தள்ளி விடுகிறது.
அந்த எதிர்பாராத தருண த்தில் கழுகுக் குஞ்சு கஷ்டப்பட்டு சிற கடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறை யிலேயே கற்று விடும் கலையல்ல அது.

குஞ்சு காற்றில் சிற கடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பி க்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது.

குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்ப தாக எண்ணி நிம்மதி யடைகிறது.
அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க் கழுகு மீண்டும் அந்தக் கழுகுக் குஞ்சை அந்தர த்தில் விட்டு விடுகிறது.

மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்த த்திற்கு அந்தக் குஞ்சு உள்ளா கிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவது மாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சி யில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகி ன்றன.

காற்று வெளியில் பறக்கும் கலையை யும் விரைவில் கழுகுக் குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திர மாக, ஆனந்த மாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பி க்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறை யாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்ட த்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் .

அந்தத் தருண த்தில் தாய்க் கழுகு அதனை முன்னோ க்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திர த்தையும், ஆனந்த த்தையும், தைரிய த்தையும் அந்தக் கழுகுக் குஞ்சு தன் வாழ் நாளில் என்றென் றைக்கும் கண்டிருக்க முடியாது.
பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப் பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றி னாலும்

பொறுத் திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது...

ஒவ்வொரு புதிய சூழ்நிலை யும் யாருக்கும் ஒருவித பதட்ட த்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். 

ஆனால் அந்தக் காரணத்திற் காகவே அந்த சூழ்நிலை களையும், அனுபவ த்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான்.
கப்பல் துறை முகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப் பாதுகாப் பாக இருக்க லாம். 

ஆனால் கப்பலை உருவாக் குவது அதை துறை முகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோக மும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.

கழுகிற்கும், கப்பலு க்கும் மட்டுமல்ல, மனிதனு க்கும் இந்த உண்மை பொருந்தும். தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கை யில் முதல் முதலில் தள்ளப் பட்டதை எண்ணிப் பார்த்து, "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக் கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று

நினைக்கு மானால் அதன் குஞ்சு பலவீன மான குஞ்சாகவே கூட்டி லேயே இருந்து இறக்க நேரிடும்.
Tags:
Privacy and cookie settings