அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அண்மையில், உலக மயமாக்கலால் நாம் பெற்றதை விட இழந்ததே அதிகம். நம் நிறுவனங்கள் வெளி நாடுகளுக்குச் செல்கின்றன...
அதோடு நம் வேலை வாய்ப்புகளும். உலக மயமாக்க லால் நம் பொருளா தாரம் சிதைகிறது. உலக மயமாக் கலை மீள்வாசிப்பு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறோம் என்றார்.
இது ஏதோ குளுகுளு அறையில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்க அதிபர் பேசிய பேச்சு இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று சுலபமாக கடந்து சென்று விட முடியாது.
ஆம், அவரது உரைக்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இன்னும் கூர்மை யாகச் சொல்ல வேண்டு மென்றால், பன்னி ரண்டாம் வகுப்பில் 1,120 மதிப் பெண்கள் பெற்ற சேலத்தைச் சேர்ந்த சுதர்சன்,
பொறியி யலைத் தேர்ந்தெடுக் காமல் கலைப் பிரிவில் ஏதோ ஒரு படிப்பை தேர்ந்தெடுத் ததற்கும் தமிழகத் தில் கடந்த ஐந்தாண் டுகளில் 20 கல்லூரிகள்,
தங்கள் கல்வி நிலையத்தை மூட அனுமதிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சி லிடம் விண்ணப் பித்ததற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
உலக மயமும் பொறியியல் கல்லூரிகளும்
இந்தியச் சந்தை யானது தொண்ணூறு களில், உலக மயமாக் கலுக்குப் பின் திறந்து விடப் பட்ட பின்னர், எங்கு திறமை கொட்டிக் கிடக்கிறதோ,
எங்கு சல்லிசான விலையில் ஊழியர்கள் கொட்டிக் கிடக்கிறார் களோ, அந்தப் பகுதியை நோக்கி நிறுவன ங்கள் படை யெடுத்தன.
அமெரிக்க நிறுவனங்கள் ஆசியாவு க்கு வந்தன அல்லது அமெரிக்கா தன் வேலைகளை ஆசியாவுக்கு அவுட்சோர்சிங் கொடுத்தது. நம்மவர்க ளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
வேலை வாய்ப்பு என்றால் ஏதோ சாதாரண வேலையும், சம்பளமும் இல்லை. இந்த வேலை வாய்ப்பு என்ற பதத்தைக் கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தோ மென்றால், அவ்வளவு பளபளப் பாக இருந்தது.
உண்மையில் நமக்கு பொறியியல் பிடிக்கிறதா, நம் பிள்ளைக்குப் பொறியியல் வருமா என்றெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ள வில்லை.
எல்லோரும் அந்த வேலைக்காக ஏங்கினார்கள்... அந்த படிப்பைப் படித்தார்கள்.
சாமானிய மக்களை எந்த அளவுக்கு ஈர்த்ததோ, அதை விட அதிக மாக கல்வியை வணிகமாக மட்டும் பார்த்தவர்களை இந்த மாற்றம் ஈர்த்தது.
ஆம், 30 ஏக்கர் நிலமும், பெரும் பணமும் வைத்திருந்தவர்கள் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கினார்கள். எங்கும் புற்றீசல் போல இந்திய நிலங்களில் பொறியியல் கல்லூரிகள் படரத் தொடங்கின.
32 மாவட்டங்கள் உள்ள மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கிற தென்றால்... இது எந்த வீச்சில் பரவியது என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஒரே இடத்தில் இரு பொறியியல் கல்லூரிகள் என மண்ணிற்கு வெளியே இதன் கிளைகள் கட்டங் களாய் வானம் நோக்கி எழுந்தன.
உலக மயம் என்னும் ஒரு மந்திரச் சொல், நிலச்சுவான் தாரர்களை யும், சாராய முதலாளி களையும் கல்வித் தந்தை ஆக்கியது.
