நாறுகிறது உன் கோமாதா.... குஜராத் !

குஜராத் மாநில த்தில், உனா என்ற சிறு நகரில் இந்து மதவெறிக் கும்பலொன்று தாழ்த்தப் பட்ட சாதியைச் சேர்ந்த நான்கு அப்பாவி களைக் கட்டி வைத்துக் காட்டு மிராண்டித் தனமாக தாக்கிய சம்பவம்,
நாறுகிறது உன் கோமாதா.... குஜராத் !
இந்து மதம் எனச் சொல்லப் படும் சனாதன தர்மத்தின் கொடுங் கோன்மையை, உயர்சாதி வன்மத்தை மீண்டும் அம்பலப் படுத்தியி ருக்கிறது.

அதே பொழுதில், குஜராத் தாழத்தப் பட்ட மக்கள் இந்துத்துவக் கும்பலை, ஆதிக்க சாதிவெறியை அதன் பிடரியைப் பிடித்து உலுக்கி வருகிறார்கள்.

அவர்கள் கடந்த இருபது நாட்களுக்கு மேலாக குஜராத்தில் நடத்தி வரும் போராட் டங்கள், இந்து மதவெறிக் கும்பலை ஆப்பசைத்த குரங்கு நிலைக்குத் தள்ளி விட்டிருப் பதோடு,

மோடியின் குஜராத் குறித்து பார்ப்பனக் கும்பல் சித்தரித்த உன்னதங் களின் போலித் தனத்தை, மோசடித் தனத்தைத் தோலுரித்தும் காட்டி விட்டன.

உனா தாக்குதல்

உ.பி.யில் அக்லக்கைப் படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ்.இன் கோமாதா அரசியல் தான், குஜராத்தில் தாழ்த்தப் பட்டோரின் மீது பாய்ந்து குதறியது.

பசு மாட்டைக் கொன்று அதன் இறைச் சியைப் பதுக்கி வைத்திருப் பதாகப் பழி சுமத்தி அக்லக்கைக் கொலை செய்த இந்து மதவெறிக் கும்பல், பசு மாட்டைக் கொன்று

அதன் தோலை உரித்த தாகக் காரணம் கற்பித்துத் தாழ்த்தப் பட்டோர் மீது மிருகத்தன மான தாக்கு தலை நடத்தியது.

“கௌ ரக்ஷக் தள்” என்ற சிவசேனாவைச் சேர்ந்த குண்டர் படையால் தாக்கப் பட்ட அசோக் சர்வைய்யா, வஸ்ரம் சர்வைய்யா, ரமேஷ் சர்வைய்யா, பேச்சர் சர்வைய்யா ஆகிய

நால்வரும் சமர் என்ற தாழ்த்தப் பட்ட சாதியைச் சேர்ந்த வர்கள். செத்த மாடுகளின் தோலை உரிப்பதை, இச்சாதியினரின் குலத்தொழிலாக விதித்தி ருக்கிறது,

பார்ப்பன இந்து மதம். இன்னொரு புறத்திலோ, மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதையே காரண மாகக் காட்டி மிருகத் தனமான தாக்கு தலையும் நடத்தியி ருக்கிறது.
குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில், உனா வட்டத்தில் அமைந் துள்ள மோடா சமாதியாலா கிராமத்தைச் சேர்ந்த அந்நால்வரும் கடந்த ஜூலை 11 அன்று, அருகிலுள்ள

கிராமத் திலிருந்து செத்த மாட்டைத் தமது கிராமத் திற்கு எடுத்து வந்து அதன் தோலை உரித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென அங்கு வந்த சிவசேனா இந்து மதவெறிக் கும்பல், அந்நால் வரும் பசு மாட்டைக் கொன்று

அதன் தோலை உரிப்பதாகக் கூறி அங்கேயே அந்நால் வரையும் தாக்கியது. அந்நால் வரையும் காப்பாற்ற, வேறு வழியின்றி, அவர்களின் உறவினர்கள் தமது சாதியையும்,

தமது குலத் தொழிலையும், செத்த மாட்டின் தோலைத் தான் அவர்கள் உரித்ததையும் சொல்லிச் சொல்லிக் கதறிய பிறகும், அக்கும்பல் அதை யெல்லாம்

ஒரு பொருட்டாகக் கருதாமல், அந்நால் வரையும் தமது காரில் தூக்கிப் போட்டு, அருகிலுள்ள உனா நகருக்குக் கடத்திச் சென்றது.

அங்கு நடுத்தெருவில், போலீசு நிலையத்திற்கு அருகில், பலரும் கூ டிநின்று வேடிக்கை பார்க்க, அந்நால் வரையும் அரை நிர்வாண மாக்கி,

அவர்களைக் காரோடு சேர்த்துக் கட்டிப் போட்டு, இரும்புக் கம்பி களாலும் தடிகளாலும் தாக்கியி ருக்கிறது.

அந்நால்வரில் ஒருவன் 17 வயதான சிறுவன்; இரும்புக் கம்பியால் விழும் அடியின் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர்கள் கதறிய ஒவ்வொரு முறையும்,

அடி இன்னும் பலமாக, இன்னும் வீச்சாக உடம்பில் இறங்கியி ருக்கிறது. இந்தக் கொடூர த்தை வேடிக்கை பார்த்த வர்களில் ஒருவர் கூட அதனைத் தடுக்க முன் வர வில்லை.

கூட்டத் தோடு கூட்ட மாக நின்ற போலீசு இந்த அட்டூழிய த்தைத் தடுக்க முன் வர வில்லை என்பது மட்டுமல்ல, அந்த அப்பாவி களைத் தாக்கு வதற்கு தமது லத்திக் கம்பு களையும் கொடுத்து உதவியது.

அந்த இந்து மதவெறிக் கும்பல், அதோடு அடங்கி விடாமல், சமூக த்தையே அச்சுறுத்தும் நோக்கில் தாக்குதலை முழுமை யாகப் படம் பிடித்து, இணைய த்தில் பதிவே ற்றமும் செய்து வெளி யிட்டது.

பொது சமூகத்தை அச்சுறுத்தும் நோக்கத் தோடு நடத்தப்பட்டுள்ள இப்பயங்க வாதத் தாக்குதல்,

போர்க் குணத்தோடு எதிர்த் தாக்குதல் தொடுத்துப் போராடும் உணர்வை தாழ்த்தப் பட்டவர் களிடம் உருவாக்கி விட்டது.
குஜராத் இந்து மதவெறி அரசுக்கு எதிராகத் தாழ்த்தப் பட்டோர் நடத்திய பொது வேலை நிறுத்தம் சௌராஷ்டிர பகுதியில் பெரும் வெற்றி அடைந்தி ருக்கிறது.

அப்பகுதி யில் பெரும் போலீசு படையைக் குவித்த பிறகும், பள்ளிகள், கல்லூ ரிகள், வர்த்தக நிறுவனங்கள், பேருந்து போக்கு வரத்து உள்ளிட்டு எவையும் இயங்க வில்லை.

இவ்வேலை நிறுத்த த்தின் பொழுது போர்பந்தர் நகரில் போலீசு க்கும் தாழ்த்தப் பட்டோரு க்கும் இடையே நடந்த மோதலில் 12-க்கும் மேற்பட்ட பேருந்து களும், இரண்டு போலீசு வாகனங் களும் எரிக்கப் பட்டதாக வும்;

ராஜ்கோட், சுரேந்திர நகர், ஆம்ரேலி, ஜுனாகத், அகமதாபாத், தோராஜி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், பொது வேலை நிறுத்த த்திற்கு முன்பும் பின்பும்

நடை பெற்று வரும் போராட்ட ங்களால் நகரத்தின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டிருப்ப தாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.

ஆம்ரேலி நகரில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வல த்தின் பொழுது போலீ சுக்கும் தாழ்த்தப் பட்டோருக்கும் இடையே நடந்த மோதல் 

மற்றும் கல்வீச்சுத் தாக்கு தலில் பங்கஜ்ஆ ம்ரேலியா என்ற தலைமைக் காவலர் இறந்து போனார்.

அகமதாபாத் மாவட்ட த்தில் நடந்த போராட்ட த்தைக் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஒடுக்கியது போலீசு. மெஹ்ஸானா மாவட்டத் திலுள்ள காதி நகரில் நடந்த போராட்டம் காரண மாக

அந்நகரப் பேருந்து நிலையம் இழுத்து மூடப் பட்டது. அங்கு மட்டு மின்றி, போர் பந்தர், ஜாம்நகர், ஜுனாகத் ஆகிய நகரங் களிலும் பேருந்து போக்கு வரத்து நிறுத்தப் பட்டிரு க்கிறது.

