ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுவது தொடர்பான மசோதாவுக்கு, அந்த நாட்டு அமைச்சரவை தமது ஒப்புதலை வழங்கியுள்ளது. ஜப்பான் நாட்டின் 125வது மன்னராக 83 வயது அகிஹிட்டோ இருந்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் வயோதிகம், உடல் நலக் குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார்.
மேலும், ஒரு கட்டத்தில் தமது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைப்பது தான் புத்தி சாலித்தன மானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மன்னர் அகிஹிட்டோ பதவி விலகி, ‘கிறிசாந்தமம்’ சிம்மாச னத்தை பட்டத்து இளவரசர் நருஹிட் டோவிடம் ஒப்படைப் பதற்கான சட்ட மசோதாவு க்கு ஜப்பான் அமைச் சரவை தமது ஒப்புதலை வழங்கியுது.
தற்போது ஜப்பானில் இம்பீரியல் இல்ல சட்டத்தில், மன்னர் பதவி விலகுவதற்கான விதி இல்லை. இதன் காரணமாக மன்னர் பதவி விலகுவதற்கான மசோதா தயாரிக்கப் பட்டது.
அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து இந்த மசோதா ஜப்பான் பாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது.
நடப்பு பாராளு மன்ற கூட்டத் தொடர் அடுத்த மாதம் இறுதியில் முடிகிற போது, குறித்த மசோதா நிறை வேற்றப் படும் என தகவல்கள் கூறுகி ன்றன.
2019-ம் ஆண்டு தொடக்க த்தில் இருந்து தற்போதைய கெங்கோ சகாப்தம் முடிவுக்கு வந்து, புதிய சகாப்தம் மலர இருக்கிறது.
மன்னர் அகிஹிட்டோ பதவி விலகிய பிறகு பட்டத்து இளவரசர் நருஹிட்டோ முறைப்படி மன்னராக முடி சூட்டப் படுவார்.
மன்னர் பதவி விலகும் நிலையில், மன்னர் குடும்ப உறுப்பினர் களின் எண்ணி க்கை குறைந்து வருவது அந்த நாட்டு மக்க ளிடையே வருத்த த்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப் படுகிறது.
ஜப்பான் மன்னர் குடும்ப உறுப்பி னர்களின் எண்ணிக்கை தற்போது 19 என உள்ளது. இதனிடையே இளவரசி மேக்கோ, பொது மக்களில் ஒருவரான கீ கொமுரு என்பவரை காதலித்து வருகிறார்.
அவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் இளவரசி அந்தஸ்தை விட்டுத் தருகிறார்.
எனவே அவரது திருமண த்துக்கு பின்னர் மன்னர் குடும்ப உறுப்பினர் களின் எண்ணி க்கை 18 ஆக குறைந்து விடும்.ஜப்பானில் கடந்த 200 ஆண்டு களில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை.
அங்கு கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர் தான் பதவி விலகி உள்ளார். அதன் பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.
அந்த வகையில், தற்போதைய ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகி புதிய சரித்திரம் படைக் கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.