ரஷியாவை சேர்ந்தவர்கள் மார்கரிடா, சர்கே தம்பதி. இவர்களுக்கு 12 வயதில் குறைபாடுடைய மகன் உள்ளான்.
இந்நிலையில் மார்கரிடா வுக்கும், சர்கேவுக்கும் இடையில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் பிரிந்து விட முடிவு செய்தனர்.
இதனை யடுத்து நீதிமன்ற த்தில் விவாக ரத்து கோரினர். இந்த வழக்கை விசாரித்த விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தர விட்டது.
மேலும் மார்கரி டாவுக்கு ஆதரவாக, கணவரின் வீட்டில் மனைவிக்கும் பங்கு உண்டு.
அதனால் இருவரும் வீட்டை சரி பாதியாக பிரித்து கொள்ளலாம் எனறும் நீதி மன்றம் ஆலோ சனை வழங்கி வழக்கை முடித்து வைத்தது.
விவாக ரத்து கிடைத்த மகிழ்ச்சி யில் மார்கரிடா நிம்மதி யாக வீட்டு மாடியில் மகனுடன் தூங் கினார். மறு நாள் காலை அறையை விட்டு வெளியே வந்தவர் அதிர்ச்சி யடைந்து விட்டார்.
மாடிப்படி ஆரம்பி க்கும் இடத்தில் மிகப் பெரிய சுவர் கட்டப் பட்டிரு ந்தது. இதனால் மாடிப்படி முழுவதும் சுவர் மூலம் அடைக் கப்பட்டி ருந்தது. இது குறித்து தனது கணவன் சர்கே விடம் கேட்டிரு க்கிறார் மார்கரிடா.
அதற்கு பதிலளித்த சர்கே நீதிபதி கூறிய படி வீட்டை சரி பாதியாக பிரித்து விட்டேன். அதனால் நீ உன்னுடைய வீட்டில் புதிதாக மாடிப்படி கட்டிக் கொள் என்று கூறி விட்டு வெளியே கிளம்பி விட்டார்.
இதை யடுத்து மார்கரிடா போலீஸ் உதவியுடன் சுவரை இடித்து விட்டு, மீண்டும் நீதிமன்றத்தில் முறை யிட்டிருக்கிறார்.
Tags: