8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, முதல் நாள் சந்திப்பின் போது பேசிய அரசியல் தொடர் பான பரபரப்பு பேச்சு இன்னும் ஓய்ந்த பாடில்லை.
நான் என்ன ஆக வேண்டும் என்பது, இறைவன் கையில் உள்ளது. ஒரு வேளை அரசியலு க்கு வரும் சூழல் உருவானால், பணம் சம்பாதிக்க நினைப் போரை என் அருகே கூட சேர்க்க மாட்டேன்" என்றார்.
ரஜினியின் இந்த பேச்சு மீண்டும் அவரை அரசிய லுக்குள் இழுத்து வந்துள்ளது. டிவி., சமூக வலை தளங்கள் என இது தொடர்பான விவாதங்கள் போய் கொண்டு இருக்கின்றன.
இந்நிலை யில் தொடர்ந்து 4வது நாளாக ரசிகர்களை இன்று(மே 18-ம் தேதி) சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத் தில் சந்தித்தார் ரஜினி. சரியாக காலை 9.20 மணிக்கு ரசிகர்களை சந்தித்து புகைப் படம் எடுத்து கொண்டார்.
இன்று பாண்டிசேரி, கடலூர், தஞ்சாவூரை சேர்ந்த ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இன்று ரஜினியை சந்திக்க வந்த ரசிகர்கள் பலர், தாங்கள் கொண்டு வந்த செயின், ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலை, மோதிரம் போன்ற வற்றை
ரஜினி கையால் அணிவிக்க சொன்னார்கள், ரஜினியும் அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அணிவித்தார்.
கடலூரைச் சேர்ந்த சி.டி முத்து என்பவர் தான் கைலாஷ் சென்று வந்த போது வாங்கி வந்த ருத்ராட்ச மாலையை ரஜினிக்கு பரிசாக வழங்கினார்.
நாளையுடன் ரசிகர்கள் சந்திப்பு முடிவடை கிறது. ரசிகர்கள் சந்திப்பை முடித்து விட்டு வீடு திரும்பிய ரஜினி செய்தி யாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ரஜினி, "ரசிகர் களுக்கு வயதாகி விட்டாலும் ரசிகர் களிடம் முன்பு இருந்த அதே ஆர்வம் இன்றும் குறையாமல் இருப்பது மகிழ்ச்சி. இந்த சந்திப்பை என்னால் மறக்க முடியாது.
ரசிகர்கள் உடனான அடுத்த சந்திப்பு குறித்த தேதி விரைவில் அறிவிக்க ப்படும். ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ளு ங்கள், கெட்ட பழக்கத்தை விட்டு விடுங்கள் என்றார்.
தொடர்ந்து அவரிட த்தில் அரசியல் தொடர்பான கேள்வி முன் வைக்கப் பட்ட போது, அரசியல் தொடர்பான கேள்வி வேண்டாம் என்று கூறி விட்டார்.