பொறியியல் மாணவர்கள்
பொறியியல் துறை என்பது அழிவற்ற துறை தான். எப்போதும் அதற்கான தேவை இருக்கத் தான் செய்யும். புதிய ஆய்வு களும், கண்டு பிடிப்பு களும் எப்போதும் இந்தப் பூவுலகுக்குத் தேவை தான்.
வேலை வாய்ப்பு என்பதே சிக்கலாக இருக்கும் இந்தியச் சூழலில், நம்மவர்கள் ஆய்வுக்காகக் கல்வி கற்பது, புதிய கண்டு பிடிப்புகளுக் காகக் கல்வி கற்பது என்பது அரிதினும் அரிது.
சந்தையில் எந்தக் கல்விக்குத் தேவை இருக்கிறதோ, அந்தக் கல்வியைத் தான் நம் பிள்ளைகள் படிப்பார்கள். பெற்றோர் களும் அதைத் தானே தேர்ந்தெடு க்கத் தூண்டு வார்கள்.
அப்படி ஒரு தூண்டு தலில் நம் பிள்ளைகள் தேர்ந்தெடுத்த பெரும் பாலான பொறியியல் கல்லூரி களில் எந்த உள்கட்ட மைப்பு வசதியும் இல்லை. திறமை யான ஆசிரியர் களும் இல்லை.
தங்கள் நிலத்தை விற்று, இது போன்ற கல்லூரி களில் படிப்பை முடித்து வெளியே சென்றவர்களின் வேலை கேள்விக் குறியானது.
பல லட்சங்களைச் செலவு செய்து பொறியியல் படித்த வர்கள், சேவைத் துறையில் கடைசி வரிசையில் நிற்கும் பி.பி.ஓ.க்களில் எட்டாயிர த்துக்கும்
பத்தாயி ரத்தும் பணிக்குச் சேர்ந் தார்கள். கொஞ்சம் கொஞ்ச மாக இந்த மாய உலகத்தின் பளபளப்பு உதிரத் தொடங்கியது.
உண்மையில் பொறியியல் மீதும் புது கண்டு பிடிப்புகள் மீதும் விருப்பம் கொண்ட வர்கள், முன்னேறிச் செல்லச் செல்ல.... இன்னொரு பெருங் கூட்டம் சாரை சாரையாக கீழே விழுந்தது.
பொறியியல் மாணவர் களுக்கு பொறியியல் துறை மீதான நாட்டம் குறையத் தொடங் கியது.
மாணவர் களுக்கு மட்டுமல்ல, கல்வியை வணிக மாக மட்டும் பார்த்து பொறியியல் கல்லூரி களைத் தொடங்கிய கல்வித் தந்தைகளு க்கும்.
சேவை மனப் பான்மை யில் இங்கு யாரும், கல்வி நிலைய த்தைத் திறக்க வில்லை தானே...? லாபம் மட்டுமே குறிக்கோள்.
அந்த லாபத்தில் விரிசல் விழத் தொடங்கி யதும் கல்வித் தந்தைகள் தங்கள் குழந்தை களைக் கொல்லத் தொடங்கி னார்கள்.
ஆம், கல்வி நிறுவன த்தை மூடத் தொடங்கி னார்கள். கடந்த 5 ஆண்டு களில் மட்டும் 507 கல்வி நிலையங் களை மூட அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் அனுமதித் திருக்கிறது.
இதில் பெரும் பாலானவை பொறியியல் கல்லூரிகள். 2016 - 2017 கால கட்டத்தில் மட்டும் 92 கல்வி நிலைய ங்கள், தங்கள் நிலைய த்தை மூட அனுமதி கோரியிருக் கின்றன.
தமிழகத் தில் மட்டும் 2013 - 2017 வரை, 20 பொறியியல் கல்லூரிகள், தங்கள் கல்லூரியை மூட அனுமதி கோரியிருக் கின்றன.
