மும்பை - கோவா இடையே புதிதாக இயக்கப்படும் தேஜாஸ் சொகுசு ரயிலில் பயணிகள் எல்சிடி திரைகளை உடைத்துச் சேதப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இந்தியா வின் மராட்டிய மாநிலம் மும்பை சிஎஸ்டி மற்றும் கோவாவின் கர்மாலி ஆகிய நிலையங்கள் இடையே நாட்டிலேயே முதன் முறையாகப் புதிய வசதிகள் கொண்ட தேஜஸ் சொகுசு ரயில் இயக்கப் பட்டு வருகிறது.
இந்த ரயில் போக்கு வரத்தைக் கடந்த 22ம் திகதி மும்பையில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடக்கி வைத்தார்.
இந்த ரயிலில் விமான த்தில் உள்ளது போன்ற இருக்கைகள், ஒவ்வொரு இருக்கை யின் பின்னும் அதற்குப் பின் இருப்பவர் களின் வசதிக்காக எல்சிடி திரை, ஹெட்போன் ஆகியன உள்ளன.
வைபை இணைய வசதி, தொடாமலேயே தண்ணீர் வரும் குழாய் எனப் பல்வேறு வசதிகள் உள்ள இந்த ரயில் மும்பை - கர்மாலி இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப் படுகின்றன.
முதல் பயணம் சென்று திரும்புவதற் குள்ளேயே ரயிலில் உள்ள ஹெட்போன் களைப் பயணிகள் திருடிச் சென்று விட்டனர். பல இருக்கை களின் பின்னால் உள்ள எல்சிடி திரை களையும் உடைத்து நொறுக்கிச் சேதப்படுத்தி யுள்ளனர்.
கழிவறை களைப் பயன்படுத்தி விட்டு முறையாகத் தண்ணீர் திறந்து விடாமல் அசுத்தப் படுத்தி யுள்ளனர். பயணி களின் இந்தச் செயல் பாடுகளால் ரயில்வே நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து ள்ளது.