தந்தை கொத்தடிமை.. மகள் பத்தாவது பாஸ்... உண்மைக் கதை !

பாகுபலி படத்தில் எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரம், கட்டப்பா. மாபெரும் வீரராக அரசக் குடும்பத்தின் அடிமையாக வருவார். ராஜா காலத்து கதை என்பதால்,
தந்தை கொத்தடிமை.. மகள் பத்தாவது பாஸ்... உண்மைக் கதை !
ஒருவர் அடிமை யாக இருப்பது நமக்குப் பெரிய வியப்பை அளிக்க வில்லை. ஆனால், நாம் வாழும் இந்தக் காலத்தில் கூட மனிதனைக் கொத்தடி மையாக நடத்தும் அவலம் இருக்கிறது என்றால் ஜீரணிக்க முடிகிறதா? 

எங்கோ வெகு தூரத்தில் அல்ல; நமக்கு அருகில் தான். கொத்தடிமை விடுதலைப் பத்திர த்தைக் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் நிற்கும் புகைப் படம் அவ்வளவு வலி தருவ தாக இருக்கிறது.

விழுப்புரத்தி லிருந்து செஞ்சி செல்லும் வழியில் நாட்டா ர்மங்களம் அருகே உள்ளது வீராணாமூர். அந்த ஊர் ஏரியின் அருகில் 25 வீடுகள் உள்ளன. 

அங்கே வசிப்பவர்களில் அநேகம் பேர் கொத்தடி மைகளாக இருந்து மீட்கப் பட்டவர்களே. அதில் ஒரு வீட்டில் மனைவி, மகள் களோடு வசித்து வருகிறார் 

இருளர் பழங்குடியைச் சேர்ந்த சின்னசாமி (மேலே உள்ள படத்தில் கட்ட மிட்டு காட்டியி ருப்பவர்). மரம் வெட்டச் செல்வது, 

விவசாய வேலை என கூலி வேலை க்குச் சென்றால் தான் வீட்டின் அன்றைய அடுப்பு எரியும். இவர் குடும்பமே கொத்தடி மையாக இருந்தது. அது பற்றி சின்னசாமி கூறுகை யில்...

“நான் ஏழாவது படிச்சிட்டு இருக்கும் போது, எங்க அப்பா வாங்கின கடனுக் காக என்னையும் அழைச்சுட்டு போனாங்க. எங்கே ஏதுன்னு தெரியல. 
அது ஒரு செங்கல் சூளை. அங்கே எங்களை மாதிரி நிறைய பேரு இருந் தாங்க. நேரம் காலம் தெரியாம வேலை செய்யணும். தலைவலி, காய்ச்சல்னா கூட கொஞ்ச நேரம் உட்காரவுட மாட்டாங்க. 

சூளைப் பக்கத்துல ஒரு குடிசைப் போட்டுட்டு அங்கேயே கிடக்கணும். மழை னாலும் வெய்யிலு ன்னாலும் அங்கேதான். குடிசைக் குள்ளே தேளு, பாம்பெல்லாம் வரும்.

ஊருல சொந்தக் காரங்க கல்யாணம் ன்னாலும் சரி, யாராச்சும் செத்துப் போனாலும் சரி, வுட மாட்டாங்க. 

என்னோட மாமா பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க, அப்பா ஏற்பாடு செஞ்சாரு. கல்யாண த்துக்காக ஒரு வாரம் லீவு கேட்டேன். 

'அதுக்கு எதுக்கு ஒரு வாரம்? போனோமா... கோயில்ல வெச்சு தாலி கட்டி, அழைச்சுட்டு வந்தோமானு இரு'னு சொன்னாங்க. 

கெஞ்சிக் கூத்தாடி லீவு வாங்குனேன். கல்யாணம் முடிஞ்சு லெட்சுமி யையும் சூளை வேலைக்கே அழைச் சுட்டுப் போயிட்டேன். 

வேற வழி எனக்குத் தெரியல. ஒரு நாள் சம்பளம்னு ஒண்ணு சொல்வாங்க. அப்பறம் அதுல கடனுக்குப் பிடிச்சி கிட்டேனு சொல்லி பாதியைத் தான் கொடுப் பாங்க. 

ஊருல ரொம்ப நெருங்கின சொந்தத்துல யாராவது செத்துட்டா, எங்க ரெண்டு பேருல ஒருத்தரை வேலைப் பார்க்க சொல்லிட்டு, ஒருத்தரை மட்டும் அனுப்பு வாங்க. 
இரண்டு பேரும் சேர்ந்து போனா திரும்பி வர மாட்டோம்னு விட மாட்டாங்க சொல்லும் போதே அந்த நினைவு களுக்குச் சென்று குரல் உடைகிறது சின்ன சாமிக்கு. ஓரிரு நிமிடங்கள் மெளனமாக இருந்து விட்டு தொடர்ந்தார்.

