பல்கிஸ் தன்னை சிதைத்தவர்களை தண்டித்து நிரூபித்தவர் !

குஜராத்தில் 2002-ம் ஆண்டில் நடந்த கோர சம்பவம் அது. இன்று, இந்தியாவின் பிரதமராக ஆட்சி செய்து கொண்டிருக்கும் மோடி, அன்று குஜராத் மாநிலத்தின் முதல்வர்.
பல்கிஸ் தன்னை சிதைத்தவர்களை தண்டித்து நிரூபித்தவர் !
கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகான கலவரத்தில் பில்கிஸ் பானு சந்தித்த, நேர்ந்த கொடுமையை வார்த்தைகளில் வார்க்க முடியாது. 

6 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி யுள்ளனர். 

கர்ப்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்யும் வெறியை அந்த ஆண் களுக்கு கொடுத்தது எதுவாக இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

பாலியல் வன் கொடுமையில் பில்கிஸ் பானுவின் உடலை ரணமாக்கிய தோடு அந்தக் கும்பல் நிற்க வில்லை. அவரது குடும்ப உறுப்பி னர்களைக் கொன்று குவித்தனர். 

அவரின் மூன்று வயது குழந்தையை கல்லில் அடித்துக் கொன்றனர். மொத்த நம்பிக்கை யையும் சிதைத்து அவரது உயிரை மட்டுமே விட்டுச் சென்று ள்ளனர். 

இத்தனை கொடுமை களுக்கு பின்னும் ஒரு பெண் எழுந்து நின்று எதிரி களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித் தர போராடுவது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. 
குற்றத்தை நடத்தியி ருப்பவர்கள் ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கையில் அவர்கள் தப்பித்து விடவும் வாய்ப் புகள் அதிகம்.

ஆனால், அவரை உடலால் சிதைக்க முடிந்த வர்கள் அவர் மன உறுதி யிடம் தோற்றுப் போனார்கள். 

உறவு களையும் பெற்ற மகளையும் இழந்த அந்தப் பெண் மீண்டும் உயிரோடு வாழ வேண்டும் என்று நினைத்ததே தன்னை சிதைத்த வர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதற் காகத் தான். 

ஆம்! பாலியல் வல்லுறவால் பாதிக்கப் பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கவே மருத்து வர்கள் மறுத்து ள்ளனர். 

பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறை பில்கிஸ் பானுவின் புகாரைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் அலட்சி யமாக செயல் பட்டுள்ளது. 

தன்னை கொடுமைப் படுத்திய, அலட்சியப் படுத்திய யாரையும் அவர் விட்டு வைக்க வில்லை. 

அத்தனை பேர் மீதும் வழக்குத் தொடர்ந்தார். சட்ட த்தின் மீது அவர் கொண்ட நம்பிக்கை வீண் போவில்லை. அவரை பாலியல் பலாத்காரம் செய்த தற்காக 12 பேரை போலீசார் கைது செய்தனர். 
அவரிடம் புகாரை ஏற்காமல் அலட்சியம் காட்டிய ஐந்து போலீசார் மற்றும் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கத் தவறிய இரண்டு மருத்து வர்களும் கைது செய்யப் பட்டனர். 

குஜாரா த்தின் அகமதாபாத்தில் வழக்கு விசாரணை நடந்தால் குற்ற வாளிகள் சாட்சியங் களை அழிக்க வாய்ப் புள்ளது என்ற அவரது முறை யீட்டை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டது. 

இந்த வழக்கு விசார ணையை மும்பை சி.பி.ஐ.க்கு மாற்றியது. அவர் மன உறுதி யோடு தொடர்ந்து போரா டினார். இழப்புகள் தந்த வலி அவரை உறங்க விடாமல் நீதிக் கேட்டுத் துரத்தியது. 

குற்ற வாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது பில்கிஸ் பானு வுக்கு மட்டுமே கிடைத்த வெற்றி யன்று. 

ஒட்டு மொத்த இந்தியப் பெண்களின் மனசாட்சியாக பில்கிஸ் பானுவை உயரச் செய்து ள்ளது. பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் அதிலிருந்து மீள்வது அவ்வளவு சாதாரணம் கிடையாது. 

உடலில் ரணம் ஆறிய பின்னும் கூட மனம் அடையும் காயம் ஆறாது. தூக்க த்திலும், விழிப்பிலும் துரத்திக் கொல்லும். பாதிக்கப் பட்ட பின் ஆளும் அரசையும், 
ஆட்சியாள ர்ளையும் எதிர்த்து வழக்குப் பதிவு செய்யும் போது தொடர்ந்து மிரட்டல் களை அனுபவிக்க வேண்டி வரும். பாது காப்பும், இருப் பிடமும் தேடி ஓட வேண்டிய அவலமும் நேரும். 

மொத்த வாழ்க் கையும் ரணமாகிப் போன பெண் அதன் பின் உயிர் வாழும் ஒவ்வொரு நிமிடமும் மரணத்தின் விளிம்பில் இருப்பது போலத் தான். அந்த வாழ்வையே நீதிக்கான போராட்டமாக அவர் தொடர்ந்துள்ளார். 

15 ஆண்டு களுக்குப் பின் அவரது நெற்றியில் நீதி தேவதை வெற்றித் திலகமிட்டு வாழ்த்தியிருக்கிறாள்.

பில்கிஸ் பானுவின் வெற்றியை வழக்கறிஞர் ச.பாலமுருகன் தனது முகநூலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார், 2002-ம் ஆண்டு குஜராத்தில் அரசும் இந்துத்துவா வெறியர்கள் நடத்தியவன் முறையில் 

உயிர் பிழைக்க தனது குடும்பம் குழந்தைகள் உடன் 19 வயதான பில்கிஸ் பானு ஓடும் போது 30-க்கும் மேற்பட்ட வெறியர்கள் அவர் களைத் தாக்கினர். 

அவள் பாலியல் வல்லுறவு எதிர் கொண்ட போது அவள் குழந்தை கண்ணெதிரே கொல்லப் பட்டது. அவளது குடும்ப த்தினர் 14 பேரும் கொல்லப் பட்டனர். அதில் 4 பெண்கள் மற்றும் 4 குழந்தை களும் அடக்கம். 

உயிர்ப் பிழைத்த அவள் கொடுத்த புகாரைப் பதிவு செய்ய மறுத்தது காவல் துறை. பெரும் போராட்ட த்துக்குப் பின் வழக்கு பதிவு செய்த போதும் வழக்கை நீர்த்துப் போகச் செய்ய 
எல்லா முயற்சி களையும் எடுத்தது காவல் துறை. நீண்ட சட்டப் போராட்ட த்துக்கு பின் மும்பை உயர்நீதி மன்றம் குற்றவாளி களுக்கு தண்ட னையை உறுதி செய்துள்ளது. 

பாதிக்கப் பட்டோர் தங்கள் நியாயங் களுக்காக நடத்தும் போராட்டம் வலியும், சோர்வும், அச்சமும் நிறைந்தது. 

அதனைக் கடந்து ஜனநாயக சமூகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய சகோதரி பில்கிஸ் பானு இந்தப் பெண்களின் மனசாட்சியாக எழுந்துள்ளார். 

வாழ்க சகோதரி, என்று பதிவு செய்துள்ளார். நம்பிக்கையின் கரம் பற்றி தங்களுக்கு நடக்கும் கொடுமை களுக்கு எதிராக போராடத் துணியும் பெண்களின் மனசாட்சியும் இனி பில்கிஸ் பானு தான்.
Tags:
Privacy and cookie settings