பிரபல சின்னத் திரை நடிகையும், செய்தி வாசிப்பாள ருமான மோனிகா சமூக வலை தளங்களில் மக்கள் பிரச்னைக்கான என் குரல் பலமா ஒலிச்சுட்டு தான் இருக்கும்.
இதை யாராலும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார். நடிகை மோனிகா சமீபகாலமாக மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறார்.
அதை அவர் வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த வீடியோக்கள் இணைய த்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் மோனிகா, ஜெயலலிதா இறந்த காலக்கட்டத்தில் பல குழப்பங்கள், சந்தேகங்கள், பிரச்னைகள் இருந்தது. .
இதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு, எழுச்சி இயக்கம் என்ற ஓர் இயக்க த்தை ஆரம்பித்தேன். அதில் நான் பேசும் எல்லா வீடியோக்களையும் பதிவிட்டேன்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சினு பார்க்காமல், மக்கள் நலனைச் சிந்திக்காத எல்லா அரசியல் கட்சிகளையும் எதிர்த்து குரல் கொடுத்தேன்.
உனக்கு எதுக்கு இந்த வேலை யெல்லாம். நடிக்கிறதோடு நிறுத்திக்கோ. இனி நீ அரசியல் பேசக் கூடாது. மீறி பேசினா நிறைய பிரச்னைகளை சந்திக்க ணும்னு மிரட்டல்கள் வந்தது.
அதே சமயம், நீங்க தொடர்ந்து தைரியமா பேசுங்கனு மக்கள் தரப்பில் ஆதரவும் வந்தது. யாருமே பேசாம இருப்பதால் தான் அரசியல் வாதிகள் தப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள்.
நான் தொடந்து பேசிக்கிட்டே தான் இருப்பேன்'னு சொல்லிட்டேன். நம்மில் பலரும் நடப்பு பிரச்னை களுக்கு ஏதாவது ஒரு வகையில் குரல் கொடுத்தாலும், அந்தப் பிரச்னை யோட மூலக் காரணத்தைப் பத்தி பெரிதாக பேசுவதில்லை.
நான் மூல காரணங் களைப் பேசுறதோடு, பிரச்னை கள் வந்தால் அதையும் எதிர் கொள்ளத் தயாரா இருக்கிறேன். பேசும் பிரச்னையின் ஆழ த்தையும் மக்களின் கருத்து களையும் தெரிஞ்சு கிட்டு,
அதை எப்படி மக்களுக்குக் கொண்டு போனால் பயன் தரும்னு யோசித்து தான் வீடியோவா வெளியிடுறேன்.
நான்கு பிரச்னைகள் இல்ல, நாற்ப தாயிரம் பிரச்னைகள் வந்தாலும், நாம குரல் கொடுக்காத வரைக்கும் அரசியல் வாதிகள் மக்களை ஏமாற்றி கொண்டு தான் இருப்பார்கள்.
17 வருடமாக மக்கள் மத்தியில் எனக்கான அடையாளத்தோடு தான் இருக்கேன்.
மக்களுக்கு நல்லது நடக்கணும் என்பது மட்டுமே என்னோட எண்ணம். அதே சமயம் நடிப்போடு நிறுத்திக்கோ அரசியல் பேசாத'னு யாரும் சொல்லா தீங்க என்று கூறி யுள்ளார்.