கடத்தப்பட்ட தன் உறவினரை மீட்ட டெல்லி வீராங்கனை !

தேசிய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஒருவர், கடத்தப்பட்ட தன் உறவினரை மீட்க, கடத்தல் காரர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் காப்பாற்றி யுள்ளார்.
கடத்தப்பட்ட தன் உறவினரை மீட்ட டெல்லி வீராங்கனை !
டெல்லியைச் சேர்ந்த 33 வயதான துப்பாக்கிச் சுடுதல் வீராங் கனை ஆயிஷா ஃபலக். ஆறு ஆண்டுகளாக துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்டு வருபவர். 

தனக்கென பிரத்யேக உரிமத்துடன் கூடிய துப்பாக்கி வைத்துள்ளார். தன் கணவரின் தம்பி, கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டு மிரட்டப் படுவதை அறிந்த ஆயிஷா, போலீஸாருடன் இணைந்து தானே களத்தில் இறங்கினார்.

25,000 பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப் பட்டதைத் தொடர்ந்து, ஆயிஷா தன் கணவருடன் பணத்தை எடுத்துக் கொண்டு கடத்தல் காரர்கள் அழைத்த இடத் துக்குச் சென்றார்.

போலீஸார் மறைவாக இருந்து கண்காணி த்துள்ளனர். பணத்தைப் பெற்றுக் கொண்டதும், 

கடத்தல் காரர்கள் ஆயிஷா தம்பதி யினரைத் தாக்க முற்பட, தன்னிட மிருந்த துப்பாக்கி யால் அவர்களைக் காலில் சுட்டு, உறவினரை மீட்டுள்ளார்.
போலீஸாரின் பாராட்டு களைப் பெற்ற ஆயிஷா, ‘நான் ஆறு வருடங் களுக்கு முன்னர் துப்பாக்கிச் சுடுதலில் தேசிய அளவில் சாதனைகள் புரிந்துள்ளேன். 

தற்போது, இளம் பெண்களு க்கு தற்காப்பு வகுப்புகள் எடுத்து வருகிறேன். எப்போதும் கையில் துப்பாக்கி இருக்கும். 

அப்போதைய சூழலில், நான் கற்றுக் கொடுத்த வித்தை களேயே பயன் படுத்த வேண்டிய சூழல் உருவா கியது’ எனக் கூறினார்.
Tags:
Privacy and cookie settings