உங்க வேலையை நீங்க பாருங்க, என் வேலையை நான் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு மும்பை புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினி காந்த்.
சென்னை கோடம் பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த வாரம் ரசிகர் களை ரஜினிகாந்த் சந்தித்தார்.
அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத் தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான அரசியல் தலைவர்கள் இருந்தும் பயனி ல்லை என்றும் போர் வரும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இதிலிருந்து அவரது அரசியல் பிரவேசம் உறுதியானது. இந்நிலையில் தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்றும் அரசியலில் ஈடுபடலாம்,
ஆனால் தமிழகத்தை ஆள கூடாது என்றும் பல்வேறு கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கருத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இந்நிலை யில் ரஜினி வரும் ஜூலை மாதம் தனிக்கட்சி தொடங்கு வார் என்று அவரது அண்ணன் சத்ய நாராயண ராவ் அறிவித் திருந்த நிலையில் அவர் பல்டி அடித்தார்.
இதனிடையே ரஜினி காந்த் இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்திக்க வுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தகவல் காட்டுத் தீ போல பரப்பப் பட்டதால் எங்கே அவர் கட்சி தொடங்கப் போகும் செய்தியை வெளியிடப் போகிறாரோ என்ற எதிர் பார்ப்பும் எழுந்தது.
ஆனால் அப்படி யெல்லாம் எந்த சந்திப்பு க்கும் திட்டம் இல்லை என்று அவரது செய்தித் தொடர் பாளர் மறுத்துள்ள தாக செய்திகள் வந்தன. இந்நிலையில் நாளை மும்பையில் ரஜினி நடக்கும் காலா படப்பிடிப்பு தொடங் குகிறது.
இதில் கலந்து கொள்ள மும்பை புறப்பட போயஸ் கார்டன் வீட்டி லிருந்து புறப்பட்ட ரஜினி யிடம் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியா ளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் என் வேலையை நான் பார்க்கிறேன்.
உங்க வேலையை நீங்க பாருங்க என்று சிரித்த படியே சொல்லி விட்டு சென்றார். அரசியல் குறித்து வேறு எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்க வில்லை.