ஜூன் மாதம் ஹீரோயின் திருமணம்... பாவம் காதலர் !

சிரிப்பழகி நடிகையும், அக்கட தேசத்து வாரிசு நடிகரும் ஜூன் மாதம் திருமணம் செய்யப் போகிறார்கள்.
ஜூன் மாதம் ஹீரோயின் திருமணம்... பாவம் காதலர் !
ஹீரோயின் ஒப்புக் கொண்ட படங்களை வேகமாக முடிக்கிறார். இவர் களுக்கு இரண்டு முறை கல்யாணம் நடக்கப் போகிறதாம்.

இந்து முறைப்படி ஒரு முறையும், கிறிஸ்துவ முறைப்படி ஒரு முறையும் நடக்கப் போகிறது.

இடையில் இவர்கள் திருமணம் வெளி நாட்டில் நடக்கப் போகிறது என்கிற செய்திகள் கசிய மாமனார் நடிகரோ அதெல்லாம் இல்லை இந்தியா வில் தான் கல்யாணம் என்று கட்டமாகப் பதில் கொடுத்தார்.

என்ன விஷயம் என்று அக்கட தேசத்து ஊடகங்கள் துப்புத் துலக்கி னார்கள் (ரொம்ப முக்கியம்). அதில் கிடைத்த தகவல்கள் கொஞ்சம் குபீர் என்று கும்மி அடிக்கும் ரகம். 

ஆரம்பம் தொட்டே கல்யாணம் விஷய மாக காதலரு க்கும், நடிகை க்கும் பல காரசார விவாதங்கள் நடந்தி ருக்கிறது என்கிறார்கள்.
விஜய் மல்லை யாவின் ஆயிரம் கோடி ரூபாய் வீட்டில் முதலிரவு என்றார். காதலர் மறுத்தார். லண்டனில் கல்யாணம் என்றார் நடிகை. காதலர் கண்ணீர் விட்டார்.

மாமனார் நடிகர் பார்த்தார் கொந்தளித்து விட்டாராம். நாங்க சொல்றதை கேளு தாயி… என்று கடுபடிக்க. இப்பொது ஹீரோயின் கப்சிப். என்கி றார்கள் ஆந்திர துப்பறியும் மீடியாக்கள்.
Tags:
Privacy and cookie settings