அனைத்தையும் இழந்ததால் ஓ.பி.எஸ்ஸிடம் சேர்ந்தேன் !

அமைச்சர் பதவி உள்ளிட்டவற்றை இழந்து தான் ஓ.பி.எஸ் அணிக்கு வந்தேன் எனக் கூறியுள்ளார் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
அனைத்தையும் இழந்ததால் ஓ.பி.எஸ்ஸிடம் சேர்ந்தேன் !
அ.தி.மு.கவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தார் மாஃபா பாண்டியராஜன். ஓ.பி.எஸ் அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து வந்த பின்பு, அவரது அணிக்கு பாண்டியராஜன் வந்தார். 

இதை யடுத்து செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறை அமைச் சரானார். இதனிடையே, 'இருப்பதை இழந்து தான் ஓ.பி.எஸ் பக்கம் வந்தேன்', என பாண்டியராஜன் கூறி யுள்ளார்.

இன்று செய்தியாளர் களை சந்தித்த அவர், 'பிளஸ் 2 தேர்வில் ரேங்க் முறை ரத்து செய்யப் பட்டது வரவேற்கத் தக்கது. தற்போதைய பள்ளிக் கல்வித் துறை சிறப்பாக செயல் படுகிறது' எனக் கூறியுள்ளார். 
மேலும், நீட் தேர்வில் மாணவர்கள் நடத்தப்பட்ட விதம் கண்டிக்கத் தக்கது என அவர் கூறி யுள்ளார். 

அ.தி.மு.கவின் இரு அணிகளும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது' எனவும் மாஃபா பாண்டியராஜன் வலியுறுத்தி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings