ஜேர்மனி நாட்டில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாத பெற்றோர் களுக்கு 2,500 யூரோ வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடை முறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
ஜேர்மனியின் சுகாதார துறை அமைச் சரான Hermann Grohe என்பவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘தட்டம்மை போன்ற நோய்கள் தாக்கி உயிரி ழப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருவ தால் குழந்தை களுக்கு தடுப்பூசி போடுவதை கட்டாய மாக்க தீர்மானி க்கப்பட் டுள்ளது.
மேலும் குழந்தை களுக்கு தடுப்பூசி போடாமல் இருப்பது மற்றும் அதற்கான மருத்துவ ஆலோசனை களை பெறாமல் இருக்கும் பெற்றோர் களுக்கு 2,500 யூரோ வரை அபாரதம் விதிக்கப் படும்.
ஜேர்மனி யில் உள்ள எஸ்சான் நகரில் 3 குழந்தை களுக்கு தாயாரான ஒருவர் தட்டம்மை நோயிற்கு பலியாகி யுள்ளதை தொடர்ந்து இந்த அதிரடி நடவடி க்கை மேற் கொள்ளப் பட்டு வருகிறது.
இச்சட்டம் அடுத்த மாதம் முதல் நடை முறைக்கு வரவுள்ளது. இது மட்டு மில்லாமல் குழந்தைகள் மருத்துவ மனை மற்றும் மழலையர் பள்ளிகளு க்கு செல்லும் பெற்றோர் களிடம்
தடுப்பூசி போட்டதற் கான ஆவணங்கள் இருக்கி ன்றனவா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் அமைச்சர் தெரிவித் துள்ளார்.
அண்டை நாடுகளில் ஒன்றான இத்தாலியில் குழந்தை களுக்கு தடுப்பூசி போடா விட்டால்
அவர்களை அரசு பள்ளியில் சேர்க்க அனுமதிக் கப்பட மாட்டார்கள் என்ற சட்டம் கடந்த மாதம் முதல் அமுலுக்கு வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.