தெலுங்கானா மாநிலம் ஐதரா பாத்தை சேர்ந்த சாயிரா பானு(23). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த உமருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த கையோடு உமர் சவுதி அரேபியா வில் உள்ள ரியாத்தில் பணியாற்றச் சென்று விட்டார்.
அவன் விடு முறைக்கு வீட்டுக்கு வரும் போது எல்லாம், சாயிர பானுவை அடித்துத் துன்புறுத்தி வந்து ள்ளான்.
இந்த நிலையில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு போனில் பேசிய உமர் நீ என்னுடன் இங்கு வந்து விடு நாம் இருவரும் சந்தோச மாக வாழலாம் என்று கூறி யுள்ளான்.
உனக்கு விசா வேண்டும். அதற்காக இங்கு உள்ள ஷேக் ஒருவர் வீட்டில் வேலைக்கு எடுப்பது போல விசா அனுப்பு கிறேன்.
அங்கு ஒரு மாதம் மட்டும் வேலை செய் பின்பு நீனும், நானும் சேர்ந்து வாழலாம் என்று ஆசை வார்த்தை கூறி யுள்ளான்.
கணவனே கண் கண்ட தெய்வம் என்று நம்பும் இந்திய பெண்ணான அவர் கணவன் கூறியபடி ஐதராபாதை சேர்ந்த ஒரு புரோக்கரை சென்று பார்த்து ள்ளார் சாயிரா.
பின்னர் அந்த புரோக்கர் போலி பாஸ்போர்ட் எடுத்துத் தந்துள்ளார். கடந்த 2ம் தேதி ரியாத் சென்ற டைந்தார் சாய்ரா பானு.
உமர் விமான நிலை யத்தில் பிக்கப் செய்துள்ளார். பின்னர் சாயிராவை அழைத்துக் கொண்டு ஒரு ஷேக் வீட்டில் விட்டுள்ளார்.
ஆனால் அங்கு அந்த ஷேக் சாயிரா வுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதில் மனம் நொந்து போன சாயிரா கணவர் உமருக்கு போன் செய்து, ஷேக் பாலியல் தொந்தரவு செய்வ தாக கூறி யுள்ளார். அதற்கு உமர் நான் உன்னை அந்த ஷேக்கிற்கு விற்று விட்டேன்.
இனி நீ அவர் சொல்வதைப் போல நடந்து கொள். நான் உன்னை விவாகரத்து செய்வதாகக் கூறி போனிலேயே தலாக் கூறி யுள்ளார்.
இதனை யடுத்து நடந்த சம்பவத்தை சாயிரா பானு ஐதராபத்தில் உள்ள தனது தாயாரு க்குத் தெரிய படுத்தி யுள்ளார்.
சாய்ரா வின் தாய் பானுபேகம் ஐதராபாத் போலீசில் புகார் செய் துள்ளார். அந்தப் புகாரில் ரியாத்தில் உள்ள தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு மகளை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை மனுவும் அளித்துள்ளார்.