மோடியின் சொந்த ஊரான வாத் நகரில் 4,000-க்கும் மேற்பட்ட தாழ்த்தப் பட்டோர் திரண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்ட த்தில் எழவு வீடுகளில் பாடப்படும்

ஒப்பாரிப் பாடலின் ராகத்தில், “ஹாய்ரே மோடி, ஹாய் ஹாய்ரே மோடி” எனக் கிண்டலும், நக்கலும் நிறைந்த தொனியில் முழக் கங்களை இட்டு,

யாராலும் எதிர்க்க முடியாத, வல்லமை பொருந்திய வராக ஏத்தி விடப்பட்ட மோடியின் பிம்ப த்தைப் பொத்த லாக்கி விட்டனர், தாழ்த்தப் பட்ட மக்கள்.

இப்போராட்ட ங்களுக்கு அப்பால், சுரேந்திர நகர் தாழ்த்தப் பட்ட மக்களும் அமைப்பு களும் ஒன்று சேர்ந்து அம்மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தின் முன்பு செத்துப் போன மாடு களைக் கொண்டு வந்து போட்டு,

“உன்னுடைய அம்மாவை, நீயே எடுத்துப் புதைத்துக் கொள்” என முழக்க மிட்டு நடத்திய போராட்டம், இன்று ஒரு மாபெரும் இயக்க மாகவே குஜராத் மாநில மெங்கும் நடந்து வருகிறது.

நாதுபாய் பர்மர், மகேஷ்பாய் ரதோட்என்ற இரண்டு சமூக ஆர்வலர் களும், இறந்த மாடுகளை விற்று வரும் ஹீராபாய் சௌதா என்ற உள்ளூர் வணிகரும் கிராமம் கிராம மாகச் சென்று,

உள்ளூர் தாழ்த்தப் பட்ட மக்களிடம் உனாவில் நடந்த தாக்குதல் சம்பவத்தை, அதன் கொடூர த்தைக் கைபேசி மூலம் காட்டி, இந்தத் தருண த்தில் வலுவான எதிர்ப்பைக் காட்ட வில்லை யென்றால்,

பிறகு நம்மால் எழுந்து நிற்கவே முடியாது என்பதைத் தாழ்த்தப் பட்ட மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்க ளுக்கு உணர்வூட்டி, செத்த மாடுகளை எடுத்து அடக்கம் செய்ய மறுக்கும் போராட்ட த்திற்கு அணி திரட்டி யுள்ளனர்.

அவர்கள் மூவரும் உருவாக்கிய சிறு பொறி பெருங் காட்டுத் தீயாய் மாறி, குஜராத்தை ஆளும் பா.ஜ.க. கும்பலை,
நாறுகிறது உன் கோமாதா.... குஜராத் !
அதிகார வர்க்கத்தை, செத்த மாட்டை எடுத்துப் போடுவதைத் தீட்டாகப் பார்த்து வரும் ஆதிக்க சாதிக் கும்பலைச் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது.

சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாறத் தொடங்கி யதை யடுத்து, ஜூலை 18 அன்று கோண்டால் மாவட்ட அலுவல கங்களின்

முன்பாக 30 செத்த மாடுகளைக் கொண்டு வந்து போட்டு, 250-க்கும் மேற்பட்ட தாழ்த்தப் பட்டோர் அணி திரண்டு ஆர்பாட்டம் நடத்தி யுள்ளனர். காந்தி நகர், மெஹ்ஸானா, 

அகமதாபாத் ஆகிய மாவட்ட அலுவல ங்களின் முன்பும், நகர, கிராமத் தெருக்களிலும் அப்புறப் படுத்தாத செத்த மாடுகள் குவியத் தொடங்கின.

இந்த நிலையில் பேச்சு வார்த்தை நடத்திப் பிரச்சினை க்குச் சுமூகத் தீர்வு காண்பது என்ற அடிப்படை யில் தாழ்த்தப் பட்ட மக்களின் பிரதி நிதிகளை அழைத்த சுரேந்திர நகர் மாவட்ட ஆட்சியர், 

ஒவ்வொரு மாட்டுக்கும் ரூ.200/- தர ஏற்பாடு செய்வ தாகவும், மாடுகளின் தோலை உரிக்கும் தொழிலாளர் களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்வ தாகவும் கூறி, 

அத்தீண்டாமைத் தொழிலை நைச்சிய மாக தாழ்த்தப் பட்டோரின் தலை யிலேயே சுமத்த முயன்றார். 

