உச்சநீதி மன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கையால், 3000 த்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் தமிழக அரசுக்கு சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது
என்று தகவல் வெளியாகி யுள்ளது. இதனை யடுத்து விற்பனையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தீவிர ஆலோ சனையில் ஈடுபட் டுள்ளனர்.
தமிழக த்தில் அரசுக்கு அதிக அளவில் வருமானம் பெற்றுத் தரும் துறையாக இருப்பது டாஸ்மாக். மது விற்பனையில் கிடைக்கும் பெரிய அளவிலான வருவாய் தான்,
தமிழக அரசு செயல் படுத்தி வரும் பல்வேறு இலவச திட்டங் களுக்கு ஆதாரமாக இருக்கிறது என்று செய்திகள் வெளி யாகின.
அதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளும் கடுமை யாக அரசு நிர்வாக த்தை விமர்சித்து வந்தன.
இதனை யடுத்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, படிப்படியாக டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப் படும் என்றும், மதுவிலக்கு தமிழகத்தில் உறுதியாக அமல்படுத் தப்படும் என்றும் அறிவிப்பு வெளி யிட்டார்.
அதோடு, முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடியும், விற்பனை நேரத்தைக் குறைத்தும் உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த நிலையில், உச்சநீதி மன்றம் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட உத்தர விட்டது. இதனை யடுத்து தமிழக த்தில் மட்டும் 3303 டாஸ்மாக் கடைகள் அதிரடி யாக மூடப் பட்டன.
ஆனால் தமிழக அரசுத் தரப்பில் மூடப்பட்ட கடை களுக்கு மாற்று இடம் தேடும் நடவடி க்கைகள் முடுக்கி விடப்பட் டுள்ளன.
விழுப்புரம், கிருஷ்ணகிரி, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து
பொது மக்கள் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகி ன்றனர். இதனால் டாஸ்மாக் நிர்வாகம் பெரும் சிக்கலை சில நாட்களாக சந்தித்து வருகிறது.
டாஸ்மாக் நிர்வாக த்திற்கு தினமும் கிடைத்து வந்த வருமான மும் பாதியாகக் குறைந்து ள்ளதால் மாற்று வழியைக் கண்டு பிடிப்பதில் டாஸ்மாக் அதிகாரி கள் தீவிரமாகி யுள்ளனர்.
டாஸ்மாக் விற்பனை நிலவரம் குறித்தும், மூடப்பட்ட கடைகள் நிலவரம் குறித்தும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாநில நிர்வாகி ராமு நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "இந்த நிமிடம் வரையில், மாநில நெடுஞ் சாலைகளை மாவட்ட நெடுஞ் சாலைகளாக தரம் குறைக்கும்
நடவடிக் கையை தமிழக அரசு தீவிரப் படுத்த வில்லை. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடியட்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் காத்தி ருந்தனர்.
இப்போது தேர்தலும் ரத்துச் செய்யப் பட்டதால், நாளை முதல் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் புதிய கடைகள் திறப்பதில் அதிக வேகம் காட்டு வார்கள்.
டாஸ்மாக் வருமான த்தைப் பொறுத்த வரையில், கடந்த 10 நாட்களாக பாதி வருவாய் குறைந்து விட்டது.
முன்பு, நாள் ஒன்றுக்கு சராசரி யாக ரூ.80 கோடி அளவுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழக அரசுக்கு வருமானம் கிடைத்தது.
ஆனால் மொத்த முள்ள கடைகளில் பாதி கடைகள் மூடப் பட்டதால் வரு மானமும் பாதியாகக் குறைந்து விட்டது.
அதே போல மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய சுமார் 7 ஆயிரம் பேர் ஊழிய ர்களும் வேலையின்றி தவித்து வருகி றார்கள்.
அவர்களில் பலர் மாவட்டங்கள் தோறும் புதிய இடங்களை டாஸ்மாக் கடைகள் அமைக்க இடம் தேடி வருகிறார்கள்.
அரசைப் பொறுத்த வரையில் முழுமை யாக மது விலக்கு கொண்டு வர முயற்சிகள் எடுப்ப தாகத் தெரிய வில்லை. மாறாக, ராஜஸ்தான் போன்ற வடமாநில அரசுகள்,
மாநில நெடுஞ் சாலை களை மாவட்ட சாலை களாகத் தரம் குறைப் பதில் என்ன நடவடிக்கை எடுத் துள்ளன என்பதை அறிந்து கொள்ளவும் அதைத் தமிழக த்தில் அமல்படுத்து வதில் தான் ஆர்வம் காட்டுகிறது.
ஏன் எனில்,அரசின் பெரிய வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் திகழ் கின்றன.
இது வரையில், டாஸ்மாக் விற்பனை சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. குடோன் களில் சரக்குத் தேக்கம் ஏற்பட் டுள்ளது.
திறக்கப் பட்டுள்ள கடைகள் முன்பு கூட்டம் அலை மோதுகிறது. அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட் டுள்ளது. இது அரசுக்கே கூடுதல் தலை வலிதான்."என்றார்.
குடிநீர்த் தட்டுப்பாடு அதிகமாகி வரும் வேளை யில், தமிழக அரசின் கவனம் டாஸ்மாக் பக்கம் மட்டுமே திரும்பி யுள்ளது என்றும்
மக்கள் நலனை விட வருவாய் தான் முக்கியம் என அரசு அதிகாரிகள் செயல் படுகிறார்கள் என்றும் பொது மக்கள் கடுமையாகக் குற்றம் சாட்டு கிறார்கள்.