உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகு வதற்கு இன்னொரு வருக்கு நீங்கள் பணம் கொடுப் பீர்களா?
இந்த 28 வயது இளைஞர் அதைத் தான் செய்திருக்கிறார்.
"உறவை முறித்துக் கொள்வது என்பது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம். அந்த வேதனையை நான் நேரடியாக
அனுபவிப் பதற்கு பதிலாக இன்னொருவர் அனுபவிப்பது எளிமை யாக இருக்கும் என்று நினைத்தேன்," என்கிறார், ட்ரெவர் மெயர்ஸ் என்ற அந்த இளைஞர்.
அது எப்படி?
உறவுகளை முறிப்பதற் கென்றே ஒரு நிறுவனம் இருக்கிறது. ஆங்கில த்தில், `The Breakup Shop' என்று சொல்கி றார்கள். நம்ப முடிய வில்லையா? நிஜம் தான்.
அந்த நிறுவன த்தின் சேவையைத் தான் ட்ரெவர் நாடினார். அவர் இருப்பது கனடாவில்.
"எனக்கு ஒத்து வராது என்று தெரிந்ததும் ஒருசில குறுகிய கால நட்புக் களை பிரேக்அப் ஷாப் உதவி யுடன் தான் கைகழுவி விட்டேன்.
எப்படியி ருந்தாலும் நமக்காக உறவை முறிப்ப வர்கள் பணம் பெற்றுக் கொள்கி றார்கள்.
இதில் வருத்தப்பட ஒன்று மில்லை. இதை அடிக்கடி பயன் படுத்தா விட்டாலும். அதற்காக ஒரு நிறுவனம் இருப்பது சந்தோஷ மாக இருக் கிறது" என்கிறார் அவர்.
எப்படி உருவானது `உறவை முறிக்கும் கடை'?
கனடாவைச் சேர்ந்த சகோத ரர்கள் இவான் மற்றும் மெகென்ஸி கீஸ்ட் ஆகியோர் இணைந்து, 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதை உருவாக்கி னார்கள்.
ஆனால், அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டு மல்லவா?
மெகென்ஸியை காதலித்து வந்த ஒரு பெண், திடீரென அவரது வாழ்க்கை யில் இருந்து மறைந்து விட்டார். தினமும் சுற்றித் திரிந்து, உற்சாக மாக இருந்த அவரது மனம் துடித்தது.
ஆனால், தொலைபேசித் தொடர்பு கூட இல்லை. அனுப்பிய குறுந் தகவல் களுக்கும் காதலி யிடமிருந்து பதில் இல்லை.
பிரிவை நேரடி யாகச் சொல்லும் மன வலிமை அந்தக் காதலிக்கு இல்லை" என்றார் இவான்.
அந்தப் பிரிவால் பிறந்தது தான் `பிரேக்அப் ஷாப்'. அடுத்த ஒரே வாரத்தில் அந்த நிறுவனம் உருவானது.
காதலியோ, காதலனோ அல்லது நாம் நட்பு வைத்தி ருக்கும் எந்த ஒரு நபருடனோ உறவு முறிய வேண்டு மானால் அவருக்கு மொபைல் ஃபோனில் குறுந் தகவல்
அல்லது ஈ-மெயில் மூலம் தகவல் அனுப்ப குறைந்த பட்ச 10 கனடா டாலர் களை (6 பிரிட்டன் பவுண் டுகள்) கட்டண மாக வசூலிக் கிறது பிரேக்அப் ஷாப்.
அதிக பட்சமாக, குக்கீஸ் மற்றும் ஒயின் பாட்டில் ஆகிய பரிசுப் பொருட்க ளுடன் பிரேக்அப் பரிசுப் பெட்டி ஒன்றை அனுப்புவ தற்கான கட்டணம் 80 டாலர்கள்.
தகவல் களை எப்படி வேண்டு மானாலும் வடிவமை த்துக் கொள்ளலாம்.
ஆனால், தரக்குறை வாகவோ மனம் புண்படும் வகையிலோ எந்தத் தகவலை யும் தங்கள் நிறுவனம் அனுப்பாது என்கிறார் இவான்.