“செத்த மாடுகளை அப்புறப் படுத்த முன்வரும் ஒவ்வொரு அதிகாரி க்கும், ஒரு மாட்டுக்கு 500 ரூபாய் நாங்கள் தருகிறோம்” எனப் பதிலடி கொடுத்து, அதிகார வர்க்க த்தின் மூக்கை அறுத்தனர், தாழ்த்தப் பட்ட மக்கள்.

உயர் அதிகாரிகள் வந்து போகும் நகரத் தெருக் களில் கிடந்த செத்த மாடுகளை ஜே.சி.பி. 

இயந்திரங் களை வைத்து அப்புறப் படுத்துவ தற்கே திணறிப் போய் நிற்கும் மாவட்ட நிர்வாகம், கிராமப் புறங்களைக் கண்டு கொள்ளவே யில்லை. 

இரண்டாயிரம் ஆண்டு களுக்கும் மேலாக, செத்த மாடுகளை அப்புறப் படுத்தும் வேலையைத் தாழ்த்தப் பட்டோர் மீது சுமத்தி வந்த 
ஆதிக்க சாதி கும்பல், இன்று அத்தீண் டாமை தன் மீதே சுமத்தப் பட்டிருப் பதைக் கண்டு, பீதி யடைந்து நிற்கிறது.

தாழ்த்தப் பட்ட மக்களை இப்படியொரு கலகத்தை நடத்த வேண்டிய நிலை க்குத் தள்ளியது உனாவில் நடந்த சம்பவம் மட்டுமல்ல. 

மோடியின் குஜராத் எந்தள விற்கு கார்ப்ப ரேட்டுகளின் வளர்ச் சியைச் சாதித்ததோ, அதற்கு இணையாக சமூக ஒடுக்குமுறைகளின் களமாகவும் விளங்குகிறது.

இந்துத்துவத்தின் தலித் வெறுப்பு

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளி யிட்டுள்ள புள்ளி விவரங் களின்படி, 2012 மற்றும் 2013 ஆண் டுகளில் தாழ்த்தப் பட்டோர் மீது நடத்தப் பட்ட கொலை 

மற்றும் பாலியல் வன் கொடுமை குற்றங் களில் இந்தியா விலேயே குஜராத் தான் முதல் மாநிலமாக இருந்தி ருக்கிறது.

குஜராத் தின் தாழ்த்தப் பட்ட மக்கள் மத்தியில் இயங்கி வரும் நவ்சர்ஜன் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2010-ம் ஆண்டில், 1,569 கிராமங் களில், 98,000 பேரிடம் நடத்திய ஆய்வு களின்படி, 

குஜராத்தில் 98 வகை யான தீண்டாமைக் குற்றங்கள் கடைப் பிடிக்கப் படுவதை ஆதாரங் களோடு நிறுவியி ருக்கிறது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு களில் கடைப் பிடிக்கப் படும் தீண்டாமை யின் காரண மாகத் 

தாழ்த்தப் பட்ட மக்கள் தமக்கு விதிக்கப் பட்ட குலத் தொழிலையே செய்ய வேண்டிய நிலையில் கட்டாய மாக இருத்தப் பட்டிருப் பதையும், 

சௌராஷ்டிரப் பகுதியில் உள்ள பள்ளிக் கூடங் களில் தாழ்த்தப் பட்ட மாண வர்கள் தான் கக்கூஸைக் கழுவுமாறு நிர்பந்தி க்கப்படு வதையும்; 

குஜராத்தின் 54 சதவீதப் பள்ளிக் கூடங்களில் தாழ்த்தப் பட்ட மாண வர்கள் தனியாக அமர்த்தப் படும் தீண்டாமை நிலவு வதையும் இந்த ஆய்வு அம்பலப் படுத்தியிரு க்கிறது.

இந்திய அளவில் பதியப் படும் தீண்டாமைக் குற்றங் களில் 23.8 சதவீத வழக்குகளில் தான் குற்ற வாளிகள் தண்டிக்கப் படுகின்றனர். 

