கடந்த இரண்டாண் டுகளாக, இந்திய தீபகற்பப் பகுதியையும் தெற்காசியப் பகுதி யையும் வாட்டி வதைத்த எல் நினோ பருவ நிலை முடிவடைந்து விட்டதாக ஆஸ்திரேலிய வானிலைக் கழகம் அறிவித் துள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து, இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய பொது இயக்குநர் கே.ஜே. ரமேஷ் ராய்ட்டர் செய்தி நிறுவன த்துக்கு அளித்த பேட்டியில்...
'இந்த ஆண்டு இந்தியா வில் வழக்கத்தை விட அதிக மழையை எதிர் பார்க்கலாம். இந்தியப் பருவகால மழையின் மூலம் மட்டுமே விவசாயத்து க்குத் தேவை யான 70 சதவிகித த்தைப் பெறுகிறோம்.
பருத்தி, சோளம், அரிசி, கரும்பு போன்ற வற்றின் விளைச் சலுக்கு இந்த மழை யின் தேவை மிகவும் முக்கியம். போது மான மழை யில்லாமல் இவற்றின் விளைச்சல் பாதிக்கப் பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வரையான எங்கள் மதிப்பீட்டின் படி, வரப் போகும் பருவத்தை 96 சதவிகிதம் கணித் துள்ளோம்.
நல்லதொரு பருவ காலத்துக் கான சாதகமான சூழ்நிலை உருவாகி வருகிறது என்றே சொல்லலாம்' என்று தெரிவித் துள்ளார்.
பருவத்தில் பொய்த்துப் போகும் மழை, காட்டுத்தீ, வறட்சி, திடீர் வெள்ளம் போன்றவை எல் நினோவின் செயல்பாடு களாகச் சொல்லப் படும்.
அதெல்லாமே இந்தியா வில் நடந்ததாக ஆஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித் துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையும் எல்நினோவின் செயல் எனச் சொல்லும் அது,
இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான மழை பொழி வதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படத் துவங்கி விட்டதாகத் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
ஜூனில் தொடங்கி நான்கு மாதம் நடக்கும் 'தென் மேற்குப் பருவ மழை', நன்கு பொழி வதற்கான சூழல் தற்போதே தெரிவதாகவும்,
அதற்கான அறிகுறி தான் தமிழகத்தில் ஆங்காங்கே பெய்துவரும் கோடை மழை எனவும் குறிப்பிட்டுள்ளது.