பத்திரிகை யாளர்களை அவ தூறாகப் பேசிய வழக்கில் ஆஜரா காததால், நடிகர்கள் சரத்குமார், சூர்யா, நடிகை ஸ்ரீபிரியா உட்பட எட்டு பேருக்கு,
நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தர விட்டுள்ளது.
சென்னை யில் 2009ஆம் ஆண்டு நடிகர் சங்கக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத் தில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விவேக், விஜயகுமார்,
சேரன், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகை யாளர்களை அவதூறாகப் பேசினர்.
இதைத் தொடர்ந்து, பத்திரிகை யாளர்களை அவதூ றாகப் பேசிய நடிகர், நடிகைகள் எட்டு பேர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ரொசாரியோ என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்ற த்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு, விசாரணை க்கு வரும்போ தெல்லாம் இவர்கள் ஆஜராவ தில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நீலகிரி நீதிமன்ற த்தில் இன்று விசாரணை க்கு வந்தது.
அப்போதும், எட்டு பேரும் ஆஜராக வில்லை. இதை யடுத்து, எட்டு பேருக்கும் பிணை யில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தர விட்டார்.