ஒடிசாவில் அரசு மருத்துவ மனையில் இறந்து போன குழந்தையின் சடலத்தை தெரு நாய் ஒன்று கடித்து தின்றதை அங்குள்ளவர்கள் செல் போனில் படம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
ஒடிசாவில் உள்ள கோரபுட் மாவட்டத்தில் ஜெய்போர் என்ற இடத்தில் அரசு மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது.
நேற்று நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வந்த உறவினர்கள் என ஏராளமா னோர் அங்கு நின்று கொண்டி ருந்தனர்.
அப்போது தெரு நாய் ஒன்று மருத்துவ மனைக்குள் ஓடிச் சென்று இறந்து கிடந்த குழந்தை யின் சடலம் ஒன்றை இழுத்து வந்துள்ளது.
பின்னர் அதை மருத்துவ மனைக்கு வெளியே கொண்டு வந்து தின்று கொண்டி ருந்தது. இதை அங்கு நின்று கொண்டிருந் தவர்கள் யாரும் நாயை விரட்ட வில்லை.
மாறாக தங்களிடம் இருந்த செல்போனில் கேமிரா மூலமாக அதை படம் பிடிக்கத் தொடங்கினர்.ஆனால் இதை மருத்துவ மனை ஊழியர்கள் மறுத்து ள்ளனர்.
இது குறித்து மருத்துவ மனை ஊழியர் சிதான்சு சதாபதி கூறுகையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு எனது சக ஊழியருடன் விரைந்து வந்தேன்.
அப்படி ஒரு சம்பவமே நடக்க வில்லை. அங்கு நாயும் இல்லை சடலமும் இல்லை. மேலும் மருத்துவ மனையில் இருந்து எந்த நோயா ளியும் மாயமாக வில்லை.
இது வெறும் புரளி என்றார். மேலும் இது தொடர் பாக போலீசில் புகார் தெரிவிக்கப் பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், படம் பிடிக்கப் பட்டதாக ஒரு சிலரின் மொபைல் போன்களை ஆய்வு செய்து வருகிறோம்.
மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.