மெட்ரோ சுரங்கத்தில் தீ ஏற்பட்டால் எப்படி எதிர் கொள்வது?

திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்கப் பாதையில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இந்த சுரங்கப் பாதையில் தீ விபத்து ஏற்பட்டால்
மெட்ரோ சுரங்கத்தில் தீ ஏற்பட்டால் எப்படி எதிர் கொள்வது?
அதனை எப்படி எதிர் கொள்வது தொடர்பான பாதுகாப்பு முறைகளை மெட்ராே அதிகாரிகள் செய்துக் காட்டினர்.

சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைப் பதற்காக 45 கி.மீட்டர் தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

இதில் கணிசமான ரயில் தடம் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு வருகிறது.  

முதல் கட்டமாக கோயம் பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் மேம்பாலம் பணிகள் முடிந்த நிலையில், கடந்தாண்டு முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப் பட்டு வருகின்றன. 

இதைத் தொடர்ந்து சின்ன மலை - விமான நிலையம் மற்றும் செனாய் நகர் - கோயம்பேடு இடை யிலான சுரங்கப் பாதை களை நிறைவு செய்யும் பணிகள் முடி வடைந்தது. 
இதை யடுத்து, இரண்டாவது கட்ட மாக சின்ன மலை- கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப் பட்டது.

இதனிடையே, மூன்றாம் கட்டமாக திருமங்கலம்- நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. முழுக்க முழுக்க சுரங்கப் பாதை வழி யாகவே ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

இந்தநிலை யில் சுரங்கப் பாதையில் பாதுகாப்பு வழி முறைகள் பற்றி மெட்ரோ ரயில் அதிகாரிகள் இன்று பத்திரிகை யாளர்க ளுக்கு விளக்கினர். 
அப்போது, திடீரென சுரங்க ரயில் பாதையில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி எதிர் கொள்வது தொடர்பான பாதுகாப்பு முறை களை அதிகாரிகள் செய்துக் காட்டினர். 

சுரங்கப் பாதையில் நடந்த இந்த பாதுகாப்பு முறையை பார்த்து, அங்கிருந் தவர்களை மிரள வைத்தது.
Tags:
Privacy and cookie settings