நான் படிச்ச துறைக்கு சம்மந்த மில்லாத வகையில தான், இப்போதைய என் வாழ்க்கை முறை இருக்குது. இதுக்கு, முன் கூட்டியே திட்ட மிடாதது தான் காரணம்.
என்னோட படிப்பி னையை, இப்ப இருக்கிற குழந்தை களுக்கு வரக் கூடா துன்னு ஆலோசனைக் கொடுக்கிறேன்.
தவிர எனக்குப் பிடிச்சு, செய்து கொண்டிரு க்கிற கைவினைப் பொருட்கள் தயாரிப்பை, கிராமத்துப் பள்ளிக் குழந்தை களுக்கும் இலவச மாகச் சொல்லிக் கொடுத்து மகிழ்ச்சி யடைகிறேன்.
இதுக்காக அடிக்கடி கிராமங் களை நோக்கிப் பயணிச்சு கிட்டு இருக்கேன்" என கல கலப்பாக பேசத் துவங்கு கிறார் இயற்கை ஆர்வலர் பர்வத வர்த்தினி.
“ஸ்கூல் லைஃப் முடிஞ்சு, சொந்த ஊரான திருச்செங்கோட் டுலயே இளநிலை ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சேன்.
அப்புறம் லக்னோ நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னால ஜியில முதுநிலை ஃபேஷன் மேனேஜ்மென்ட் படிச்சேன்.
படிச்ச படிப்புக்கு பிளேஸ்மென்ட் கிடைச்சு, சென்னையில சில மாசம் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல தினமும் செய்யும் மெக்கானி க்கல் லைஃப் வாழ்க்கை முறை எனக்கு பிடிக்கல.
சொந்தமா எதாச்சும் பிசினஸ் செய்யணும்; அதுவும் எனக்கு அதீத ஆர்வமி ருக்கும் ஆன்டி கிராஃப்ட் துறையாவும் இருக் கணும்னு முடி வெடுத்தேன்.
பயிற்சி அளிக்கும் பர்வதவர்த்தினி
எனக்குச் சின்ன வயசுல இருந்தே கையில கிடைக்கும் எளிமை யான, பயனில் லாமல் தூக்கி எறியும் பொருட்களை வெச்சு கிராஃப்ட் வொர்க் செய்றது ரொம்பவே பிடிக்கும்.
அந்த ஆர்வமே வேலையை விட்டுட்டு வந்த பிறகு, வீட்டுல இருந்த படியே விதவித மான கிராஃப்ட் வொர்க் செஞ்சு சேல்ஸ் பண்ற அளவுக்கு மாறினேன்.
சில வருஷத்துக்கு முன்னாடி, வானகரம் கிராமத்துல நடந்த இயற்கை ஆர்வலர் களுக்கான பயிற்சி வகுப்புல கலந்து கிட்டேன்.
அந்தப் பயிற்சி வகுப்பு, என்னை இயற்கைச் சார்ந்த வாழ்வி யலை நோக்கி பயணிக்கிற ஆர்வத்தைத் தூண்டுச்சு.
தவிர, வேறு ஒரு கிராமத்துல நிறைய ஏழைப் பெண் குழந்தைகள் கை, காது, கழுத்தில் எவ்வித ஆபரணங் களுமே இல்லாத நிலையைப் பார்த்தேன்.
இந்தச் சம்பவங்கள் எல்லாமே, ‘இனி நம்மாள முடிஞ்ச அளவுக்கு கிராமப்புற ஏழைக் குழந்தை களோடு பயணிக் கணும்’ங்கிற எண்ணத்தை ஏற்படுத்துச்சு.
அணிகலன்கள் அணிந் திருக்கும் குழந்தைகள்
அதன் படியே மூணு வருஷமா அடிக்கடி பல்வேறு கிராமங் களுக்குப் போய், அங்கிரு க்கும் குழந்தை களுக்கு இலவசமா கிராஃப்ட் வொர்க் சொல்லிக் கொடுத்து கிட்டு இருக்கேன்.
கிராமப்புறப் பகுதியில் இலவசமா கிடைக்கும் மயில் தோகை, கோழி இறகு, புறா இறகு, தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள், கிளிஞ்சல்கள், சங்கு, இலைகளை யெல்லாம் பயன் படுத்தி
குழந்தை களுக்கு ஆபரணங்கள் செய்ய சொல்லிக் கொடுக்கும் போது, உற்சாக மாக செய்ஞ்சு காட்டு வாங்க. அதை அவங்க போட்டு அழகு பார்க்கிறப்ப என் மகிழ்ச்சிக்கு விலையே இருக்காது.
ஏழ்மை நிலையால் காசுக் கொடுத்து எவ்வித ஆபரணங் களையும் வாங்க முடியாதக் குழந்தைகள், தாங்களே எளிமை யான முறையில நிறைய ஆபரணங் களை செஞ்சு பயன் படுத்திக் கிட்டு இருக்காங்க.
குழந்தை களுக்குப் பயிற்சி கொடுக்கும் இது மாதிரியான சமயங்கள்ல, அவங்களுக் குள்ள என்ன திறமை இருக்குங் கிறதை தெரிஞ் சுக்குவேன்.
என்னோட படிப்பும், இப்போ செய்யுற செயல் பாட்டுக்கும் சம்மந்த மில்லாத நிலை மற்றக் குழந்தை களுக்கும் வர வேண்டாம்னு
ஆலோசனை கொடுக் கிறேன்” என்பவர் அரசுப் பள்ளி மாண வர்கள் காகிதப் பையைப் பயன் படுத்த ஊக்கு விக்கிறார்.
காகிதப் பையுடன் மாணவர்கள்
“சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளை விக்கும் பிளாஸ்டிக் பைகளை என்னால முடிஞ்ச அளவுக்கு தடுக் கணும்னு, காகிதப் பையைத் தயாரிச்சு அதைத் தான் அதிக அளவில் பயன் படுத்திகிட்டு இருக்கேன்.
இதையே வளரும் குழந்தை களுக்கும் சொல்லித் தரணும்னு, நிறைய அரசுப் பள்ளி களுக்குப் போய், அங்கிரு க்கும் குழந்தை களுக்குச் சொல்லிக் கொடுக் கிறேன்.
அதன்படி நிறையக் குழந்தைகள் இப்போ காகிதப் பைகளை த்தான் பெரும் பாலும் பயன் படுத்திகிட்டு இருக்கிறாங்க.
குழந்தை களுடன் பயணிக்கும் இது மாதிரியான நிகழ்வுகள்ல நானும் குழந்தை யாகவே மாறிடுறேன்” எனப் புன்னகை க்கிறார் பர்வத வர்த்தினி.