ஆசைக்கு உடன்படவில்லை என்றால் படம் இல்லை - லட்சுமிராய் !

ஆசைக்கு உடன் படாத நடிகைகள் படங்களி லிருந்து நீக்கப்படு கிறார்கள் என்று புகார் கூறி உள்ளார் லட்சுமிராய். இது பற்றி அவர் கூறியது: 
ஆசைக்கு உடன்படவில்லை என்றால் படம் இல்லை - லட்சுமிராய் !
தமிழில் நிறைய படங் களில் வாய்ப்பு வந்தாலும் கதா பாத்திரம் வலுவாக இல்லா ததால் ஏற்ப தில்லை. தற்போது, ‘யார்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். 

கடந்த ஒன்றரை வருட மாக இந்தியில் ஜூலி 2ம் பாகம் படத்தில் நடித்து வந்தேன். நான் நிறைய சாப்பிடுவேன். இந்த கதாபாத்திரத்துக்காக உணவுக் கட்டுப்பாடு இருந்து 11 கிலோ குறைத்தேன். 

பிறகு 17 கிலோ உடல் எடை ஏற்றினேன். போட்டோ ஷூட் எடுப்பதற் காக மீண்டும் 8 கிலோ எடை குறைத்தேன். 

ஒரே வேடத்துக்காக இத்தனை மாற்றங்களுக்கு உட்பட்ட தால் உடல் அளவிலும், மனதள விலும் பாதிக்கப் பட்டேன். 

இதனால் யாரை கண்டாலும் எதைப் பார்த்தாலும் எரிச்ச லாக வந்தது. எனது பெற்றோரும் நண்பர் களும் என்னை இந்த பாதிப்பி லிருந்து வெளிக் கொண்டு வந்தார்கள். 

திரைப் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதற் காக சிலர் தங்களை படுக்கைக்கு அழைப்ப தாக சில நடிகைகள் கூறுவது பற்றி கேட்கி றார்கள். அது போன்ற பிரச்னையை நான் சந்தித்த தில்லை. 

புதிதாக வருபவர்கள் இது போன்ற பிரச்னை களை எதிர் கொள்கிறார்கள். திரையு லகுக்கு வரும் சிலர் அதை சூதாட்டமாக கருதுவதும், ஜாலியாக பொழுது போக்க வருவதும் தான் இது போன்ற பிரச்னைக்கு காரணம். 
ஒரு சிலர், பிரபல நடிகைகளிடமே இது போல் அணுகுவ தால் அவர்கள் அதனை வெளிப் படையாக பேசுகிறார்கள். 

ஆசைக்கு உடன்படா விட்டால் அந்த நடிகை படத்தி லிருந்து தூக்கி எறியப் படுவது பற்றியும் கேள்விப் பட்டிருக்கிறேன். இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.
Tags:
Privacy and cookie settings