ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டே பல்வேறு சமூக நலன் சார்ந்த காரியங்களில் ஈடுபட்டு வருகிறார், அகே ரவி கிருஷ்ணா.
இவர் ஆந்திர மாநிலத்தின், கர்னூல் மாவட்டத்தில் எஸ்.பி -யாக பணி யாற்றி வருகிறார். கடந்த ஆண்டு தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதை யடுத்து, இவரைப் பின் தொடர்ந்து பலரும், உடல் தானம் செய்ய முன் வருகி ன்றனர். குறிப்பாக, கப்பற்றலா என்ற கிராமத்தை ரவி கிருஷ்ணா தத்தெடுத் துள்ளார்.
'கப்பற்றலா' பசுமை நிறைந்த கிராமம் இல்லை. வன் முறையும், கலவரமு மாக இருந்த ஒரு கிராமம். அந்த கிராமத்தில் 21 பேர் ஆயுள் தண்டனை கைதிகள்.
ஆனால், அங்கு பல்வேறு மாற்றங் களை அவர் ஏற்படுத்தி வருகிறார். அங்குள்ள அரசுப் பள்ளியில் புதிதாக 10 அறைகள் அமைக்க, மாவட்ட கலெக்டரிட மிருந்து , 60 லட்ச ரூபாய் அனுமதி பெற்றி ருக்கிறார்.
அதே போல், சாலை வசதி உள்பட கிராமத்தின் உட்கட்ட மைப்பு வசதியை மேம்படுத்த முயற்சி எடுத்து வருகிறார்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க கண் தானம் குறித்த விழிப்பு உணர்விலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் ஒரு பாடலை வெளியிட்டு இருக்கிறார்.
ரவி கிருஷ்ணா ஏற்கெனவே அங்கு பிரபலம் என்பதால், அவரின் பாடலும் அங்கு பிரபலமாகி யுள்ளது. இதன் பிறகு சுமார் 1.5 லட்சம் பேர் கண்தானம் செய்து ள்ளனர்.