சசிகலாவை சந்தித்த கருணாஸ் விளக்கம் !

தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியை, க்ரீன்வேஸ் சாலையிலுள்ள அவரது இல்லத்தில், எம்எல்ஏ கருணாஸ் சந்தித்தார்.
சசிகலாவை சந்தித்த கருணாஸ் விளக்கம் !
இந்தச் சந்திப்புக்குப் பின் கருணாஸ் செய்தியா ளர்களிடம் கூறுகையில், "வறட்சியால், குடிநீர்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதற்கு, உடனடி யாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தேன். 

வறட்சி காரணமாகப் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், எம்எல்ஏக்களுக்கு வழங்கப்படும் நிதி போதவில்லை. எனவே, கூடுதலாக நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அரசு சிறப்பாகச் செயல் பட்டு வருகிறது. ஜெயலலிதா எப்படியோ அப்படித் தான் சசிகலாவும். 

இதனால், அவரைக் கூட்டணிக் கட்சி எம்எல்ஏ என்ற முறையில், மரியாதை நிமித்தமாக சிறையில் சந்தித்தேன். இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும். 
ஆனால், சசிகலாவை நீக்க வேண்டும் என்ற பன்னீர் செல்வம் அணியின் கோரிக்கையில் எனக்கு உடன் பாடில்லை.

குறிப்பாக, அ.தி.மு.க அலுவல கத்திலிருந்து, சசிகலா வின் பேனர்களை அகற்றியதில் எனக்கு உடன் பாடில்லை என்று கூறினார்.
Tags:
Privacy and cookie settings