குஜராத்திலோ குற்ற வாளிகள் தண்டிக்கப் படும் இந்த எண்ணி க்கை தேசிய சராசரியை விட மிகக் குறைவாக, 6 சதவீதமாக (2015-ல்) உள்ளது. இது, 2013-ல் 2.5 சதவீதமாகவும், 2014-ல் 3.5 சதவீத மாகவும் இருந்தது.
தேசிய சராசரியை விடத் தண்டிக்கப் படுவோரின் எண்ணிக்கை மிகக் குறை வாக இருப்ப தற்கான காரணம், அந்த மாநிலமும் 

அதன் அரசும் நீண்ட கால மாகவே ஆதிக்க சாதிவெறி யர்களின் சொர்க்க பூமியாக இருந்து வருவது தான். பா.ஜ.க.வின் ஆட்சி இந்த நிலைமையை இன்னும் தீவிர மாக்கியிரு க்கிறது.

அக்டோபர் 2012-ல் சுரேந்திர நகர் மாவட்டத் திலுள்ள தாங்கத் எனும் ஊரில் தாழ்த்தப் பட்டோரு க்கும், 

பர்வாத் எனும் மேல் சாதியினரு க்கும் நடந்த மோதலை ஒடுக்கு வதற்காக நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு தாழ்த்தப் பட்டோர் கொல்லப் பட்டனர். 

இது குறித்த விசாரணை அறிக்கையைக் கூட வெளியிட மறுத்து வரும் குஜராத் அரசு, 

அதற்கு, “அறிக்கையை வெளி யிடுவது தேசத்தின் இறை யாண்மை க்கும் ஒருமைப் பாட்டிற்கும் ஊறு விளை விக்கும்” என்ற புளுகுணித் தனமான காரண த்தைக் கூறி வருகிறது.

இத்துப் பாக்கிச் சூடு நடந்த பொழுது, துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தி லிருந்து வெறும் 12 கி.மீ. தூரத்தில் தான் நரேந்திர மோடி இருந்தார். 

ஆனாலும், அவர் பாதிக்கப் பட்ட மக்களைச் சந்திக்க வர வில்லை. உனா சம்பவத் திற்கும் மௌனம் தான் அவரது எதிர் வினையாக இருக்கிறது.
நாறுகிறது உன் கோமாதா.... குஜராத் !
முசுலீம் தீவிர வாதிகள் கொஞ்சம் பலமாகக் குசு விட்டால் கூட, அதனைக் கண்டித்து டுவிட்ட ரிலும், முகநூலிலும் வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் கருத்து கந்த சாமியான மோடி, 

உனா சம்பவத்தை வாயளவில் கூட கண்டிக்க மறுப்ப தற்குப் பொருள் இல்லாமல் இல்லை. 

அவரது இந்த மௌனம் தாழ்த்தப் பட்டோர் மீது அவரு க்குள்ள வெறுப்பையும் காழ்ப் புணர்ச்சி யையும், அதாவது இந்துத்து வத்தின் உண்மை யான உணர்ச் சியையே வெளிப் படுத்துகிறது.

இந்த அடக்கு முறையும் நீதி மறுக்கப் படும் சமூக நிலைமையும் தான் தாழ்த்தப் பட்டோரைக் கலகத்தில் இறங்க வைத்தி ருக்கிறது. 

இருபது க்கும் மேற்பட்ட தாழ்த்தப் பட்டோரை விஷத் தையும், திராவக த்தையும் குடித்து உயிரை விடும் நிலைக்குத் தள்ளி, அவர்களுள் இரண்டு பேரின் உயிரை அநியாய மாகப் பறித்தி ருக்கிறது. 

பா.ஜ.க வோ, மற்ற மாநிலங் களில் தாழ்த்தப் பட்டோர் மீது நடக்கும் தாக்குதல் களைப் பட்டிய லிட்டுக் காட்டுவதன் மூலம், தன்னை யோக்கிய வானாகக் காட்டிக் கொள்ள முயலுகிறது.

உனாவில் தாழ்த்தப் பட்டோர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுள் சிலர் கைது செய்யப் பட்டிருக் கிறார்கள். 
இந்தத் தாக்கு தலுக்கு உடந்தை யாக நின்ற இரண்டு போலீசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டிருக் கின்றனர் என்பது உண்மை தான். 

