உலகில் வளர்ச்சி யடைந்த நாடுகளில் கட்டப்பட்டு இருக்கும் மிகப்பெரிய உயரமான கட்டிடங்கள் பூமியின் சமநிலைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி யுள்ளதாக ஒரு ரகசிய சர்வே ஆய்வுகள் சொல்லி இருக்கிறது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மிகப் பெரிய கட்டிடங்கள் தொடர்பாக நுட்பதிறன் ஆய்வுக் குழு மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
2009ம் ஆண்டு நிர்மாணிக்கப் பட்ட சான் பிரான்சிஸ்கோ மில்லேனியம் டவர் ஒரு அடியும் நான்கு அங்குலமும் பூமிக்குள் இறங்கியுள்ளது.
மேலும் பல பெரிய கட்டிடங்கள் இவ்வாறு பூமிக்குள் இறங்கி வருவதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 350 மில்லியன் டாலர் செலவில் இந்த பெரிய ஆடம்பர கட்டிடம் கட்டப் பட்டது.
கட்டிடம் படிப்படியாக பூமிக்குள் இறங்கி வருவதாக கண்டறியப் பட்டுள்ளது. இதனடிப் படையில், ஆபத்தான கட்டிடங்களை வகைப் படுத்த ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
துபாயில் கடந்த சில ஆண்டு களில் கட்டி முடிக்கப் பட்ட கட்டிடங்க ளும் இந்த ஆபத்து வளையத்தில் இருக்கிறது என்கிறார்கள்.
ஒரு அளவிற்கு மேல்தான் பூமிக்குள் இறங்கும் அதற்கு மேல் ஏதாவது ஒரு தளம் நோக்கி சாய ஆரம்பிக்கும் என்று அச்சம் கொடுக்கிறது அந்த ஆய்வு.
அப்படி தரைமட்டம் ஆனால் மிக அதிக அளவில் உயிர்ப் பலிகள் இருக்கும் என்று அஞ்சுகிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள்.
அடக் கடவுளே..!