அதிகமாக உடற்பயிற்சி செய்தால் நல்ல தூக்கம் பெற முடியுமா? #Exercise

தினமும் உடற் பயிற்சியை செய்து வந்தால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
அதிகமாக உடற்பயிற்சி செய்தால் நல்ல  தூக்கம் பெற முடியுமா? #Exercise
உடல் நன்கு ஆரோக்கியமாகவும், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறவும், அன்றாடம் உடலுக்கு சிறிது உழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.

ஆனால் தற்போது பல ஆண் களுக்கும் சிக்ஸ் பேக் மீது அதிக நாட்டம் உள்ளதால், அதைப் பெற கடுமையான டயட் மற்றும் அளவுக்கு அதிகமான உடற் பயிற் சியையும் செய்கின்றனர். 
ஆனால் பாடிபில்டிங் துறையில் இருப்பவர் களுக்கு இது சரியான தாக இருக்குமே தவிர, அலுவலக வேலை புரிபவர்கள் எதிலும் அளவாக இருப்பதே சிறந்தது.

சரி, இப்போது அளவுக்கு அதிகமான உடற் பயிற்சி ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவுமா, இல்லையா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தீவிர எடை பயிற்சி

தீவிரமான எடை பயிற்சியை மேற் கொள்ளும் போது, உடல் மிகவும் விறு விறுப்பாக இருக்கும்.
அதிகமாக உடற்பயிற்சி செய்தால் நல்ல  தூக்கம் பெற முடியுமா? #Exercise
ஆனால் அதே சமயம் உடல் மற்றும் மனம் அதிகப் படியான எடையைத் தூக்கிய தால்,  இரவில் தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். 

மேலும் மன நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். மொத்தத்தில் ஒட்டு மொத்த உடலின் செயல்பாடும் பாதிக்கப்படும்.

ரசாயன கலப்படம் இல்லாத மாம்பழம் கண்டறிவது எப்படி?

ஆய்வு

ஆராய்ச்சி யாளர்கள் ஆய்வில் கலந்து கொண்டவர் களை இரு குழுக்களாகப் பிரித்து, அவர்களை பல்வேறு உடற் பயிற்சிகளில் ஈடுபடச் செய்து, அவர்களது தூக்கம், செயல்பாடு, மனநிலை போன்ற வற்றை ஆராய்ந்தனர்.
அதிகமாக உடற்பயிற்சி செய்தால் நல்ல  தூக்கம் பெற முடியுமா? #Exercise
ஆய்வின் முடிவு

ஒரு வார ஆய்விற்கு பின், அளவுக்கு அதிகமான உடற் பயிற்சியில் ஈடுபட்ட வர்களுக்கு கோபம், டென்சன், மன இறுக்கம், சோர்வு, மனநிலை யில் ஏற்றத் தாழ்வு, தூக்க மின்மை போன்ற பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்தது.

காரணம் என்ன?

அதிகமான அளவில் உடற் பயிற்சியில் ஈடுபட்ட தால், உடலில் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் அளவு அதிகரித் துள்ளது தெரிய வந்தது.

எப்போது உடலானது கடுமை யாக அழுத்தத் திற்குட்படு கிறதோடு, அப்போது உடலில் மன அழுத்த ஹார்மோன் களான கார்டிசோல் மற்றும் அட்ரினலின் அதிகமாக வெளியிடப் பட்டு, தூக்கத்தில் இடையூறை ஏற்படு த்தும்.

நோரெபினிஃப்ரைன் உடற்பயிற்சியை அளவுக்கு அதிகமாக செய்யும் போது நோரெபினிஃப்ரைன் என்னும் ஹார்மோன் அதிகம் வெளியிடப் படுகிறது. 

இந்த ஹார்மோன் இதயத் துடிப்பு, தசைகளில் இரத்த ஓட்டம் போன்ற வற்றை அதிகரிப் பதோடு, மனதை விழிப்புணர் வுடன் வைத்துக் கொள்ளும். 
அதிகமாக உடற்பயிற்சி செய்தால் நல்ல  தூக்கம் பெற முடியுமா? #Exercise
மாலை வேளையில் இந்த ஹார்மோனின் அளவு அதிகம் இருந்தால், இரவில் தூக்கத்தைப் பெறுவது என்பது முடியாத ஒன்றாகி விடும். 

69 நாள் சூரியன் மறையாத தீவு !

கார்டிசோல் கார்டிசோல் மறுபுறம் கார்டிசோல் என்னும் ஹார்மோனின் அதிகமான வெளி யீட்டால், தசைகள் சுறு சுறுப்புடன் இருக்கும். 

இதனால் உடல் ஓய்வு பெறுவதைத் தள்ளிப் போட்டு, இரவு நேரத்தில் தூக்கத்தைப் பெற முடியாமல் செய்யும்.
Tags:
Privacy and cookie settings