மருத்துவமனையில் திருமணம் செய்த கேன்சர் நோயாளி !

இங்கிலாந்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டிருந்த ரே கெர்ஷா தனது காதலியை மருத்துவ மனையிலேயே மணம் முடித்துள்ளார்.
மருத்துவமனையில் திருமணம் செய்த கேன்சர் நோயாளி !
இங்கிலாந்தில் வசிக்கும் ரே கெர்ஷா மற்றும் ட்ரேசி புரூக்ஸ் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்திரு ந்தனர்.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் ரே கெர்ஷா கேன்சர் நோயால் பாதிக்கப் பட்டார். இதையடுத்து ஸ்பிரிங் ஹில் மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப் பட்டார்.

மேலும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட அவர் சில நாள்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்யப் பட்டது. 24 மணி நேரங்களில் திருமணத்துக்குத் தேவையான அனைத்தும் வரவழைக்கப் பட்டது.

இதில் மிக முக்கியமாக பல தன்னார் வலர்களும் 'கிப்ட் ஆப் வெட்டிங்' என்ற அமைப்பும் இணைந்து பணியாற்றி யுள்ளன. 

பலர் தாமாக முன்வந்து திருமணத்துக்குத் தேவையான பொருள்களை வழங்கி யுள்ளனர். இதையடுத்து தனது காதலியின் விரலில் ரே மோதிரத்தை அணிவித்தார். 
மருத்துவ மனை ஊழியர்கள், மண மக்களின் நெருங்கிய உறவி னர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இத்திரு மணம் நடந்துள்ளது.

இன்னும் சில நாள்களே இணைந்து வாழும் இத்தம்பதிக்கு சமூக வலை தளங்களில் வாழ்த்துகள் குவிகிறது.
Tags:
Privacy and cookie settings