“வெளியு லகத்துல என்ன நடக்கு துன்னே தெரியாது. பொழுது விடிஞ்சா வேலை, பொழுது சாஞ்சா குடிசைனு கிடந்தோம். அங்கே தான் சங்கீதா பொறந்தா. 

அவ பொறந்த மூணு, நாலு வருஷத்துல தான் எங்களுக்கு விடிவு காலமே வந்துச்சுது. அருண் என்கிறவர் போராடி எங்ககூட இருந்த 72 பேருக்கும் கொத்தடிமை யிலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தாரு. 

ஆனா, அதுக்கு அவர் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்ச மில்லே. ஒரு மாசம் கடுமையா போராடினப் புறம் தான் நாங்க வெளியே வர முடிஞ்சுது. செங்கல் சூளையி லேயே இருபது வருஷ த்துக்கு மேல வாழ்க்கை போயிடுச்சு.

சங்கீதா

எனக்கு மூணு பொண்ணுங்க. மூத்த பொண்ணு சங்கீதா இப்போ பத்தாவது பாஸ் பண்ணி யிருக்கா. எங்க பக்கத்திலே பத்தாம் கிளாஸ் போன மொத ஆளு சங்கீதா தான். அவ ஆசைப் படறதைப் படிக்க வைக்கணும். 

கூலி வேலையில கிடைக்கிற வருமானம் வாய்க்கு, வயித் துக்குமே சரியா இருக்கு. எப்படி யாவது கஷ்டப் பட்டு படிக்க வெச்சுட லாம்னு நினைச்சா, 

சாதி சான்றிதழே கொடுக்க மாட்டேங் கிறாங்க. திண்டிவனம் சப் கலெக்டரு கிட்ட போய் மனு கொடுத்தேன். 

அவரு ‘செஞ்சிக்குப் போய் கொடுங்க’னு சொன்னாரு. அதிலேருந்து மாத்தி மாத்தி அலையறேன், ஒண்ணும் நடந்த பாடு இல்லே" - ஆதங்க த்தோடு கூறுகிறார் சின்னசாமி.
வீராணாமூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் சங்கீதா, அந்தப் பகுதியின் பழங்குடி இருளர் சமூகத்தி லிருந்து முதல் நபராக பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றி ருக்கிறார். 

அவரை அந்தப் பகுதி மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த மகிழ்ச்சியை சங்கீதா வின் முகத்திலும் குரலிலும் காண முடிகிறது.

"236 மார்க் எடுத்தி ருக்கேன். இன்னும் எதிர் பார்த்தேன். ஆனா, இதுவும் ஒண்ணும் குறைச்ச மார்க் இல்லையே. டியூசன் போக வசதியு மில்லே, 

நேரமு மில்லே. வீட்லேர்ந்து கிளம்பி, ஸ்கூல் போய்ட்டு திரும்பி வர்றதுக்குத் தான் நேரம் இருக்கும். 

வீட்ல நேரம் கிடைச்ச எல்லாம் படிச்சேன். எங்கூட படிச்ச புள்ளைங்க போன் நம்பர்கூட எங்கிட்ட இல்லே. அதனால, அவங்க என்ன மார்க்னு தெரியல. 

சயின்ஸ் சப்ஜெக்ட் படிக்க ணும்னு ஆசை. எங்க தெருவுல எட்டாவது வரைக்கும் படிக்கிற பசங்க ளுக்கு நானே டியூசன் எடுக்கிறேன். அவங் களுக்கு கத்துக் கொடுக்கிறது சந்தோஷமா இருக்கும். 

சில பாடங்கள திருப்பிப் படிக்கிறது எனக்கே உதவியா இருக்கு. இந்தப் பகுதியி லேர்ந்து இன்னும் நெறைய பேரு படிச்சி மேல வரணும். 

அதுக்கு என்னால முடிஞ்சதை செய்யணும். அது தான் மனசுல எப்பவும் இருக்கும். மத்த தெல்லாம் கல்யாணி ஐயா பார்த்துப்பார்" என்று கூறினார் சங்கீதா.
பேராசிரியர் பிரபா கல்வி மணியைத் தான் சங்கீதா, கல்யாணி எனக் குறிப்பிடுகிறார். ஒடுக்கப் பட்டிரு க்கும் இருளர் சமூகத்தி னரின் 

அடிப்படை உரிமை களுக் காகத் தொடர்ந்து போராடி வருபவர் பேராசிரியர் கல்வி மணி, அவரிடம் சங்கீதா பற்றி கேட்டோம்.

