கூகுள் பிறந்த போது அது ஒன்றும் புதிய ஐடியா அல்ல. அவர்களுக்கு முன்னால் இருபது க்கும் மேற்பட்ட தேடுபொறி இணைய தளங்கள் இருந்தன.
அதில் Altavista, Ask, Lycos, Yahoo குறிப்பிடத் தகுந்தவை. அதிலும் Yahoo பட்டையை கிளப்பிக் கொண்டி ருந்தது. பிறகு எப்படி கூகுள் வெற்றி பெற்றது?
இதைத் தெரிந்து கொள்ள அன்றிருந்த மற்ற தளங்கள் என்ன செய்தன என்பதைப் புரிந்து கொள்ள வேணும்.
யாஹூ உள்பட எல்லோரும் கலை, அறிவியல், விளையாட்டு, அரசியல், சினிமா என்று இணைய தளங் களை வகைபடுத்தி
அதற்குள் ஒவ்வொன் றாக கிளிக் செய்து உள்ளே உள்ளே சென்று நீங்கள் விரும்பிய தளத்தை அடையு மாறு செய்திருந் தார்கள். இடையில் நீங்கள் பத்து பதினெட்டு கிளிக்குகள் செய்ய வேண்டும்.
சர்ச் பாக்ஸ் இருந்தாலும் அதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக் காமல் வகை பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அவர்களின் சர்ச் பாக்ஸ்-ம் அவ்வளவு துல்லியமான முடிவுகளைத் தரவில்லை.
கூகுள் தங்கள் தேடுபொறி யின் அல்காரி தத்தை கூர்மை படுத்தி னார்கள். கேட்டகிரி-ஐ தூக்கி னார்கள்.
தேடுபொறியின் சர்ச் பாக்ஸ் தான் ஒரே வழி என்றா க்கியது. இதுதான் Usability என்கிற பயன் திறன் கூகுளின் அல்காரிதம் இணையதள முகவரியை மட்டும் வைத்து ரிசல்ட் கொடுக்க வில்லை.
இணைய தளங்களின் உள்ளே இருந்த கண்டென்ட் களைப் படித்து தனது Indexல் வைத்துக் கொண்டது.
ஆகவே தேடு பொறியில் இட்ட கட்டளை க்குத் தகுந்தவாறு கண்டென் ட்களை ஆராய்ந்து அந்தத் தளங் களை வரிசை படுத்திக் காட்டியது.
கசமுசா என்றிருந்த தளங் களுக்கு மத்தியில் மிக எளிய வடிவமைப்பு மக்களை கவர்ந்தது. லோகோ அதற்கு கீழே ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் (Textbox) அதற்கு கீழே ஒரு பட்டன். அவ்வளவு தான் மொத்த தளமும்.
ஐஸ்கிரிம்க்கு ஜெர்ரி வைத்தது மாதிரி “Feeling Lucky” என்று ஒரு துணை பட்டன். அதாவது துல்லிய மான ரிசல்ட்டை கணித்து நேரே அந்த தளத்திற்கே கொண்டு சென்று விடும்.
இந்த ஒரு பட்டன் செய்த வேலை கூகுளை இன்னும் மேலே கொண்டு சென்றது. ஒருவர் இந்த பட்டனை கிளிக்கி அவர் விரும்பிய தளத்தைச் சென்ற டைந்தார் என்றால் அடுத்து பேக் செல்ல மாட்டார்.
ஆக மக்கள் இந்த கீ- வேர்டு கொடுத்தால் இந்தத் தளம் தான் சரியான விடை என்பதைக் கூகுள் உறுதி செய்து கொள்ளும். கூகுள் இதை பேடன்ட் செய்து வைத்துக் கொண்டது.
அதனால் யாஹூ உள்ளிட்ட பிற தளங்கள் அதை முயற்சிக்க வில்லை. ஆனால் தேவை யில்லாத பிற லிங்க்கு களை நீக்கி இருக்கலாம்.
அதைச் செய்ய வில்லை. மாறாக நிறைய புதிய சேவைகளை அறிமுகப் படுத்தினா ர்கள். அது அவர்க ளுக்குப் பயன் கொடுக்கவே செய்தது.
அந்தச் சேவைகள் எல்லா வற்றையும் அவர்களின் முகப்பு தளத்தில் கொடுத் தார்கள். வடிவமை ப்பில் கோட்டை விட்டார்கள்.
எளிமை யாகச் சொல்கிறேன். மனித உடம்பிற்குள் ஆயிரம் உறுப்புகள் இருக்கி ன்றன. அவை அத்தனையும் கண்ணாடி போல வெளியில் தெரிந்தால் நன்றாக இருக்குமா..? அது தேவையா..?
அல்லது தோலினால் போர்த்தப் பட்டு தேவை யான உறுப்புகள் மட்டும் தெரிவது சிறந்ததா? அதைத் தாம் கூகுள் செய்து காட்டினார்கள்.
‘கூகுள்’ அங்கிருந்து பயன் திறனை கச்சித மாகப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களின் எல்லா தயாரிப் புகளிலும் எளிமை யான வடிவமை ப்பைத் தொடர்ந்து உறுதி செய்து கொண்டே இருந்தார்கள்.