ட்ரம்ப் இசத்தின் காலம் இது
நம் பொறியியல் மாணவர் களுக்கு வேலை கிடைக் காமல் போனதற்கு, தரமற்ற கல்லூரிகள், விருப்ப மில்லாமல் வேலைக்காக மட்டும் குறிப்பிட்ட படிப்பைத் தேர்ந்தெடுத்தது போன்றவை காரணங்களாக இருந்தாலும்,
இதற்கு முதன்மையான காரணம் ட்ரம்பிசம் மற்றும் உலக மயத்தின் வீழ்ச்சி! உலக மயம் எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ, அவ்வளவு வேகமாக வீழவும் தொடங்கி யிருக்கிறது.
ஆம், உலக மயத்தால் நம் வேலை வாய்ப்புகள் வெளியே செல்கின்றன. 'அமெரிக்க ர்கள் வேலை வாய்ப்பு களை இழக்கிறா ர்கள்' என்ற கோஷம் எழத் தொடங்கி விட்டது.
அமெரிக்கா மட்டுமல்ல... கடந்த 5 ஆண்டு களாக இந்தக் கோஷம் அரபு நாடுகள் உள்பட எங்கும் ஒலிக்கத் தொடங்கி விட்டன.
மேற்கத்திய நிறுவன ங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியர் களை வேலை க்கு எடுப்பதை குறைத்துக் கொள்ளத் தொடங்கின. அப்படியே எடுத்தாலும், மிகக் குறைந்த ஊதியத்துக்கு மட்டுமே எடுக்கிறது.
அமெரிக்கா விலுள்ள இந்திய நிறுவன ங்கள், அமெரிக்கர் களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மண்ணின் மக்களுக்கே வேலை’ என்ற கோஷம் எழத் தொடங்கி விட்டது.
ட்ரம்பிசத்தின் இந்தப் பாதையில் உலகம் பயணிக்கத் தொடங்கி விட்ட இந்தச் சூழலை, பொறியியல் கல்வியின் வீழ்ச்சியோடு கொஞ்சம் பொருத்திப் பார்த்தால்,
இந்தியக் கல்வித் துறை எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்.
கல்வி என்பது நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்து வதற்காகவும், நம் அறிவை விரிவாக்கு வதற்காகவும் இருக்க வேண்டும்.
அப்படிச் செய்யாமல், சந்தையின் தேவைக்காக மட்டும் கல்வியைத் தேர்ந்தெடுத்தால், சந்தையின் வீழ்ச்சியோடு நம்முடைய வீழ்ச்சியும் தொடங்கும்.
இப்போது இந்திய பொறியியல் துறையில் அந்த வீழ்ச்சி தான் நடந்து கொண்டிரு க்கிறது.
நிச்சய மற்ற இந்திய பொறியியல் துறையின் எதிர் காலத்தோடு, தம் எதிர் காலத்தைப் பொருத்திக் கொள்ள நம் மாண வர்கள் விரும்ப வில்லை. மாணவர்கள் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கி விட்டனர்.
கல்லூரி களும் மூடப் பட்டு வருகின்றன. ட்ரம்பிசம் இன்னும் உச்சத்து க்குச் செல்லும் போது நிச்சயம் இன்னும் அதிகமான பொறியி யல் கல்லூரிகள் மூடப்படும்.
உலக மயத்தை வரவேற்று, ஒட்டுண்ணிப் பொருளா தாரத்தில் திளைத்த இந்திய அரசியல் வாதிகள், கொள்கை வடிவமைப் பாளர்களும், இந்திய வீழ்ச் சியைப் புரிந்து கொள்ளாமல்,
டிரம்பி சத்தை ஆய்வுக்கு உட்படுத் தாமல், இனி பொறியியல் கல்வித் துறையின் எதிர் காலம் எப்படி இருக்கும் என்று சிந்திக் காமல்,
கைகட்டி ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்கிறது. உண்மை யில் அரசுகள், நம் மாணவர் களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம், இது!