ஆனால், இந்தக் கணக்குக் காட்டும் நடவடி க்கைகள் கூட, தாழ்த்தப் பட்ட மக்கள் போராடத் தொடங்கிய பிறகு, பத்து பன்னிரெண்டு தாழ்த்தப் பட்டோர் விஷம் அருந்தி சாகத் துணிந்த பிறகு, 

இத்தாக்கு தலுக்கு எதிராக நாடெங்கும் கண்ட னங்கள் வலுத்து இந்து மதவெறிக் கும்பல் சந்தி சிரித்துப் போன பிறகுதான் எடுக்கப் பட்டன.

குற்ற வாளிகள் கைது செய்யப் பட்டிருக்கி றார்கள், வழக்குப் பதிவு செய்யப் பட்டிருக் கிறது என்பதாலேயே பா.ஜ.க. அரசு நீதி வழங்கி விட்டதாக எடுத்துக் கொள்ள முடியுமா? 

தாழ்த்தப் பட்ட மாணவர் ரோஹித் வெமுலாவைத் தற்கொலை க்குத் தள்ளிய விவகார த்தில் கூட, அவர் தற்கொலை செய்து கொண்ட சமயத்தில் ஹைதராபத் பல்கலைக் கழக 

துணை வேந்தராக இருந்த அப்பா ராவ், மைய அமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா உள்ளிட்ட சிலர் மீது வன் கொடுமை வழக்குப் பதியப் பட்டது. ஆனால், அதன் பிறகு நடந்தது என்ன?

போராட்ட த்தின் வீச்சு தணிந்த பிறகு, மீண்டும் அப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக அப்பாராவ் நியமிக்கப் பட்டார். 

இதற்கு எதிராக மீண்டும் மாணவர் கள் போராடிய பொழுது, மாணவர்கள் மீதும், பேராசிரி யர்கள் மீதும் போலீசு தாக்கு தலும், வழக்கும் பாய்ந்தது. 

இதே போன்று உனா தாக்குதல் தொடர்பான வழக்கிலும் முதுகில் குத்த பா.ஜ.க. தயங்காது.

மற்ற மாநிலங் களிலும் தாழ்த்தப் பட்டோர் மீது கொடூர மான தாக்கு தல்கள் நடை பெறுவதை மறுக்க முடியாது தான். 

ஆனால், ஆர்.எஸ்.எஸ் சாதிப் படிநிலையை, ஆதிக்க சாதியினரின் சிறப்புரிமை களை, கருவறை தீண்டாமை தொடங்கி சமூகத் தீண்டாமை உள்ளிட்ட அனைத்து 

இழிவு களையும் கொள்கை ரீதியாகவே ஆதரிக்கும் அமைப்பு களாக உள்ளன. அனைத்துச் சாதியினரும் அர்ச்சக ராகும் வழக்கு, 

இட ஒதுக்கீடு எதிர்ப்பு, பசு இறைச்சி உண்ப தற்குத் தடை உள்ளிட்டு இதற்கு அநேக உதாரண ங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மகாராஷ்டி ராவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பன ர்களிடம் கருவாகி, மகாராஷ்டிரா வின் பேஷ்வா மன்னர்கள் உள்ளிட்ட 

வட இந்திய பிற்போக்கு நிலப்பிரபுத் துவ மன்னர் பரம்பரை களால் ஆதரிக்கப் பட்ட ஆர்.எஸ்.எஸ் இன் கொள்கை வருண வியவ்ஸ்தா எனப்படும், வருண வேறுபாடு களையும் ஏற்றத் தாழ்வு களையும் பாதுகாப்பது தான்

1980- களுக்குப் பின்னர், தனது ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தி ற்காகவும், முசுலீம் எதிர்ப்புக் கலவர ங்களில் காலாட் படையாகப் பயன் படுத்திக் கொள்வ தற்காகவும் தான் தாழ்த்தப் பட்டோரையும், 

பழங் குடியின மக்களையும் ஆர்.எஸ்.எஸ், இந்து வாக அடையாளப் படுத்து வதில் தீவிரம் காட்டத் தொடங்கியது. 

எனினும் அவர்களை ஆதிக்க சாதி இந்துக் களுக்கு இணை யாக ஆர்.எஸ்.எஸ். என்றுமே கருதிய தில்லை. 

மகாராஷ் டிராவில் மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப் பட்டதற்கு 

எதிராக சிவசேனா நடத்திய கலவரம் தொடங்கி இன்று உனாவில் நான்கு தாழ்த்தப் பட்டோர் தாக்கப் பட்டது வரை இதற்குப் பல உதார ணங்கள் உண்டு.