ஆனாலும் யானைக்கும் அடி சறுக்கு மல்லவா.. கூகுளிற்கும் சறுக்கியது ஆர்குட் வழியாக. ஆர்குட் வந்த புதிதில் பலரும் இணைந்தார்கள்.
ஆர்குட்டை ஜிமெயில் கணக் குடன் இணைக்க இன்னும் எளிமை யாக எல்லோ ரையும் சேர்த்தது.
எல்லோரும் அதிலேயே பலியாக கிடந்தார்கள். எல்லாம் ஃபேஸ்புக் வரும் வரை தான். பேஸ்புக் வந்தபிறகு ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன’ கதையாக ஆர்குட் மாறியது.
காரணம் பேஸ்புக் மிக எளிமை யான வடிவமைப் பினால் நேரடியாக மக்க ளுடன் பேசியது. தனிநபர் தகவல் களின் பாதுகாப்பை உறுதிசெய்தது.
அதே சமயம் ஒரு செய்தியை லைக் என்ற ஒரு பட்டன் மூலம் பலரிடம் கொண்டு சேர்த்தது. வடிவமை ப்பில் குழப்பிக் கொள்ளவே இல்லை.அதில் அவர்கள் கெடு பிடியுடனே இருந்தார்கள்.
ஆனால் இணைய தளம் லோடு (Loading) ஆகும் வேகத்தில் பிச்சு உதறினார்கள. இருந்த போதும் இன்றும் பேஸ்புக்கில் நிறைய குறைகள் இருக்கின்றன.
உங்களது பழைய பதிவுகளை தேடி எடுப்பது சிரமம். இதெல்லாம் எளிய வடிவமை ப்பிற்கு முன் எதுவுமே இல்லை என்று அந்தச் சிரம த்தையும் மக்கள் பொருட்படுத்த வில்லை.
பேஸ்புக் பரவலாக வந்தபிறகு ஆர்குட் என்னவோ செய்து பார்த்தார்கள். அவர்களை அறியாம லேயே யாஹூ செய்த அதே தவறு களைச் செய்தார்கள்.
எளிய வடிவமைப்பு காணாமல் போனது. ஆனாலும் பிரேசி லிலும் இந்தியா விலும் இது பெரு வாரியான மக்களை சேர்ந்திருந்தது.
ஆனால் அமெரிக்க மீடியாக்கள் பேஸ்புக்கை புகழ்ந்து எழுதும் போதெல்லாம் ஆர்குட்டை கழுவி ஊற்றி னார்கள்.
Google Standard-ஐ இது கேலிக் குரியதாக மாற்றியது. இதற்கு மேல் இதை விட்டு வைத்தால் நம்ம பேரை கெடுத்துடும் என்று 2014இல் மூடுவிழா நடத்தியது கூகுள்.
அப்போது இதற்கு மாற்றாக கூகுள் ப்ளஸ் கொண்டு வந்தார்கள். லைக் பட்டனிற்கு பதிலாக + பட்டன் கொண்டு வந்தார்கள்.
நல்லாத் தான் இருக்கு ஆனால், லேட்டுப்பா என்று மக்கள் ஒதுக்கி விட்டார்கள். ட்விட்டரையும் ஜிமெயில் டிசைனை சேர்த்து கூகுள்-பஸ் என்ற மைக்ரோ பிளாகிங் தளத்தைக் கொண்டு வந்தார்கள்.
அதுவும் தோல்வி. அடுத்தடுத்த தோல்வி களிலிருந்து ஆண்டிராய்ட் என்ற சூப்பர் டூப்பர் வெற்றி தான் கூகுளைக் காப்பா ற்றியது. இந்தச் சமயத்தில் யாஹூவின் மேனேஜ் மென்ட்டில் நிறைய மாற்றம் நிகழ்ந்தது.
கடைசி முயற்சியாக கூகுளி லிருந்தே ஒரு முக்கிய மான ஆளைக் கைப்பற்றி தலைமை செயல் அதிகாரி பதவி கொடுத்துப் பார்த்தார்கள்.
அவர்தான் கூகுள் தளத்தின் வடிவமை ப்பாளர் மரிசா மேயர். கூகுளின் பயன்திறன் கொண்ட எளிய வடிவமை ப்பிற்கும் இவ்வளவு பெரிய வெற்றி க்கும் காரணம் என்று அறியப் பட்டவர்.
ஆனால் கண் கெட்டபிறகு சூரிய வணக்கம் செய்து என்ன பயன்? அவரால் பெரியளவில் எதையும் மாற்ற முடிய வில்லை.
யாஹூவின் வடி வமைப்பில் ஒன்றைத் தூக்கினால் இன்னொன்று அடி வாங்கியது. இடியாப்பம் போல எது தலை எது வாலென்று தெரியாத அளவிற்கு சிக்கலாக இருந்தது.
மரிசா நிறைமாத கர்ப்பிணி யாக இருந்தாலும் அலுவலகம் வருவார் அந்தளவுக்கு சின்சியர் என்ற பெயரைத் தவிர்த்து யாஹூ வில் அவரால் பெயரைச் சம்பாதிக்க முடிய வில்லை.
இதற்கு மேல் விட்டு வைக்க முடியாது என்று கிடைத்த விலைக்கு 4.5பில்லியன் டாலர்களுக்கு வெரிசானிடம் விற்று விட்டார்கள் அதன் இயக்கு னர்கள்.