உலகை பயமுறுத்தும் எல் நினோ | El Niño frightened the world !

சென்னையின் பெரு மழைக்கு முன்பும் சரி, பிறகும் சரி எல் நினோ (El Nino) என்ற பெயர் அதிகமாக அடிபடத் துவங்கியி ருக்கிறது. 


அதிலும் ஐ.நா சபையின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு எல் நினோவைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இதோ, எல் நினோவை பற்றிய பத்து தகவல்கள்...

1. 'எல் நினோ' என்பது ஸ்பானிய மொழி வார்த்தை. 'குட்டிப் பையன் அல்லது சிறுவன்' என்பது இதன் பொருள். டிசம்பர் மாதத்தை ஒட்டி அதாவது கிறிஸ்துமசை 

ஒட்டி நிகழும் வளிமண்டல மாற்ற நிகழ்வாத லால் குட்டிப் பையனைப் பொதுவாக 'குழந்தை ஏசு' என்ற பொருள் படும் படியும் அழைக் கிறார்கள். பசுபிக் பெருங் கடலின் கிழக்குப் பகுதியின் 

மேற்பரப்பில் நடைபெறும் வெப்பநிலை மாறுபாடு மற்றும் இதன் உப விளைவாக உலகின் பெரும் பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் ஆகிய வற்றின் ஒட்டு மொத்தத் தொகுப்பே 'எல் நினோ.'

2. சுருக்கமாக எல் நினோ என அழைக்கப் பட்டாலும், 'எல் நினோ தெற்கத்திய அலைவு' (El Nino Southern Oscillation – ENSO) என முழுமை யாக அழைக்கப் படுவதே சரியானது. 

கிழக்கு பசுபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு ஏற்படும் போது வழக்கமாக கிழக்கி லிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் திசை யானது அதற்கு நேர்மாறாக மேற்கி லிருந்து கிழக்கு நோக்கி திசை மாறுகிறது, 

காற்று வீசும் திசையின் இந்த ஊசலாட்ட த்தின் காரண மாகவே 'எல் நினோ தெற்கத்திய அலைவு' என்று அழைக்கப் படுகிறது.

3. இத்தகைய காற்றின் திசை மாற்றத்தின் காரணமாக பசிபிக் பெருங்கடலின் காலநிலை முற்றிலு மாக மாற்ற மடைகிறது. 

வழக்கமான ஈரப்பதம் மற்றும் மித வெப்பம் கொண்ட பசிபிக்கின் மேற்குப் பகுதியானது எல் நினோவிற்குப் பிறகு ஈரப்பதம் இல்லாமல் குறைந்த மழையும் வறண்ட நிலையும் கொண்டதாக மாறுகிறது. 

இதே போல எல் நினோ நிகழ்வால் வழக்கமாக வறண்ட குளிர் மற்றும் குறைந்த மழையைக் கொண்ட பசிபிக்கின் கிழக்குப் பகுதி யானது ஈரப்பதமும் மித வெப்பமும் அதிக மழையும் கொண்டதாக மாற்ற மடைகிறது.

4. எல் நினோ நிகழ்வைப் பற்றிய முறையான அறிவியல் ரீதியான விளக்கம் மற்றும் கண்டு பிடிப்பு களுக்கு முன்பாகவே மனிதனின் பட்டறிவின் மூலமாக இந்நிகழ்வு கவனிக்கப் பட்டே வந்தது. 

பெரு நாட்டின் கடல் பகுதி மீனவர்களும் கப்பலோட் டிகளும் சில ஆண்டுகள் இடை வெளியில் கடலில் நீரோட்டம் வழக்கத்தை விட வெப்பமடை வதையும், மீன்களின் அளவு குறைந்து வருவதையும் கண்டறிந்தனர். 

இத்தகைய நிகழ்வுகளை அடுத்து வானிலையில் மாற்றமடை வதையும் கவனித்தே வந்தனர்.

5. தெற்கத்திய அலை வோட்டம் பற்றி அறிவியல் ரீதியான விளக்கத்தை முதன் முதலாக அளித்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த 'சர் கில்பர்ட் வாக்கர்'. 1923 -ம் ஆண்டு அவர் இதை கண்டறிந்தார். 

1904 -ம் ஆண்டு இந்திய வானவியல் ஆராய்ச்சி மையங் களின் தலைமை இயக்குநராக பணிபுரிந்த அவர் இந்திய வானிலை ஆராய்ச்சி யில், 

தான் பயின்ற கணிதம் மற்றும் புள்ளியி யலை பொருத்தி ஆய்வுகள் மேற் கொண்டார்.

இந்திய பருவ கால மழைகளை ஆராய்ந்ததில் சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதை அவர் கண்டறிந்தார். 

பதினைந்து ஆண்டுகள் இந்திய வானிலை மாற்றங்கள் மற்றும் பசிபிக் பிராந்திய வானிலையைக் கண்காணித்து வந்ததில் பசிபிக் 

மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் ஊசலாட்டம் போன்ற நிகழ்வு தெற்காசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கப் பகுதிகளின் 

வானிலை யில் மாற்றம் ஏற்படுத்து வதைக் கண்டறிந்தார். இந்த நிகழ்வு களையே 'எல் நினோ தெற்கு அலைவு' என்று அழைத்தார்.

