இஸ்லாமிய பிரேதங்களுக்கு கிராக்கி !

பிணங்களை கடத்தும் நான்கு நபர்கள் இந்தியா வின் மேற்கு வங்க மாநிலத்தில் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இஸ்லாமிய பிரேதங்களுக்கு கிராக்கி !
கைது செய்யப் பட்ட நபர்களிடம் இருந்து, 18 மனித எலும்புக் கூடு களையும், கல்லறை களில் இருந்து பெறப்பட்ட மனித எலும்பு பாகங் களையும் போலீஸார் கைப்பற்றி யுள்ளனர்.
குறித்த மனித எலும்புக் கூடுகள் நீரினால் நன்றாக கழுவப்பட்டு மிகவும் சுத்தமான நிலையில் காணப் பட்டதாக வும் போலீஸார் தெரிவிக் கின்றனர்.

கைது செய்யப் பட்ட நபர்களு க்கும் சர்வதேச கடத்தல் காரர்களு க்கும் தொடர்பு உள்ளதாக போலீஸார் தெரிவி க்கின்றனர்.

முஸ்லிம் களின் மயானங் களில் இருந்தே பிணங் களையும், எலும்புக் கூடுகளையும் கடத்துவ தாக முதல் கட்ட விசாரணை களின் மூலம் தெரிய வந்துள்ளது.
கடத்தப்படும் எலும்புக் கூடுகள் சர்தேச கடத்தல் காரர்களிடம் கூடுதலான பணத்திற்கு விற்பனை செய்யப் படுவதாக வும் போலீஸார் தெரிவிக் கின்றனர்.
2006 ஆண்டில் குறித்த மாநில த்தில் அதிகளவு பிணங்கள் கடத்தப் படுவதாக வும் 

இதனால் குறித்த பகுதியில் உள்ள கல்லறை களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற் கொண்டமை யால் கலவரம் வெடித்தது.

இதனை யடுத்து போலீஸார் மேற்கொண்ட சோதனை யின் போது 2006 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட மண்டை யோடுகள் மீட்கப்பட்டன.
இதனை யடுத்து குறித்தப் பகுதியில் கடுமை யான பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதும் குறித்த கடத்தல் முன்னெடுக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings