சென்னை போலீஸ் கமிஷனராக தேர்தல் ஆணையத்தால் டிக் அடிக்கப்பட்டு தேர்வானவர் கரன்சின்ஹா. சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் இரண்டாவது கமிஷனராக பணியாற்றியவர்.
சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப் பேற்ற சில நாட்களி லேயே, கமிஷனரின் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்,
கரன்சின்ஹா. வாய் மொழியாக அவர் போட்ட ஐந்து கட்டளைகள் போலீ சாருக்கும், பொது மக்களுக்கும் ஒரே நேரத்தில் பிடித்துப் போயி ருக்கிறது.
(1) மைக், கேமராக்களுக்கு என் அறையில் அனுமதி இல்லை.
(2) அலுவலக நேரத்தில் பொது மக்கள், கீழுள்ள அதிகாரிகள் தொலை பேசியில் தொடர்பு கொள்ளலாம், போனை நானே எடுப்பேன். செல்போன் தவிர்க்கவும்.
(3) பொது மக்களின் அன்றாட வாழ்க்கை யில் போக்கு வரத்து உள்ளிட்ட அடிப்படை விஷயங் களில் குறை இருக்கக் கூடாது.
நேரம், இடம் குறிப் பிடாமல் திடீர் ஆய்வு செய்வேன் ஆய்வில் குறை தெரிந்தால் சம்மந்தப் பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
(4) காலை 10 மணி முதல் பொது மக்களின் குறைகளை நானே மனுக் களாக வாங்குவேன், அதே போல் குடியிருப்பு மாற்றம், பணியிட மாற்றம்,
விடுப்பு போன்ற கோரிக்கை களுடன் வரும் போலீசாரின் மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி தீர்வு காணப் படும். வார விடுமுறை நாட்கள் தவிர்த்து அனைத்து இடத் திலும் இது நடக்கும்.
(5) நடை முறைக்கு ஏற்றபடி என்னென்ன மாற்றங் களை போலீசில் புகுத்தலாம் என்பதை தயக்கம் இல்லாமல் என்னிடம் நேரடி யாகச் சொல் லலாம். சிறந்த ஆலோசனை க்குப் பரிசும், பாராட்டும் உண்டு.
# அந்த ஐந்து கட்டளை கள் இதுதான். "கமிஷனர் போட்ட கட்டளை கள் அப்படியே நடை முறைக்கு வந்து விட்டது,
அதே போல் கமிஷன ரிடம் எந்தக் குறையைக் கொண்டு போனாலும் அதற்கு தீர்வு கிடைத்து விடுகிறது" என்பதே கமிஷன ரேட்டில் பேச்சாக இருக்கிறது.
கமிஷனர் கரன்சின்ஹா வின் தோற்றமும், செயல் பாடும் பொது மக்களை வேறு மாதிரியாக அவரைப் பற்றி யோசிக்க வைத்தி ருக்கிறது. ஆம், அவரை செல்லமாக " இந்தியன் தாத்தா கமல்" என்கி றார்கள்.
எல்லாம் சரி ! கமிஷனர் கரன்சின்ஹா சென்னை கமிஷனராக நீடிப்பாரா?
"எனக்கு என்னமோ இங்க இருக்கிற சூழ்நிலையே பிடிக் கலைப்பா... மத்திய அரசுப் பணிக்கு எழுதிக் கொடுத்தி ருக்கேன், சீக்கிரம் வந்திடும், கிளம்பி டுவேன்...
அதுக்குள்ளே சென்னை மக்களுக்கு ஏதாவது செய்து விட்டுப் போகணும்" என்று நெருங்கிய சகாக் களிடம் கரன்சின்ஹா சொல்லி வருவதாக வரும் தகவல் பொய்யாக இருக்க வேண்டும்