6. எல் நினோவைப் பொறுத்த வரை, முன்கூட்டியே நம்மால் அதை துல்லி யமாக இதுவரை கணிக்க முடிந்த தில்லை. 

இரண்டு முதல் ஐந்து ஆண்டு களுக்கு ஒரு முறை இந்நிகழ்வு ஏற்படுகிறது. இந்த கால இடை வெளியில் எல் நினோ நிகழ்வு சில வாரங்கள் முதல் மாதம் வரை நீடிக்கிறது.

சில சமயங் களில் எல் நினோ நிகழ் வானது மூன்று ஆண்டு முதல் ஏழு ஆண்டு வரை யிலான கால இடைவெளியில் காணப் படுகிறது. 

இத்தகைய சமயங் களில் சில மாதங்கள் வரை கூட எல் நினோ நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.

7. எல் நினோ நிகழ்வின் விளைவாக தென் அமெரிக்காவை ஒட்டிய கடல் பகுதிகளில் முக்கிய மாக பெரு நாட்டின் கடல் பகுதிகளில் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. 

இதனால், மீன்களின் உணவூட்டப் பொருட் கள் குளிர்ச்சி யான நீரின் அடிப்பகுதி யில் தங்கி விடுவதால் மேற்பகுதி யின் வெப்பநீரில் ஊட்டப் பொருட் களின் தட்டுப்பாடு ஏற்படுகிறது, 

இதனால் மீன்கள் மடிகின்றன. இதனால் இக்கடல் பகுதிகளில் எல் நினோ நிகழ்வுக் காலத்தில் மீன்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும்.

8. 1982 மற்றும் 1983 ம் ஆண்டு ஏற்பட்ட எல் நினோ நிகழ்வின் விளைவாக உலகம் முழுக்க 2000க்கும் மேற்பட்டோர் மரண மடைந்தனர். 

பொருளாதார ரீதியாகவும் ஆயிரம் கோடிக்கும் மேலான இழப்பு ஏற்பட்டது. 1990-1995 -ம் ஆண்டு வரை மிக நீண்ட எல் நினோ நிகழ்வு ஏற்பட்டது. 

இக்காலப் பகுதியில் மிகப் பெரும் வெள்ளம், புயல் போன்றவை சில பகுதி களிலும் பஞ்சம், காட்டுத்தீ போன்றவை சில பகுதிகளிலும் நிகழ்ந்தது. ஆயிரம் ஆண்டு காலத்தின் பெரும் பேரழிவாக இது கருதப் படுகிறது.

1997-1998 -ம் ஆண்டு எல் நினோ நிகழப் போவதை முன் கூட்டியே நம்மால் கணிக்க முடிந்தது என்றாலும், உலகம் முழுவதும் ஏற்பட்ட 2000க்கும் மேற் பட்ட உயிரிழப்பை தடுக்க முடிய வில்லை.

9. எல் நினோ நிகழ்வால் உலகின் பல பகுதிகளில் பெரு மழை, வறட்சி போன்றவை நிலவி பெரும் சேதத்தை ஏற்படுத் தினாலும் எல் நினோ நிகழ் வால் சில நன்மை களும் இருக்கின்றன. 

வளி மண்டல த்தின் உயரத்தில் வேகமாக கிழக்கு நோக்கி வீசும் 'ஜெட் காற்றோட் டங்கள்' இக்காலப் பகுதியில் பெரும் பாலான புயல்களை வழி நடத்துவ தாக இருக்கின்றன.


எல் நினோ நிகழ்வால் இந்த ஜெட் காற்றோட்ட ங்கள் மாற்றம் பெறுகின்றன. இதனால் பெரும் புயல்கள் வலுவிழக் கின்றன. சில பகுதிகளில் வானிலை மாற்றங் களில் நல்ல விளைவை ஏற்படுத் துகின்றன.

10. எல் நினோ நிகழ்விற்கு அப்படியே எதிர் மாறானது லா நினா ஆகும். எல் நினோ எவ்வாறு சிறுவன் எனப் பொருள் கொண்டதோ அதே போல லா நினா என்றால் ' சிறுமி' என்று பொருள் ஆகும். 

லா நினா நிகழ்வால் தென் அமெரிக்க கடல் பகுதியில் வழக்கத் துக்கு மாறாக அதிக வறட்சியும் குளிர்ச்சியும் ஒருங்கே நிகழும். 

மேற்கு பசுபிக் கடல் பகுதி மிதவெப்ப மாகவும் அதிக ஈரப்பதமும் மற்றும் அதிக மழையும் இருக்கும்.

பொதுவாக எல் நினோ வை அடுத்து லா நினா நிகழும். ஆனால், எல்லா நேரங்களில் சிறுவனை அடுத்து சிறுமி வரமாட்டாள்.
Tags:
Privacy and cookie settings