தாழ்த்தப் பட்டோரும் முசுலீம் களும் இந்து தேசத்தில் இரண்டாம் தர குடிமக் களாகத் தான் இருக்க முடியும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.− இன் கருத்து. 

அவர்கள் அதனை மீறும் பொழு தெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.- இன் இந்து ஒற்றுமை பசப்பல்கள் மறைந்து அதன் உண்மை முகம் தெரிய வருகிறது.

ரோஹித் வெமுலா வின் தற்கொலையை யடுத்து நாடெங்கும் இந்து மதவெறிக் கும்பலுக்கு மாணவர் களும் அறிவுத் துறையினரும் நடத்திய போராட்ட த்தையும், 

இன்று குஜரா த்தில் இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராகத் தாழ்த்தப் பட்டோர் நடத்தி வரும் போராட் டங்களும் இலக்கில் ஒன்றாக இருந் தாலும், 

முந்தை யதைவிட குஜரா த்தில் நடைபெறும் போராட்டம் அதிமுக்கிய த்துவம் உடையதாகும்.

மற்ற வட இந்திய மாநிலங் களைவிட, குஜராத் தான் ஆர்.எஸ்.எஸ்.-இன் இரும்புக் கோட்டை யாக இருந்து வந்திரு க்கிறது. 

1980-களில் இட ஒதுக்கீடுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் ஆதிக்க சாதியி னரைத் திரட்டிக் கொண்டு, தாழ்த்தப் பட்டோரை இலக்காக வைத்து நடத்திய கலவர ங்களும்; 

2002-இல் மோடியின் தலைமை யில் நடத்தப்பட்ட முசுலீம் இனப் படுகொலை யும் ஆர்.எஸ்.எஸ்.-இன் பிடியை இன்னும் வலு வாக்கியிருக் கின்றன.

அப்படிப் பட்ட மாநில த்தில், அம்மாநிலத் தின் மொத்த மக்கட் தொகை யில் மிகக் குறைவாக இருக்கும் (7.1 சதவீதம்) தாழ்த்தப் பட்டோர், 

உட்சாதிப் பிரிவு களைக் கடந்து இந்து மதவெறிக் கும்பலு க்கு எதிராக ஒன்று திரண்டு போராடு வதும், செத்த மாடுகளை அப்புறப் படுத்த மறுத்து கலகத்தில் இறங்கி யிருப்பதும் அசாதாரண மான ஒன்று.
உழவுக்குப் பயன் படாத காளை களையும், பால் வற்றிப் போன பசுக் களையும் கொல்லக் கூடாது; அதன் கறியை உண்ணக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் ஃபத்வா,  

பொருளாதார ரீதியில் தற்கொலை க்கு ஒப்பானது. மாடு வளர்ப் பதைத் துணைத் தொழிலாகக் கொண்டுள்ள விவசாயி களுக்கு எதிரானது.

எனவே, ஆர்.எஸ்.எஸ்.- இன் பசு பாதுகாப்பு என்ற பார்ப்பன - பாசிச அரசிய லுக்கு எதிராக 

இன்று குஜராத் தாழ்த்தப் பட்ட மக்கள் நடத்தி வரும் கலகம், ஏதோ அவர்களின் பிரச்சினை க்காக நடப்பதைப் போலச் சுருக்கிப் பார்த்து விட முடியாது. 
நாறுகிறது உன் கோமாதா.... குஜராத் !
அது கோடிக் கணக்கான இந்திய விவசா யிகளின் நலனையும் உள்ளட க்கியிரு க்கிறது. ஆனாலும், இப்போரா ட்டத்தை அவர்கள் மட்டுமே நடத்தும் நிலை யில் இருத்தப் பட்டிருக் கிறார்கள்.

அவர்களின் உழைப்பால் பலன் அடைந்து வரும் சாதி இந்துக் களும், மற்ற மதங்களைச் சேர்ந்த வர்களும் அவர்களுடைய போராட்டத்தில் உள்ள நியாய த்தைப் பார்க்க மறுத்து, 

ஒதுங்கி நிற்கி றார்கள். இந்த மனசாட்சி யற்ற பாரா முகமும், மறைமுக ஆதரவும் தான் பார்ப்பன மதவெறிக் கும்பலுக்கு பலம் சேர்க்கிறது. – குப்பன்
Tags:
Privacy and cookie settings