கைரேகை என்பது நாம் கேள்விப் படாத புதிய டெக்னாலஜி இல்லை. பத்திரப் பதிவு அலுவலக த்தில் மற்றும் ஒருசில இடங்களில் நாம் கைரேகை வைத்த அனுபவம் இருக்கும்.
ஆனால் அதையே டிஜிட்ட லாக மாற்றி கொண்டு வந்துள்ள டெக்னாலஜி தான் தற்போது நாம் மொபைல் போன்களில் பயன் படுத்தும் பிங்கர் பிரிண்ட் சென்சார்.
நம்முடைய கைரேகை ஸ்கேன் செய்யப் பட்டு பயோ மெட்ரிக் மூலம் கைரேகை டேட்டாக்கள் சேமிக்கப் படுவதற்கு பெயர் தான் இந்த பிங்கர் பிரிண்ட் சென்சார்.
இந்த பிங்கர் பிரிண்ட் சென்சார் தற்போது செல்போனில் மட்டு மின்றி அலுவலக த்தில் வருகை பதிவேடு, ஆதார் அட்டை உள்பட பல இடங்களில் பயன் படுத்தப் படுகிறது,
இதன் டெக்னாலஜி மிக எளிமை யானது. நமது கைரேகைகள் எலக்ட்ரானிக் கோட் ஆக மாற்றப் பட்டு நமது டேட்டா பேஸில் பதிவு செய்யப் படும்.
ஒவ்வொரு முறையும் நமது கைரேகை அதில் பதிவு செய்யும் போது ஸ்கேனர் உதவியால் நமது டேட்டா பேஸ்கள் நமது வருகை பதிவையோ இன்ன பிற செயல் களையோ உறுதி செய்யும்.
ஆப்டிக்கல் ஸ்கேனர்:
நீங்கள் கைரேகை மிஷினில் உங்கள் விரலை வைத்தவுடன் அதில் உள்ள ஆப்டிக்கல் ஸ்கேனர்
உடனே ஒரு பிரைட்டான லைட்டை வெளிப் படுத்தி அதன் மூலம் உங்கள் ரேகையை டிஜிட்டல் போட்டோ வாக கம்ப்யூட்ட ரில் பதிவு செய்யும்.
CCD என்று கூறப்படும் சார்ஜ் கப்பிள் டிவைஸ் என்னும் மைக்ரோ சிப் அல்லது CMOS என்னும் இமேஜ் சென்சார் ஸ்கெனரின் உதவி யால் டிஜிட்டல் இமேஜ் ஆக மாற்றும்.
இந்த இமேஜ் தானாகவே கைரேகையை மட்டும் தனியாக எடுத்து அதை பார் கோட் ஆக மாற்றும். இதற்கு சில பேட்டர்ன் மேட்சிங் சாப்ட்வேர் உதவுகிறது.
கெப்பாசிட்டிவ் ஸ்கேனர்:
இந்த ஸ்கேனர் உங்கள் கைரேகையை எலக்ட்ரிக்கல் மூலம் அளவு செய்கிறது.
இந்த அளவின் மூலம் உங்கள் கைரேகை யில் உள்ள ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு இடை வெளியும் மிக துல்லிய மாக அளக்கப் படுகிறது.
ஐபோன் மற்றும் ஐபேட் களில் உள்ள டச் ஸ்க்ரீன் ஸ்கேனர் களின் வகையை சேர்ந்தது தான் இந்த கெப்பாசிட்டி ஸ்கேனர் என்பது குறிப்பிடத் தக்கது
எப்படி செயல்படுகிறது?
இந்த பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்ற அனைத்து பாதுகாப்பு வசதி களை விட மிகவும் பாதுகாப் பானது. இது எப்படி என்பதை பார்ப்போம்
முதலில் டிவைஸில் உள்ள LED வரிசை உங்கள் கைரேகையை பிரைட்டான லைட் முலம் ஸ்கேன் செய்கிறது.
கைரேகை யில் சென்ற பிரைட்டான லைட் மீண்டும் திரும்பி வந்து CCD அல்லது CMOS இமேஜ் சென்சாரில் உள்ள கிளாஸில் பதிவு செய்கிறது.
பின்னர் அல்காரிதம் மூலம் அந்த இமேஜ் பிரைட் மற்றும் லைட் என மாறி மாறி டெஸ்ட் செய்கிறது.
இதன் பின்னர் டிவைஸில் இருந்து ஒரு பீப் சத்தம் கேட்கும். பிராஸஸ் முடிந்து விட்டதை இந்த பீப் சத்தம் உறுதி செய்கிறது.
ஒரு வேளை சம்பந்தப் பட்டவர்கள் அல்லாமல் வேறு யாராவது தங்களது பிங்கரின் மூலம் முறை கேடாக செயல்பட முடிந்தால், அந்த கைரேகை யின் வரிகள்
மற்றும் கவுண்ட்கள் சமமில்லாத காரணத் தால் மீண்டும் முதல் ஸ்டெப்புக்கு தள்ளி விடும். எனவே இந்த முறையில் யாரும் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை.
இந்த இரண்டு டெஸ்ட் களுக்கு பின்னர் ஸ்கேனர் ஓகே என்று சொல்லும் வகையில் ஒரு பீப் சத்தம் கொடுக்கும் அல்லது வேறு வித கலரில் LED எரியும்.
இதை வைத்து பிராசஸ் முடிந்து விட்டதை உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப் பட்ட இமேஜ்கள் கம்ப்யூட் டரில் பாதுகாக் கப்பட்டு அடுத்த கட்ட பிராஸசஸ் செய்ய உதவுகிறது.