"முதலில் சங்கீதா வுக்கு என் வாழ்த்துகள். ரொம்ப நல்லப் பொண்ணு. சின்னக் குழந்தையா இருக்கும் போதே கொத்த டிமையா இருந்த பொண்ணு. 

'எனக்கு மார்க் பெரிய விஷய மில்லே. பாஸ் பண்ணினாலே எல்லாரு க்கும் விழா எடுத்து கொண் டாடும் ஆளு நான். 

இந்தச் கல்வி மணி சமூகப் பின்னணி யிலிருந்து ஒரு பொண்ணு பள்ளிக் கூடம் போய், பத்தாம் வகுப்பு வரை வர்றது சாதாரண விஷய மில்லே. 

சங்கீதா இன்னும் நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போவாங்க. என்னைக் கேட்டா, படிக்கிறதுக் காக ஏங்கி கெடக்கிற புள்ளைங் களுக்கு முதலில் வாய்ப்பு கொடுக் கணும். 

அப்பத் தானே அவங்க திறமை தெரியும். ரோஜான்னு ஒரு பழங்குடிப் பொண்ணு பத்தாம் வகுப்பில் ரொம்ப குறைச் சலான மார்க்கில் பாஸ் பண்ணி னாங்க, 
ப்ளஸ் டூ தேர்வில் அதை விட, நல்ல பெர்சன்ட் எடுத்து பாஸ் பண்ணினாங்க. காலேஜ்ல இன்னும் அதிகா மாச்சு. அப்படித் தான் வாய்ப்பு கொடுத்துப் பார்க்கணும்.

பள்ளிக் கூடத்துல ஆறாது படிக்கும் போதே பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் இவற்றோட சேர்த்து சாதி சான்றி தழும் கொடுக் கணும்னு அரசாங்கம் சொல்லி யிருக்கு. 

ஆனா, நடை முறையில் இருளர் பழங்குடி புள்ளைங் களுக்கு மட்டும் சாதிச் சான்றிதழ் கிடைக் கிறதே இல்லே. 

அடுத்த வருசம், அடுத்த வருசம்னு தள்ளிக் கிட்டே போறாங்க. பாருங்க, சங்கீதா பத்தாவது முடிச்சும் சாதிச் சான்றிதழ் கிடைக்கலே. 

இப்பவும் அதுக்கான ஆர்ப்பாட்ட த்துக்குத் தான் நோட்டீஸ் ரெடி பண்ணிட்டு இருக்கேன். கிடைக்கிற வரைக்கும் கேட்டுக் கிட்டே இருக்கணும்" என ஆதங்க த்துடன் முடித்தார்.

அந்தப் பகுதியில் மலை வாழ் மக்களின் நலனுக் காகச் செயல்பட்டு வரும் ராஜேஸ், "வெள்ளம் வந்தப்போ பல பகுதிகளுக்கு நிவாரணம் கிடைச்சுது, 
ஆனால், இவங் களுக்கு எதுவும் போய்ச் சேரலை. அப்பத் தான் நாங்க அந்தப் பகுதிக்குப் போனோம். 

ரேஷன் கார்டுல ஆரம்பிச்சு, எந்த ஒரு அடிப்படை யான விஷயமும் இவங் களுக்கு முறையாக கிடைக்கிற தில்லை. சின்னச் சின்ன விஷய த்துக்கும் பெரும் போராட்டம் தான். 
தந்தை கொத்தடிமை.. மகள் பத்தாவது பாஸ்... உண்மைக் கதை !
ஆனாலும் அங்கே யிருந்து ஒரு பொண்ணு படிச்சு அடுத்த கட்டத்துக்குப் போறது, எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. 

நண்பர்களின் உதவி யோடு அவங்களுக்குத் தேவை யானதை முடிஞ்ச வரை செஞ்சுட்டு இருக்கோம்' என்கிறார்.

கல்வி மட்டுமே எவ்வளவு அடர்த்தியான இருட்டையும் கிழித்து ஒளி தரும் என்பதை சங்கீதா மிகத் தெளிவாக புரிந்து கொண்டி ருக்கிறார். 

அவரின் வெற்றி, அந்த மக்களின் வெற்றி! சங்கீதா போன்ற மாணவர் களுக்கு கல்வி கிடைப்பதில் இருக்கும் தடைகள் விலகட்டும்.
Tags:
Privacy and cookie settings